search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plane crash"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது.
    • உயிரிழந்த இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி.

    நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தின் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 72 பேரும் பலியானார்கள்.

    இந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகியோரும் இருந்தனர். இவர்களில் 4 பேர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த நிலையில் நேபாள விமான விபத்தில் இறந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்த இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.

    பகவான் ஸ்ரீராமரின் புனித பாதங்களில் மறைந்த ஆத்மாக்களுக்கு இடம் கொடுக்கட்டும். இறந்தவர்களின் உடல்களை உத்தரபிரதேசத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • விமான விபத்து தொடர்பாக விசாரிக்க 5 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • விபத்தை தொடர்ந்து பொக்காரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமானங்கள் புறப்பாடு, வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    காட்மாண்டு:

    நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று காலை 10.33 மணிக்கு 'எட்டி ஏர்லைன்ஸ்' விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர்.

    அந்த விமானம் காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. பொக்காரா புதிய விமான நிலையம் கடந்த 1-ந்தேதி தான் திறந்து வைக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் மோசமான வானிலையும் நிலவியது.

    இதற்கிடையே தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. நதிக்கரை மற்றும் மலைப்பிரதேசத்தில் விமானம் விழுந்ததால் உடனயாக மீட்பு பணிகளை தொடங்க முடியவில்லை.

    இந்த நிலையில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் போராடி விமானத்தில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே விமான விபத்து தொடர்பாக நேபாள அமைச்சரவையின் அவசர கூட்டத்துக்கு அந்நாட்டு பிரதமர் புஷ்பகமல் தகால் அழைப்பு விடுத்தார். அத்துடன் நாட்டின் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    இதையடுத்து விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. விமான விபத்தில் விமானத்தின் பாகங்கள் எரிந்து ஆங்காங்கே சிதறி காணப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த பயணிகளின் உடல்களும் கருகியபடி ஆங்காங்கே காணப்பட்டது.

    இந்த விமான விபத்தில் 68 பேர் இறந்ததாக முதலில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.

    விமானத்தில் இருந்த 68 பயணிகள், 4 ஊழியர்கள் என 72 பேருமே இறந்து விட்டதாகவும் யாரையும் உயிருடன் மீட்கவில்லை எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதற்கிடையே இரவானதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று காலையில் மீண்டும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

    இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மீதமுள்ளவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    விபத்துக்குள்ளான விமானத்தில் நேபாளத்தை சேர்ந்தவர்களை தவிர 10 வெளிநாட்டவர்கள் இருந்தனர். அவர்களில் 5 பேர் இந்தியர்கள் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 5 இந்தியர்கள் அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில்குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் 4 பேர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 ரஷியர்கள், 3 கொரிய நாட்டினர், அர்ஜென்டினா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் விமானத்தில் இருந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து உடல்களை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த விமான விபத்து சம்பவத்துக்கு நேபாள பிரதமர் புஷ்பகமல் தகால் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

    விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேபாளத்தில் இன்று ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    விமான விபத்து தொடர்பாக விசாரிக்க 5 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து பொக்காரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமானங்கள் புறப்பாடு, வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான பயணத்தை அதில் பயணம் செய்த சிலர் பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளனர். அதில் விமானம் விபத்தில் சிக்குவதும், விமானம் தீப்பிடிக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

    காத்மாண்டு:

    நேபாளத்தில் பொக்காரா விமான நிலையம் நோக்கி 72 பேருடன் சென்ற விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, விமான நிலையத்தின் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேபாள விமானம், கட்டுப்பாட்டை இழந்து பலத்த சத்தத்துடன் தரையை நோக்கி பாய்ந்து வரும்போது பதிவு செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது.

    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பயணித்துள்ளனர்

    காத்மாண்டு:

    நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 72 பேருடன் பொக்காரா விமான நிலையத்திற்கு வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. விமானம் தரையிறங்குவதற்கு விமான நிலையத்தை நெருங்கியபோது, சேதி ஆற்றின் கரையில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீப்பற்றி கரும்புகை எழுந்ததால் மீட்பு பணி கடும் சவாலாக உள்ளது. இன்று மாலை நிலவரப்படி 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.

    விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பிரதமர் புஷ்ப கமல் தால் பிரசந்தா அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேபாள அரசு நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கிறது.

    விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    விமானத்தில் பயணித்தவர்களில் 53 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மின்கோபுரத்தில் சிக்கிய விமானத்தை மீட்கும் பணி நடைபெறுகிறது.
    • 2 நபர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உயர்அழுத்த மின் கோபுரத்தின் மீது குட்டி விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மேரிலேண்ட் மாநிலம் மோன்ட்கோமெரி பகுதியில் இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    அந்த விமானம் நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து மோன்ட்கோமெரி விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக விபத்தில் சிக்கி உள்ளது. இதனால் 100 அடி உயரத்தில், மின் கோபுரத்தில் விமானம் தொங்கிக்கொண்டிருந்தது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது. வீடுகள், தெருக்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.

    விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலையில் விமானத்தில் இருந்த 2 நபர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மின்கோபுரத்தில் சிக்கிய விமானத்தை மீட்கும் பணி நடைபெறுகிறது. மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் சீரடைந்துள்ளது.

    • விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
    • 2ம் உலக போர் விமானங்களின் வான்சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்க கூடும்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் 2ம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இதில் பங்கேற்ற, பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறந்து சென்றன.

    இந்த இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து சென்றபோது, நடுவானில் திடீரென மோதி விபத்தில் சிக்கின. இந்த சம்பவத்தில் நேராக முன்னோக்கி சென்ற போயிங் விமானத்தின் மீது அதன் இடதுபுறத்தில் சென்ற சிறிய விமானம் மோதி உள்ளது.

    இரண்டு விமானங்களும் விபத்தில் துண்டுகளாக உடைந்து சிதறின. தொடர்ந்து தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்வையாளர்களாக இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து உள்ளனர்.

    விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை என டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து விமான படையை சேர்ந்த பெண் செய்தி தொடர்பாளர் லீ பிளாக், ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "போயிங் ரக விமானத்தில் 5 பேர் மற்றும் சிறிய விமானத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேர் பயணித்து உள்ளனர் என நம்பப்படுகிறது என கூறியுள்ளார். இதனால், இந்த 2ம் உலக போர் விமானங்களின் வான்சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்க கூடும்" என அஞ்சப்படுகிறது.

    விமான விபத்து வீடியோக்கள் மனது நொறுங்கும் வகையில் உள்ளன. நமது குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவும், அதுபற்றிய கல்வியறிவை புகட்டுவதற்காகவும் விண்ணுக்கு பறந்து சென்றவர்களின் ஆன்மாவுக்காக வேண்டி கொள்ளுங்கள் என மேயர் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.

    • மழை பெய்து கொண்டிருந்தபோது விமானம் ஏரிக்குள் விழுந்து மூழ்கியது.
    • 26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்

    டார் எஸ் சலாம்

    தான் சானியாவில் நாட்டில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து வட மேற்கு நகரமான புகோபா நோக்கி சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட மொத்தம் 43 பேர் இருந்தனர்.

    புகோபாவை விமானம் நெருங்கிய நிலையில் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது மழை பெய்துக் கொண்டிருந்ததால் விமானம் தண்ணீருக்குள் முழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

    26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது என தான் சானியா பிரதமர் காசிம் மஜலிவா தெரிவித்துள்ளார். விமானம் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்த போது, மோசமான வானிலையால் விபத்தை சந்தித்தது என்று போலீஸ் கமாண்டர் வில்லியம் மவாம்பகலே தெரிவித்தார்.

    • லிமோன் நகருக்கு வந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது.
    • விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்

     லிமோன்:

    மெக்சிகோவிலிருந்து கோஸ்டாரிகா நாட்டின் லிமோன் விமான நிலையத்திற்கு ஐந்து ஜெர்மன் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிய ரக விமானம், கோஸ்டாரிகா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானது. ரிசார்ட் நகரமான லிமோனுக்குச் வந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனதாக, கோஸ்டாரிகா பாதுகாப்பு அமைச்சர் டோரஸ் தெரிவித்தார்.

    ஒன்பது இருக்கைகள் கொண்ட இத்தாலி தயாரிப்பான அந்த விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கோஸ்டாரிகா அதிகாரிகள் தெரிவித்தனர். விமான பயணிகள் குறித்த தேடுதல் நடவடிக்கை உடனடியாக தொடங்கிய நிலையில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்த விபத்தில் ஜெர்மன் தொழிலதிபர் உள்பட 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை எந்த உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கோஸ்டாரிகாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் மார்ட்டின் அரியாஸ் கூறினார்.

    • கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் விபத்திற்குள்ளானது.
    • இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    ஏதென்ஸ்:

    உக்ரைனைச் சேர்ந்த விமான நிறுவனத்தின் அன்டனோவ் சரக்கு விமானம் செர்பியாவில் இருந்து ஜோர்டான் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

    விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அருகிலுள்ள கவலா விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    ஆனால் விமான நிலையத்திற்கு 40 கி.மீட்டருக்கு முன்பே அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக செர்பிய அரசு தெரிவித்தது.

    இந்நிலையில், சரக்கு விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய விமானம் நீண்ட நேரம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைத்தனர்.

    • கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் விபத்திற்குள்ளானது.
    • இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

    ஏதென்ஸ்:

    உக்ரைன் நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றின் ஆன்டனோவ் ரக சரக்கு விமானம் செர்பியாவில் இருந்து புறப்பட்டு ஜோர்டான் நோக்கி சென்றது.

    இந்நிலையில், விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள கவலா விமான நிலையத்தில் தரையிறக்க விமானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்திற்கு 40 கி.மீ. தொலைவு முன்பே அந்த விமானம் விபத்தில் சிக்கியது என கிரீஸ் நாட்டு விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர், என்ன வகை சரக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற தகவல்கள் தெரியவில்லை.

    விமானத்தில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    துபாய் விமான நிலையத்தின் அருகே குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் இயங்கவில்லை.
    துபாய்:

    துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான ‘ஹனிவெல்’லுக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேரும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர்.

    விமான நிலையத்தின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சில வினாடிகளில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    உடனே அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.



    இந்த விபத்து காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் சிறிது நேரம் இயங்கவில்லை. அதே நேரத்தில் சில விமானங்கள் வேறு மார்க்கமாக இயக்கப்பட்டன. நிலைமை சீரடைந்ததும் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    விமான விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்தில் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    லண்டன்:

    இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானியும், ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாழ்வாக பறந்த விமானம் மின்கம்பிகளின் மீது உரசியது.

    இதையடுத்து, விமானத்தை அருகில் உள்ள இருவழி சாலையில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்தார். ஆனால் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதற்கிடையில், அந்த வழியாக காரில் வந்த ராணுவ வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரி ஜோயல் ஸ்நார் என்பவர் சாலையில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் சற்றும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு, விமானத்துக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டார். அவர்கள் மீட்கப்பட்ட சில நொடிகளில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. ஜோயல் ஸ்நாரின் துரித நடவடிக்கையால் அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் பலத்த காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    ×