search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "costa rica"

    • லிமோன் நகருக்கு வந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது.
    • விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்

     லிமோன்:

    மெக்சிகோவிலிருந்து கோஸ்டாரிகா நாட்டின் லிமோன் விமான நிலையத்திற்கு ஐந்து ஜெர்மன் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சிறிய ரக விமானம், கோஸ்டாரிகா கடற்கரை அருகே விபத்துக்குள்ளானது. ரிசார்ட் நகரமான லிமோனுக்குச் வந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனதாக, கோஸ்டாரிகா பாதுகாப்பு அமைச்சர் டோரஸ் தெரிவித்தார்.

    ஒன்பது இருக்கைகள் கொண்ட இத்தாலி தயாரிப்பான அந்த விமானத்தின் துண்டுகள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கோஸ்டாரிகா அதிகாரிகள் தெரிவித்தனர். விமான பயணிகள் குறித்த தேடுதல் நடவடிக்கை உடனடியாக தொடங்கிய நிலையில் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்த விபத்தில் ஜெர்மன் தொழிலதிபர் உள்பட 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை எந்த உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கோஸ்டாரிகாவின் பாதுகாப்பு துணை அமைச்சர் மார்ட்டின் அரியாஸ் கூறினார்.

    கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டவிரோதம் என்ற நிலையை, மாற்றி அவ்வகை திருமணம் மீதான தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #CostaRica
    சான்ஜோஸ்;

    மத்திய அமெரிக்க நாடாக கோஸ்டா ரிகாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது சட்டவிரோதம் என்றும் கிரிமினல் குற்றம் என்றும் சட்டம் இருந்து வந்தது. சமீபத்தில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற அல்வாராடோ ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் அங்கீகரிக்கப்படும் என தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார்.

    அதன்படி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இவ்வகை திருமணத்தின் மீதான தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது. 

    மேலும், 18 மாதங்களில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், இந்த தீர்ப்புக்கு அந்நாட்டு பழமைவாதிகள் கட்சியான சுவிஷகர்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

    57 இடங்கள் கொண்ட பாராளுமன்ற சபையில் அக்கட்சிக்கு 14 இடங்கள் மட்டும் இருப்பதால், இந்த சட்டம் நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த கோஸ்டா ரிகா, சுவிட்சர்லாந்து இடையேயான லீக் போட்டி டிரா ஆனது. #FIFAWorldCup2018 #FIFA2018 #SUICRC

    மாஸ்கோ:

    32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. ‘ஈ’ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, கோஸ்டா ரிகா அணிகள் பலப்பரீட்சை செய்தன. கோஸ்டா ரிகா அணி ஏற்கனவே தொடைவிட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்த போட்டி சுவிட்சர்லாந்து அணிக்கு அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

    இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஜிமைலி சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.  



    கோஸ்டா ரிகா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் சுவிட்சர்லாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் கெண்டால் வாஸ்டன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதன்பின் 88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஜோசிப் ட்ரெமிக் கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது.



    அதைத்தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கோஸ்டா ரிகா அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அதில் சுவிட்சர்லாந்து அணியின்  அந்த அணியின் யான் சோமர் எதிரணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார்.



    அதன்பின் இறுதிவரை இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #SUICRC
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldCupRussia #FIFA2018
    தனது தொடக்க ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்துடன் ‘டிரா’ கண்ட 5 முறை சாம்பியனான பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மாரை, சுவிட்சர்லாந்து வீரர்கள் குறி வைத்து தாக்கினர். பிடித்து இழுப்பது, காலை இடறி விடுவது என்று 10 முறை அவரை பவுல் செய்தனர். உலக கோப்பையில் கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பிட்ட வீரர் மீது இத்தனை முறை ‘பவுல்’ செய்யப்பட்டது அது தான் முதல் முறையாகும். எப்படியோ இன்றைய ஆட்டத்தில் நெய்மார், பிலிப் காட்டினோ, கேப்ரியல் ஜீசஸ் உள்ளிட்டோர் மீதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் பிரேசிலின் கேப்டனாக மார்சிலோ இருந்தார். சுழற்சி அடிப்படையில் இந்த ஆட்டத்தில் தியாகோ சில்வா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1960-ம் ஆண்டுக்கு பிறகு பிரேசிலை வெல்ல முடியாமல் தவிக்கும் கோஸ்டாரிகா அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தீவிரம் காட்டும்.

    ‘இ’ பிரிவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் செர்பிய அணி 2-வது வெற்றியை நோக்கி, சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த செர்பிய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் 2-வது சுற்றை எட்டி விடும். மாறாக அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க சுவிட்சர்லாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி காண வேண்டியது அவசியமாகும்.

    குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஐஸ்லாந்து நாடு, தனது முதல் ஆட்டத்தில் (டி பிரிவு) பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடன் பதற்றமின்றி விளையாடி டிரா செய்தது. அந்த அணி உலக கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவுடன் இன்று கோதாவில் இறங்க காத்திருக்கிறது. அதே நேரத்தில் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் உதைவாங்கிய இளம் வீரர்களை கொண்ட நைஜீரியா அணி, கடந்த உலக கோப்பையை போன்று நாக்-அவுட் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால், இன்றைய ஆட்டத்தில் ஐஸ்லாந்தை புரட்டியெடுத்தாக வேண்டும். #WorldCupRussia #FIFA2018
    உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.#FIFO2018 #Belgium #CostaRica
    பிரசெல்ஸ்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நாளை மறுநாள் (14-ந் தேதி) தொடங்குகிறது. ஒரு மாதம் வரை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

    பிரசெல்சில் நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் - கோஸ்டாரிகா அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    பெல்ஜியம் தரப்பில் லுகாகு 2 கோலும் (42 மற்றும் 50-வது நிமிடங்கள்) மெர்டன்ஸ் (31-வது நிமிடம்), பட்சுயி (64-வது நிமிடம்) தலா 1 கோலும் அடித்தனர். கோஸ்டாரிகா தரப்பில் ரூயிஸ் (24-வது நிமிடம்) கோல் அடித்தார்.

    பெல்ஜியம் கடந்த 8 போட்டியில் தோல்வியை தழுவாமல் வலிமையாக இருக்கிறது. அந்த அணி உலக கோப்பையில் ‘ஜி’ பிரிவில் உள்ளது. தோல்வியை தழுவிய கோஸ்டாரிகா ‘இ’ பிரிவில் உள்ளது.

    செனகல் - தென்கொரியா மோதிய பயிற்சி ஆட்டத்தில் செனகல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இன்றைய ஆட்டங்களில் ஜப்பான் - பராகுவே, போலந்து - லிதுனியா அணிகள் மோதுகின்றன. #FIFO2018 #Belgium #CostaRica
    ×