என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மோடி நிறுத்திவிட்டார்.. அடுத்த வருடம் இந்தியா செல்வேன் - டிரம்ப்
    X

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மோடி நிறுத்திவிட்டார்.. அடுத்த வருடம் இந்தியா செல்வேன் - டிரம்ப்

    • நான் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில், ஐந்து அல்லது ஆறு போர்கள் வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன.
    • 24 மணி நேரத்திற்குள் நான் போரை முடித்து வைத்தேன்.

    மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

    இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்தியா ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதாக டிரம்ப் கூறி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியா உடனான நமது பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கின்றன.

    மோடி எனது நண்பர், நல்ல மனிதர். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அவர் நிறுத்திவிட்டார் என்பது நல்ல விஷயம்.

    என்னை அவர் இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார். நான் அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், நான் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில், ஐந்து அல்லது ஆறு போர்கள் வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன.

    அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 'நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால், நான் உங்கள் மீது வரி விதிப்பேன்' என்று கூறி 24 மணி நேரத்திற்குள் நான் போரை முடித்து வைத்தேன்.

    இந்த போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. வரிவிதிப்பு இல்லையென்றால், அந்த போரை என்னால் நிறுத்தியிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×