என் மலர்
உலகம்

விமான விபத்து
கிரீஸ் நாட்டில் விபத்தில் சிக்கியது உக்ரைன் நாட்டு சரக்கு விமானம்
- கிரீஸ் நாட்டின் வடக்கே உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் விபத்திற்குள்ளானது.
- இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை.
ஏதென்ஸ்:
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனம் ஒன்றின் ஆன்டனோவ் ரக சரக்கு விமானம் செர்பியாவில் இருந்து புறப்பட்டு ஜோர்டான் நோக்கி சென்றது.
இந்நிலையில், விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள கவலா விமான நிலையத்தில் தரையிறக்க விமானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்திற்கு 40 கி.மீ. தொலைவு முன்பே அந்த விமானம் விபத்தில் சிக்கியது என கிரீஸ் நாட்டு விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர், என்ன வகை சரக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற தகவல்கள் தெரியவில்லை.
விமானத்தில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Next Story






