search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanzania"

    • மழை பெய்து கொண்டிருந்தபோது விமானம் ஏரிக்குள் விழுந்து மூழ்கியது.
    • 26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்

    டார் எஸ் சலாம்

    தான் சானியாவில் நாட்டில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து வட மேற்கு நகரமான புகோபா நோக்கி சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட மொத்தம் 43 பேர் இருந்தனர்.

    புகோபாவை விமானம் நெருங்கிய நிலையில் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது மழை பெய்துக் கொண்டிருந்ததால் விமானம் தண்ணீருக்குள் முழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

    26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது என தான் சானியா பிரதமர் காசிம் மஜலிவா தெரிவித்துள்ளார். விமானம் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்த போது, மோசமான வானிலையால் விபத்தை சந்தித்தது என்று போலீஸ் கமாண்டர் வில்லியம் மவாம்பகலே தெரிவித்தார்.

    தான்சானியாவில் மினி பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியாகினர். #TanzaniaAccident
    டர் எஸ் சலாம்:

    தான்சானியா நாட்டின் சோங்வே பகுதியில் மினி பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    டுண்டுமா பகுதி அருகே மினி பஸ் சென்றபோது எதிரே வந்த லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்கள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். சாலை விபத்து குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் ஜான் மொகபுலி, விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #TanzaniaAccident
    தான்சானியா நாட்டின் பெரும் பணக்காரரான முகமது டியூஜி மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MohammedDewji
    டோடோமா :

    ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவை சேர்ந்த இளம் கோடீஸ்வர் முகமது டியூஜி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ஆகும்.

    தனது பரம்பரை தொழிலான சில்லரை வியாபாரத்தை முகமது டியூஜி, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் தொழில் சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார். விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்ரிக்கா முழுமைக்கும் இவர் நடத்தி வருகிறார்.

    போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஆப்ரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி 17-ம் இடம் பிடித்திருந்தார். அந்த பத்திரிக்கை ஆப்ரிகாவில் இளம் கோடீஸ்வரர் என இவரை புகழ்ந்திருந்தது. தான்சானியாவில் பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி முதலிடம் பிடித்திருந்தார்.

    இந்நிலையில், முகமது டியூஜி மர்மநபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் உள்ள தார் இ ஸலாம் எனும் நகரில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாகவும், முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்தல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தார் இ ஸலாம் கவர்னர் கூறுகையில், ‘சொகுசு விடுதியில் உடற்பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த அவரை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்துள்ளனர், அவர்கள் வெள்ளையர்கள் என தெரியவந்துந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.

    இது தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் சிலரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வருகிறோம். முகமது டியூஜி கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என அவர் தெரிவித்தார். #MohammedDewji
    தான்சானியா நாட்டின் விக்டோரியா ஏரியில் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது. #LakeVictoriaFerryAccident
    உகாரா:

    ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    படகு முழுவதும் தண்ணீரில் மூழ்கிய விபத்தில் பலர் பலியாகினர். விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 207 ஆனது என தகவல்கள் வெளியானது. மேலும், உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் சிலரை உயிருடன் மீட்டு வந்தனர்.

    இந்நிலையில், தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 



    இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். படகு மூழ்கி விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். #LakeVictoria  #LakeVictoriaFerryAcciden
    தான்சானியா நாட்டில் விக்டோரியா ஏரியில் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. #LakeVictoriaFerryAccident
    உகாரா:

    ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் விக்டோரியா ஏரியில் சென்ற சொகுசு படகு ஒன்று உகாரா தீவு அருகே தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    அதற்குள் படகு முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இந்த விபத்தில் பலர் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணியில் 4 நீச்சல் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்கள் 2 பேரை மட்டும் உயிருடன் மீட்டு வந்தனர். படகில் 200 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால் 300-க்கும் மேற்பட்டோர் ஏற்றப்பட்டனர். இதனால் எடை அதிகரித்து பாரம் தாங்காமல் படகு ஏரியில் மூழ்கியதாக உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

    படகு மூழ்கி விபத்துக்கு காரணமாணவர்களை கைது செய்ய தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். இன்னும் பலர் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடக்கிறது. எனவே அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் ஏரிக்கரையில் காத்து கிடக்கின்றனர். #LakeVictoria  #LakeVictoriaFerryAcciden
    தான்சானியா நாட்டில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. #LakeVictoriaFerryAccident
    லேக்விக்டோரியா:

    தான்சானியா நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான விக்டோரியா ஏரியில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப்படகு திடீரென நீரில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெறும் மீட்பு பணிகளில் ஒரே ஒரு நபர் மட்டும் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    இந்த விபத்தில் ஏற்கனவே 136 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. படகில் சுமார் 300 பேர் பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கை நடந்துகொண்டே இருக்கிறது.

    இந்த விபத்து குறித்து ஏற்கனவே படகின் உரிமையாளர் உட்பட விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு தான்சானியா அதிபர் உத்தரவிட்டு இருந்தார். இன்று இதுகுறித்து பேசிய போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு மந்திரி இசாக் கம்வெல்வி கூறுகையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைவரையும் மீட்கும் வரை மீட்புப்பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். #LakeVictoriaFerryAccident
    டன்சானியா நாட்டின் பெயா என்ற நகரில் சரக்கு லாரி ஒன்று அடுத்தடுத்து 5 வாகனங்களில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Tanzania
    டொடோமா:

    டன்சானியா நாட்டின் பெயா நகரில் செங்குத்தான மலைப்பாதை ஒன்றில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த வாகனங்கள் மீது சரக்கு லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது.

    அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது இந்த லாரி மோதியதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் ஜான் மகுஃபுலி, இந்த சம்பவம் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், நாட்டின் குடிமக்களை இழந்து வருத்தத்தில் இருப்பதாகவும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    டன்சானியாவில் மோசமான சாலை வசதிகள், முறையாக பின்பற்றப்படாத சாலை விதிமுறைகள் ஆகியவற்றால் அங்கு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதே போல், கடந்த ஞாயிறு அன்று நடந்த விபத்து ஒன்றில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Tanzania
    ×