search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகை நாளில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை
    X

    தீபாவளி பண்டிகை நாளில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை

    போனஸை வலியுறுத்தி தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #MadrasHC #108Ambulance
    சென்னை:

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் போனஸ் தொகை கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து வருகின்றனர்.

    இந்த போராட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரித்து, ஐகோர்ட்டும் ஒவ்வொரு ஆண்டும் போராட்டத்துக்கு தடை விதித்து வருகிறது.

    அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஐகோர்ட்டு இந்த ஆண்டும் தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 950 உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை, 2 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றன.

    இந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு 30 சதவீத போனஸ் வேண்டும் என்றும் தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 30 சதவீத போனஸ் தொகை கேட்டு வருகிற 5-ந்தேதியும் அதற்கு மறுநாளான தீபாவளி நாளிலும் (6-ந்தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.


    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு அத்தியாவசியமானது. தீபாவளி அன்று வெடிவிபத்து ஏற்படும்போது, பாதிக்கப்படுபவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை அத்தியாவசியமானது. எனவே, இவர்களது வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இன்று விசாரித்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHC #108Ambulance
    Next Story
    ×