என் மலர்
உலகம்
- பாலவான் தீவு அருகே இந்தப் புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது.
- மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
மணிலா:
பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. கால்மேகி என பெயரிடப்பட்ட இந்தப் புயல் பிலிப்பைன்ஸ் நகரை நோக்கி நகர்ந்தது.
அங்குள்ள பாலவான் தீவு அருகே இந்தப் புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கடலோர மாகாணங்களான நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு உள்ளிட்டவற்றில் தொடர் மழை கொட்டியது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பைமேடு போல ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்தன.
இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய கால்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. புயலால் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
- முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
சரஜெவோ:
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் 7-வது தளத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட வயதானவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் தாங்களாக வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் தீ வேகமாகப் பரவியதால், உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப்பணியில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவிபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் பிரதமர் ராஜினாமா செய்தார்.
- அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஒலி பதவி விலகினார். இதனால் கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவர் மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள 10 கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. இதில் CPN (மாவோயிஸ்ட் மையம்), CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சிகளும் அடங்கும்.
CPN (மாவோயிஸ்ட் மையம்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்பகமல் தஹால் பிரசந்தா ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சி தலைவர் மாதவ் குமார் நேபாள் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
10 கட்சிகள் இணைந்துள்ள புதுக்கட்சிக்கு நேபாளி கம்யூனிஸ்ட் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரும்பாலான கம்யூஸ்ட் கட்சிகளில் உள்ள மாவோயிஸ்ட் பெயர் கைவிடப்படுகிறது. முக்கியமாக மாவோயிஸ்ட் மையம் கட்சி கைவிடுகிறது.
- 2014 ஆண்டு வாகா எல்லை அருகே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 3 பேருக்கு தூக்குத்தண்டனை மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானின் வாகா எல்லையில் கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் கடத்தப்பட்டது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட ஜமாத்-அல்-அஹ்ரார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 300 ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த தீர்பை எதிர்த்து 3 பேருக்கும் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலயைில் லாகூர் உயர்நீதிமன்றம் மூன்று பேரின் தூக்குத்தண்டனை மற்றும் ஜெயில் தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுதலை செய்த உத்தரவிட்டுள்ளது. தற்கொலை படையாக செயல்பட்டவர்களுக்கு உதவியதாக இந்த மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
- ஹமாஸ் அமைப்பு இதுவரை 21 உடல்களை ஒப்படைத்துள்ளது.
- இஸ்ரேல் 285 பாலஸ்தீனர்களின் உடல்களை காசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே கடந்த மாதம் 10ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன் முதற்கட்டமாக பிணைக்கைதிகள்- சிறைக்கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது வரை உயிரிழந்தவர்கள் உடல்கள் இருதரப்பிலும் இருந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உயிருடன் இருந்த 20 பிணைக்கைதிகளை விடுவித்தினர். அதற்குப்பதிலாக இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர், 2023 அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை ஹமாஸ் அமைப்பினர் காசா முனைக்கு எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை தற்போது ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்து வருகின்றனர். ஆனால், இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு உடல்களை ஒப்படைத்து வருகிறது.
அதன்படி உயிரிழந்த இஸ்ரேலின் ராணுவ வீரர் உடலை ஹமாஸ் நேற்று ஒப்படைத்தது. அதற்கு இணையாக 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை இந்த உடல்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இதுவரை 21 உடல்களை ஒப்படைத்துள்ளது. அதற்கு பதிலாக 285 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் ஒரு பிணைக்கைதியின் உடல்களை ஒப்படைப்பதற்கு இணையாக இஸ்ரேல் 15 உடல்களை ஒப்படைத்து வருகிறது.
2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் பிரகடனம் செய்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 68,800 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிட்டார்.
அமெரிக்காவில் முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறை இருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வந்தது.
ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் அந்த நகரத்துக்ககு குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் நிறுத்துவேன் என்ற டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியிலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
நியூயார்க் நகரின் முதல் இஸ்லாமிய, இந்திய வம்சாவளி மேயராக தேர்வாகியுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மம்தானி, தனது வெற்றி உரையில் இந்திய முன்னாள் பிரதமர் நேருவின் வரலாற்று சிறப்புமிக்க உரையை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு நேரு பேசிய, "வரலாற்றில் அரிதாகவே வரும் ஒரு தருணம் வருகிறது. நாம் பழையதிலிருந்து புதியதற்கு அடியெடுத்து வைக்கும் போது, ஒரு யுகம் முடிவடையும் போது, நீண்ட காலமாக அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா வெளிப்படும் போது..." என்ற உரையை மேற்கோள் காட்டி மம்தானி பேசினார்.
- ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
- மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிட்டார்.
அமெரிக்காவில் முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறை இருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வந்தது.
ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
நேற்று மம்தானி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், "நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் அந்த நகரத்துக்ககு குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் நிறுத்துவேன்.
ஏனென்றால் ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் இந்த சிறந்த நகரம் மோசமாகிவிடும். அந்த நகரத்தால் வெற்றி பெறவோ அல்லது உயிர் வாழவோ முடியாது.
மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் பொருளாதார, சமூக பேரழிவை சந்திக்கும். ஒரு அதிபராக, கெட்டது நடந்து பிறகு அங்கு நல்ல பணத்தை அனுப்ப நான் விரும்பவில்லை. ஏனென்றால் தேசத்தை நடத்துவது எனது கடமை.
மம்தானி திறமையானவர் இல்லை. உலகின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக அவரை கொண்டுவர முடியாது. நாம் இதையும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
வெற்றி பெற்றபின்பு மக்களிடம் உரையாற்றிய மம்தானி, "நமக்கு நினைவு தெரிந்தவரை, நியூயார்க்கின் உழைக்கும் மக்கள் தங்கள் கைகளில் செல்வமும் அதிகாரமும் இல்லை என்று கூறி வருகின்றனர். எதிர்காலம் நம் கைகளில் உள்ளது" என்று தெரிவித்தார்.
- விமானம் ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.
- சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் லூயிஸ்வில் விமான நிலையம் அருகே சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
UPS ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம், லூயிஸ்வில் விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது.
விமானம் கீழே விழுந்து தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன.
- பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி என்ற சூறாவளி தாக்கியது. இதனால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 40 பேர் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியட்நாம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
- இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என அடிப்படைவாத அமைப்புகள் எதிர்த்தன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை ரத்து செய்வதாக வங்கதேச கல்வித் துறை அதிகாரி மசூத் அக்தர் கான் நேற்று அறிக்கை வெளியிட்டார். இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன.
- சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
- கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
எந்த சாட்சியமும் இல்லாத நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு அவர் குற்றவாளி என கடந்த காலங்களில் 2 முறை தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் 43 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குற்றவாளி அல்ல என புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த மாதம் விடுவிக்கப்பட இருந்த நிலையில், 20 வயதில் சுப்பிரமணியத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் விநியோகக் குற்றச்சாட்டை காரணம் காட்டி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.
இந்தநிலையில், அமெரிக்காவில் நாடுகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, சுப்ரமணியத்தை நாடு கடத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
குடியேற்ற வழக்குகளுக்கான மேல்முறையீட்டு வாரியம், இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வரை அவர் நாடு கடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சுப்ரமணியம் ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அவரிடம் நிரந்தர அமெரிக்க குடியுரிமை இருந்தபோதிலும் அவரை நாடு கடத்தி டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் நின்றிருந்தபோது காரணமின்றி தாக்கினார்.
- இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளி, "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று கேட்கிறார்.
மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் மீது நபர் ஒருவர் காரணமின்றி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவில், இளைஞரை, போதையில் இருப்பது போல் தோன்றும் அந்த நபர் எவ்வித காரணமுமின்றி தள்ளிவிடுகிறார். இதனால் இளைஞரின் கைபேசி கீழே விழுந்தது.
இளைஞர் அமைதியாகத் தன் கைபேசியை எடுத்தபோது, ஆத்திரமடைந்த அந்த நபர் இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளுகிறார். "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று அவர் இளைஞரிடம் கேட்பது பதிவாகியுள்ளது.






