என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்த கைது வாரண்ட் குறித்து ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
    • ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.

    அங்காரா:

    பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 பே்ா கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

    இந்நிலையில், காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு துருக்கி கோர்ட் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    காசா மீதான இரக்கமற்ற தாக்குதல் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக இஸ்தான்புல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ராணுவ மந்திரி காட்ஸ், ராணுவ தளபதி இயால் ஜமீர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    விசாரணை இறுதியில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கைது வாரண்ட் குறித்து ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.

    ஏற்கனவே காசா மீதான இனப்படுகொலை காரணமாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    • தலைநகர் லுடண்டா சென்றடைந்த ஜனாதிபதி முர்முவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி முர்மு ஆவார்.

    லுவாண்டா:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாட்கள் அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதன்படி, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவிற்கு திரவுபதி முர்மு செல்கிறார். இந்த இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி முர்மு ஆவார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட திரவுபதி முர்மு இன்று அதிகாலை அங்கோலா நாட்டின் தலைநகர் லுவாண்டா சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கோலாவின் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு, இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

    அங்கோலா நாட்டின் 50-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் முர்மு பங்கேற்கிறார். அங்கோலா நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.

    அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11-ம் தேதி போட்ஸ்வானா செல்கிறார். அந்நாட்டின் தலைநகர் கபொரின் செல்லும் முர்மு போட்ஸ்வானா ஜனாதிபதி டுமா டிகொன் பொகோவை சந்திக்கிறார். அதன்பின், போட்ஸ்வானா நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.

    அங்கோலா , போட்ஸ்வானா பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி முர்மு வரும் 13-ம் தேதி நாடு திரும்புகிறார்

    • ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
    • தொழில்நுட்ப கோளாறால் ரன்வேயில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ரன்வேயில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை. விமான நிலைய ரன்வே வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், விமானங்கள் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறை செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வடிவமைத்துள்ளார்.
    • 18ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் ஏலத்துக்கு வர உள்ளது.

    இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் வாங்குவதே பகல் கனவாக மாறி வருகிறது.

    இந்த சூழலில் அமெரிக்காவில் 102.1 கிலோ எடையுள்ள தங்கத்தாலான டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.

    கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வடிவைமைத்துள்ள இந்த டாய்லெட், வரும் 18ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் ஏலத்துக்கு வர உள்ளது.

    இந்த டாய்லெட்டின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 88 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பளபளவென மின்னும் தங்க டாய்லெட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

    • அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர்.
    • பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கொண்டுள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் 'தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' என்ற அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

    கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்தனர்.

    பதிலுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல்காளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கத்தார் மத்யஸ்தத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    தொடர்ந்து துருக்கியில் பல கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி நேற்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ஆப்கன் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

    பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்றும், ஆப்கான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம் எனவும் ஆப்கான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

    • மம்தானி, பாலஸ்தீன மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
    • இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை மம்தானி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிட்டனர்.

    இந்நிலையில், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் அந்த நகரத்துக்ககு குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் நிறுத்துவேன் என்ற டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியிலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

    ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியை போலவே பாலஸ்தீன சிறுவன் ஒருவரின் நடித்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    பாலஸ்தீன மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மம்தானி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1953 இல் 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரியை கண்டறியப்பட்டது.
    • மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    சுவிஸ் விஞ்ஞானி பிரெட்ரிக் மீஷர் என்பவரால் 1869 ஆம் ஆண்டு டிஎன்ஏ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆனால் டிஎன்ஏவின் கட்டமைப்பு 1953 ஆம் ஆண்டு அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் மற்றும் இயற்பியலாளர் பிரான்சிஸ் கிரிக் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் 'டபுள் ஹெலிக்ஸ்' டிஎன்ஏ கட்டமைப்பை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான உயிரியலாளர் ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். கடந்த வியாழக்கிழமை நியூயார்க்கின் கிழக்கு நார்த்போர்ட்டில் அவர் உயிர் பிரிந்தது.

    அவரது மகன் டங்கன் வாட்சன் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் இதை உறுதிப்படுத்தி உள்ளார். நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவமனையில் நிம்மதியாக இறந்தார் என டங்கன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    ஏப்ரல் 6, 1928 அன்று சிகாகோவில் பிறந்த வாட்சன், தனது 24 வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிரான்சிஸ் கிரிக்குடன் டிஎன்ஏவின் அமைப்பு குறித்து ஆராய்ச்சி நடத்தினார்.

    1953 இல் அவர்கள் முன்மொழிந்த 'இரட்டை ஹெலிக்ஸ்' மாதிரி, உயிரினங்களில் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரம்பரை தகவல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை விளக்கியது, இது அறிவியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியது.

    இந்தக் கண்டுபிடிப்புக்காக வாட்சன், கிரிக் மற்றும் மற்றொரு விஞ்ஞானி மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு 1962 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    மரபியல், தடயவியல் மற்றும் பரம்பரை நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பேருதவியாக அமைந்தது. 

    • 5 இந்திய தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.
    • இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் அடிக்கடி அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்தநிலையில் மேற்கு மாலியில் உள்ள கோப்ரி பகுதியில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்துக்குள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்கு, பணிபுரிந்து கொண்டிருந்த 5 இந்திய தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.

    கடத்தப்பட்ட இந்தியர்கள் மின்மயமாக்கல் திட்டங்களில் பணிபுரிந்து வந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இந்தியர்கள் தலைநகர் பமாகோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த ஜூலை மாதம் 3 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது.
    • டிரம்ப்பின் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22, 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெறுவது முற்றிலும் அவமானகரமானது. அங்கு வெள்ளை நிற விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு தாக்குதல், கொலை செய்யப்படுகின்றனர்.

    அங்கு சிறுபான்மையினராக உள்ள வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் அமெரிக்காவில் இருந்து ஜி 20 உச்சி மாநாட்டில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். தற்போது இந்த மாநாட்டை அமெரிக்கா முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.

    டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
    • டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. இதில் விசா வழங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    இந்நிலையில் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.

    அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் நபருக்கு தொற்று நோய் இருக்கிறதா, என்னென்ன தடுப்பூசிகளை இதுவரை அவர்கள் செலுத்தி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா ஆகிய ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

    இதில் தற்போது கூடுதலாக நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் டிரம்ப் நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

    அதில் விண்ணப்பதாரரின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய நோய் , சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, வளர்சிதை மாற்ற நோய்கள், நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்த நோய்கள் பராமரிப்புக்கு லட்சக்கணக்கான டாலர் தேவைப்படலாம் அந்த செலவுகளை ஏற்கக் கூடிய வகையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோபோ எந்திரம் நீங்கள் விரும்பும் ஸ்டைலில் முடிவெட்ட காத்திருக்கிறது.
    • வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அழகாக முடிவெட்டிக் கொள்வது சவாலான வேலையாக மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் நண்பர்கள் நம்மை கேலி செய்யாத அளவுக்கு அழகான சிகை அலங்காரம் அமைவதற்கு தனி முடி திருத்துனரை தேர்வு செய்து, காத்திருந்து கத்தரித்துக் கொண்டால்தான் உண்டு.

    ஆனால் இனி அந்தக் கவலையில்லாமல் ரோபோ எந்திரம் நீங்கள் விரும்பும் ஸ்டைலில் முடிவெட்ட காத்திருக்கிறது. ஆம்... அப்படியொரு எந்திரத்தில் வாலிபர்கள் சிலர் முடிவெட்டி சிகை அலங்காரம் செய்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நிஜம்தான், அது கற்பனை சினிமா காட்சியல்ல. 'ஆட்டோ ஸ்ட்ரீட் பார்பர்' என குறிப்பிடப்படும் அந்த எந்திரம், ராட்சத ஸ்பீக்கர் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. அதில் விரும்பிய ஸ்டைல் குறித்த கட்டளைகளை சொடுக்கி வாஷிங்மெஷின் கதவு போன்ற ஒரு திறப்புக்குள் நமது தலையை நுழைத்தால் போதும், சில வினாடிகளில் சிகை அலங்காரத்தை முடித்து விடுகிறது ரோபோ. அதிகபட்சம் ஒரு நிமிடம் கூட ஆகாது.

    இந்த எந்திரங்கள் நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ சிகை அலங்கார பிரியர்களால் ஆச்சரியத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.



    • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேஸ்பால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.
    • இதைப் பார்ப்பதற்காக ஹாரி தனது மனைவி மேகனுடன் சென்றிருந்தார்.

    வாஷிங்டன்:

    இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஹாலிவுட் நடிகை மேகனை திருமணம் செய்தபிறகு அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார். அதன்பின், தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பேஸ்பால் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் 4-வது போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் அணியும், கனடாவின் டொராண்டோ ப்ளூ ஜேஸ் அணியும் மோதின.

    இதனை பார்ப்பதற்காக ஹாரி தனது மனைவி மேகனுடன் சென்றிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்சின் தொப்பியை அணிந்திருந்தனர். இதற்கு காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள கனடாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

    ஏனெனில் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், அவரது மகனான இளவரசர் ஹாரி அமெரிக்க அணிக்கு ஆதரவாக தொப்பியணிந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் அணியின் தொப்பி அணிந்ததற்காக இளவரசர் ஹாரி கனடாவிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.

    ×