என் மலர்
உலகம்
- அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
- கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.
சியோல்:
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
எனவே பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா அவ்வப்போது கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கருதுகிறார். எனவே இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க ராணுவ மந்திரி பீட் ஹெக்சேத் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ராணுவ செலவுகளை உயர்த்தும் தென் கொரியாவின் முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இது வடகொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியது.
இந்நிலையில், கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
- மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றுள்ளார் என்றும் தெரியவந்தது.
- நோயாளிகளைப் பராமரித்து வந்த செவிலியர், அவர்களது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் தானே எஜமானி போல செயல்பட்டதாக தெரிவித்தார்.
இரவுப்பணியில் அழுத்தத்தை குறைக்க தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியருக்கு ஜெர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
ஜெர்மனியின் வூர்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் 2020 இல் செவிலியராக பணியில் சேர்ந்த அவர் தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளுக்கு தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொன்றுள்ளார்.
இவ்வாறு அவர் 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார், மேலும் 27 நோயாளிகளை அதே முறையில் கொல்ல முயன்றுள்ளார் என்றும் தெரியவந்தது.
டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை இந்த இறப்புகள் பதிவாகி உள்ளன. இரவுப் பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவே அவர் இந்தச் செயலைச் செய்ததாகத் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட செவிலியரின் பெயர் வெளியிடப்படவில்லை. வயதான மற்றும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரித்து வந்த செவிலியர், அவர்களது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் தானே எஜமானி போல செயல்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிமன்றம், செவிலியருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு ஜெர்மனியில் 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நீல்ஸ் ஹோஜெல் என்ற ஆண் நர்ஸ் ஒருவர் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்தார்.
2019இல் ஆண்டில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைக்காரர் இவர் என்று கருதப்படும் நிலையில் தற்போது அதே பாணியில் மற்றொரு செவிலியரின் கொடூர கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- நான் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில், ஐந்து அல்லது ஆறு போர்கள் வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன.
- 24 மணி நேரத்திற்குள் நான் போரை முடித்து வைத்தேன்.
மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்தியா ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதாக டிரம்ப் கூறி வருகிறார்.
இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியா உடனான நமது பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கின்றன.
மோடி எனது நண்பர், நல்ல மனிதர். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அவர் நிறுத்திவிட்டார் என்பது நல்ல விஷயம்.
என்னை அவர் இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார். நான் அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில், ஐந்து அல்லது ஆறு போர்கள் வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன.
அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 'நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால், நான் உங்கள் மீது வரி விதிப்பேன்' என்று கூறி 24 மணி நேரத்திற்குள் நான் போரை முடித்து வைத்தேன்.
இந்த போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. வரிவிதிப்பு இல்லையென்றால், அந்த போரை என்னால் நிறுத்தியிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
- தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் பிரபல மசூதி அமைந்துள்ளது.
- மசூதியிலும் அருகே செயல்பட்டு கொண்டிருந்த பள்ளியிலும் எதிரொலித்தது.
இந்தோனேசியாவில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட 54 பேர் காயம் அடைந்தனர்.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள பிரபல மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர்.
மதியம் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் திடீரென அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன. இதன் பாதிப்பு மசூதியிலும் பள்ளியிலும் எதிரொலித்தது.
தகவலறிந்து போலீசார், மீட்புப்படையினர் உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட மொத்தம் 54 பேர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
முதல்கட்ட விசாரணையில் பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அருகில் இருந்து தான் குண்டுகள் வெடித்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து சில பொம்பை துப்பாக்கிகளை கைப்பற்றி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
- உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.
- பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார்.
ரஷியாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த 22 வயதான அஜித் சிங் சவுத்ரி 2023 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க ரஷியா சென்றார்.
ரஷியாவின் உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார். அதன்பிறகு, அவர் மீண்டும் விடுதிக்கு வரவில்லை.
இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வொயிட் நதியின் அருகே உள்ள அணையில் அஜித் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அஜித்தின் உடல் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டது. அஜித் இறந்தது குறித்து இந்திய தூதரகம் எந்த அறிக்கையும் வெளியிடாத நிலையில் நேற்று அஜித்தின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தை விற்று அஜித்தை ரஷியாவுக்கு படிக்க அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அஜித்தின் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அஜித் சவுத்ரியின் மரணத்திற்குப் பின்னால் ஒரு மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதனைத்தொடர்ந்து மாணவரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
- உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் விலையைக் குறைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் நிர்வாகியான கார்டன் பிண்ட்லே திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவகத்தில், உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் விலையைக் குறைக்கும் ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்போது, மருத்துவ அதிகாரிகள் உள்பட மருந்து நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மருந்து விலைக் குறைப்பு குறித்து நிர்வாகி ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, பின்னால் நின்றுகொண்டிருந்த நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் விருந்தினராக வந்திருந்த கார்டன் பிண்ட்லே என்பவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேர இடைவேளைக்கு பின் நிகழ்வு மீண்டும் தொடங்கியது. அந்த நிர்வாகி நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாவும் அவர் நலமுடன் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உடன் பருமன் மருந்து விலை குறைப்பு ஒப்பந்தம் மூலம் நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை நுகர்வோருக்கு நேரடியாக விற்கமுடியும் என்று கூறப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஜிஎல்பி -1 மருந்தை மிகவும் மலிவான விலையில் கொடுக்கவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தான்- பாக்., சண்டையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அண்டை நாடான பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் உயிர் இழந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இறுதிகட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல்லில் நடந்தது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தெற்கு கந்தஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் என்ற இடத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிர் இழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் முதலில் துப்பாக்கி சூடு நடத்தியது என்றும் இதனால் பதிலடி கொடுக்க வேண்டியது இருந்தது என்றும் பாகிஸ்தான் கூறி இருக்கிறது.
- உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்.
- பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனுக்கு 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த கோரிக்கை நிறைவேறினால், உலகிலேயே முதல் ட்ரில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகிறார்.
இந்த நிலையில், எலான் மஸ்க் சுமார் 1 ட்ரில்லியன் டாலர் (ரூ.88 லட்சம் கோடி) தொகையை, ஊதியமாக வழங்க டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளவனர்.
இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எலான் மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் டெஸ்லா கார்களின் விற்பனை சறுக்களை சந்தித்துள்ளது. ஆனாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த சூழலில், எலான் மஸ்க் கூடுதல் சம்பளம் கேட்டிருப்பது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- மாயமான பலரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
- புயலால் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மணிலா:
பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. கல்மேகி என பெயரிடப்பட்ட இந்தப் புயல் பிலிப்பைன்ஸ் நகரை நோக்கி நகர்ந்தது.
அங்குள்ள பாலவான் தீவு அருகே இந்தப் புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கடலோர மாகாணங்களான நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்டவற்றில் தொடர் மழை கொட்டியது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறின.
இந்த புயல் தாக்குதலின்போது, கார்களும், ஆற்றங்கரையோர வீடுகளும் மற்றும் பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது. மேலும், மாயமான பலரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. புயலால் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி பெர்டினண்ட் மார்கோஸ் தேசிய பேரிடராக இதனை அறிவித்துள்ளார். இதனால், நிவாரண உதவிக்கான நிதியை அரசு ஒதுக்க முடியும். அதனுடன் அத்தியாவசிய பொருட்களுக்கான அடிப்படை விலை நிர்ணயமும் செய்ய முடியும். புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 லட்சம் பிலிப்பைன்ஸ் மக்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தார்.
- கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார்.
மெக்சிகோவில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாமை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரைப் பின்னால் இருந்து அணுகி, அவரது தோளில் கையை வைத்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.
கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார். பின்னர் அவரது பாதுகாப்புக் குழு அந்த நபரை அங்கிருந்து அகற்றினர். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- காங்கோ மற்றும் ருவாண்டா இடையேயான போர்கள் உட்பட எட்டு நீண்டகால போர்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்.
- வரிகள் இல்லாமல், அது ஒருபோதும் நடந்திருக்காது
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை நிறுத்தியதாக டிரம்ப் பேசியதன் எண்ணிக்கை ஏற்கனவே 50ஐ கடந்தது.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
நேற்று, மியாமியில் நடந்த அமெரிக்க வணிக மன்றத்தில் உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், "கடந்த எட்டு மாதங்களில், கொசோவோ மற்றும் செர்பியா, காங்கோ மற்றும் ருவாண்டா இடையேயான போர்கள் உட்பட எட்டு நீண்டகால போர்களை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போரை நான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்.
நான் சில செய்தித்தாள்களின் முதல் பக்கங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அணு ஆயுதம் ஏந்திய நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்குப் போவதை நான் அறிந்தேன். அந்த நேரத்தில், ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. எட்டாவது விமானமும் மோசமாக சேதமடைந்தது. அடிப்படையில் எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
பின்னர் நீங்கள் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யாவிட்டால், நான் உங்களுடன் வியாபாரம் செய்ய மாட்டேன் என்று மிரட்டினேன்" என்று தெரிவித்தார்.
அச்சுறுத்தலுக்கு பிறகு, மறுநாள் இரு நாடுகளும் சமாதானம் செய்து கொண்டதாக தனக்கு அழைப்பு வந்தது என்றும் வரிகள் இல்லாமல், அது ஒருபோதும் நடந்திருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும் எந்த நாட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை. டிரம்ப் கூற்றை இந்தியா ஏற்கனவே மறுத்துள்ளது குறிப்பிடத்க்கது.
- பிரேசில் மாடல் அழகியின் பெயர் Larissa என தெரியவந்துள்ளது.
- என்னை இந்தியனாக காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அரியானா வாக்காளர் பட்டியலில் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளனர். தவறான வாக்காளர்கள், போலி முகவரிகள், கும்பல் வாக்காளர்கள் என ஏராளமான முறைகேடுகள் நிறைந்துள்ளன.
பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் (அவரின் புகைப்படத்தையும் ராகுல் காந்தி வெளியிட்டார்) ராய் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 வாக்குச்சாவடிகளில் 22 இடங்களில் இடம்பெற்று இருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி கூறிய பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி குறித்து கடந்த 24 மணி நேரத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூகுளில் தேடியுள்ளனர். அதில் அந்த பிரேசில் மாடல் அழகியின் பெயர் Larissa என தெரியவந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்களா? என பிரேசில் மாடல் அழகி லாரிசா தனது ஆதங்களை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், என்னை இந்தியனாக காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம். நாம் எந்த உலகில் வாழ்கிறோம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.






