என் மலர்tooltip icon

    உலகம்

    குண்டு வெடிப்பு வழக்கு: மரண தண்டனை மற்றும் 300 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை விடுதலை செய்தது லாகூர் நீதிமன்றம்
    X

    குண்டு வெடிப்பு வழக்கு: மரண தண்டனை மற்றும் 300 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை விடுதலை செய்தது லாகூர் நீதிமன்றம்

    • 2014 ஆண்டு வாகா எல்லை அருகே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
    • 3 பேருக்கு தூக்குத்தண்டனை மற்றும் 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

    பாகிஸ்தானின் வாகா எல்லையில் கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் கடத்தப்பட்டது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட ஜமாத்-அல்-அஹ்ரார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 300 ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்பட்டது.

    கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த தீர்பை எதிர்த்து 3 பேருக்கும் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலயைில் லாகூர் உயர்நீதிமன்றம் மூன்று பேரின் தூக்குத்தண்டனை மற்றும் ஜெயில் தண்டனையை ரத்து செய்து, அவர்களை விடுதலை செய்த உத்தரவிட்டுள்ளது. தற்கொலை படையாக செயல்பட்டவர்களுக்கு உதவியதாக இந்த மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    Next Story
    ×