என் மலர்tooltip icon

    உலகம்

    • சிறுவன் உலகை காக்க டிராகன் பால்களை சேகரிக்கும் கதையாக இந்த தொடர் அமைந்தது.
    • டிராகன் பால் கதையை உருவாக்கிய அகிரா டோரியாமா கடந்த மார்ச்சில் உயிரிழந்தார்.

    நீ போட்டு வச்ச தங்கக் குடம்.. 90ஸ் கிட்ஸ் புகழ் டிராகன் பால் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவுடிராகன் பால் Z என்பது உலகம் முழுவதிலும் உள்ள 90ஸ் கிட்ஸ்களிடையே பிரசித்தி பெற்ற ஜப்பானிய அனிமே தொடர் ஆகும். இந்த தொடர் ஆரம்பித்து இன்றுடன் 40 வருடம் நிறைவடைந்துள்ளது. டோய் அனிமேஷன் நிறுவனத்தால் கடந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி டிராகன் பால் தொடர் முதலில் தொடங்கப்பட்டது.

    சன் கோகு [Son Goku] என்ற சிறுவன் உலகை காக்க டிராகன் பால்களை சேகரிக்கும் கதையாக இந்த தொடர் அமைந்தது. இது பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. குழந்தைகளை வெகுவாக கவர்ந்த இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து முந்தைய கதையின் தொடர்ச்சியாக டிராகன் பால் 1986 ஆம் ஆண்டு தொடங்கியது. இது முந்தையதை விட உலகம் முழுவதிலும் பெரு வெற்றி பெற்றது.

     

    இதுவே பின்னாட்களில் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் நிலைத்தது. Shueisha நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சீரிஸ்சின் மங்கா காமிக் புத்தகங்களும் 260 மில்ல்லியன் பதிப்புகளை கடந்து விற்பனையானது. வீடியோ கேம்களும் இதைனை மையமிட்டு உருவாக்கப்பட்டது.

    இந்த டிராகன் பால் கதையை உருவாக்கிய அகிரா டோரியாமா [Akira Toriyama] கடந்த மார்ச் 1 ஆம் தேதி தனது 68 ஆம் வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சீரிஸ் தனது 40 வது வயதை எட்டியுள்ள இந்நாளில் ரசிகர்கள் டிராகன் பால் -ஐ நினைவுகூர்ந்து நெகிழ்ந்து வருகின்றனர். 

     

    • வீடியோ WOKE கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் மஸ்க் கொதிப்படைந்துள்ளார்.
    • உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஏகபோக ஆதரவை பெற்ற டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்தே எலான் மஸ்க் பயங்கர குஷியில் உள்ளார். அவருக்கு டிரம்ப் அமைச்சரவையில் Department of Government Efficiency or DOGE துறை பொறுப்பு விவேக் ராமசாமியுடன் பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

    தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் படு ஆக்டிவாக போஸ்டர்களை போட்டு வரும் எலான் மஸ்க் தற்போது ஜாகுவார் கார் நிறுவனத்தை வம்புக்கு இழுத்துள்ளார். சுமார் 101 ஆண்டுகளாக கார் தயாரிப்பு தொழிலில் இருக்கும் ஜாகுவார் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தனது நிறுவன லோகவை புதுப்பிக்க ஜாகுவார் முடிவெடுத்துள்ளது.

    ஜாகுவார் பாய்வது போன்ற வடிவமைப்பை கொண்ட அந்நிறுவனத்தின் லோகோ பிரசித்தமாக இருந்துவரும் நிலையில் அதை புதுப்பிதுள்ளதாக வீடியோ வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வீடியோ பன்மைத்துவம் மற்றும் பாலின சமத்துவம், சமூக முன்முடிவுகளை உடைக்கும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை அடியொற்றி அமெரிக்காவில் உருவான WOKE culture கலாச்சார தோரணையில் உள்ளது பழமைவாதியான எலான் மஸ்க்கை கொதிப்படைய செய்து இது குறித்து பேச வைத்திருக்கிறது.

    ஜாகுவாரின் முடிவு குறித்து பேசியுள்ள அவர், நீங்கள் கார்களை தான் தயாரிக்கிறீர்களா, நீங்கள் உண்மையில் விற்பது கார்களை தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்கள் கார்களை தயாரிக்க வில்லை, தவறுகளை தயாரிக்கிறார்கள் என்றும், உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    பழமைவாதியான எலான் மஸ்க் தன்னை ஒத்த பழமைவாத சிந்தனை உடையதாலேயே டிரம்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறார் என்பது ஜனநாயகவாதிகளின் வாதம். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் மக்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்பதே லிபரல்களின் அச்சமாக உள்ளது.

    முன்னதாக எலான் மஸ்க்கின் மகள் விவியன் வில்சன் மூன்றாம் பாலினத்தைச் சேர்த்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் உயிரோடிருக்கும் தனது மகன் சேவியர் இறந்துவிட்டாள் என்று மஸ்க் போட்டுவெளியில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஸ்டான்ட் அப் காமெடியன் காலிமார் வைட் இந்த விசித்திர நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
    • இந்த வசைபாடும் ஏஜென்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குச் சிறப்புத் தகுதிகள் இருக்க வேண்டும்

    நிறுவனத்தின் பணியிடத்தில் மேலதிகாரிகளின் நியமற்ற செயல்களால் ஊழியர்கள் பாதிக்கப்படுவது வழக்கம். மேலதிகாரிகளைச் சட்டையைப் பிடித்து திட்ட வேண்டும் என்று பலருக்கும் தோன்றுவது இயல்பே.

    ஆனால் அதன் பின்விளைவுகள், வேலை இழப்பு என பல பிரச்சனைகள் ஊழியர்களின் கையை கட்டிப்போட்டு விடுகின்றன. ஆனால் ஆள் வைத்து அடிப்பது போல் தற்போது ஆள் வைத்து திட்டும் சேவை அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது.

     

    வொர்க் பிரஷர், டிப்ரஷன், சம்பள உயர்வின்மயால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி என மேலதிகாரிகள் செயல்களால் பாதிக்கப்படும் ஊழியர்கள் இந்த விசித்திர சேவையை பயன்படுத்தி தங்கள் ஆள் மன ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். அமெரிக்காவை சேவை ஸ்டான்ட் அப் காமெடியன் காலிமார் வைட் இந்த விசித்திர நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவருக்கு இன்ஸ்ட்டாகிராமில் 280,000 பாலோயர்கள் உள்ளனர்.

    அலுவலக புகார்கள் மற்றும் பிரச்சனைகள் ஏஜென்சி [OCDA (Office Complaints and Disputes Agency)] என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அவர் இந்த சேவையை வழங்கி வருகிறார்.

     

    ஊழியர்களின் பிரச்சனைகளை சரிசெய்து அவர்களின் சுயமரியாதை மீட்டெடுத்து ஆரோக்கியமான பணி சூழலை உருவாக்குவதே தங்கள் நிறுவனத்தின் நோக்கம் இதன் இணையதள பக்கம் தெரிவிக்கிறது. இந்த இனையதளத்தில் எந்த வகையான நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களும் தங்கள் பிரச்சனையைப் பதிவு செய்யலாம். அதனை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியரின் அலுவலகத்துக்கு இந்த OCDA ஏஜெண்டுகள் செல்வார்கள்.

     

    அங்கு மேலதிகாரியையோ, மேனேஜரையோ, முதலாளியையோ சந்தித்து புகார் கொடுத்த ஊழியர்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரிப்ட்டின் படி திட்டுவதோ, அல்லது பிரச்சனைகளை எடுத்துரைக்கவோ செய்வார்கள். அதற்கு அந்த முதலாளி என்ன எதிர்ப்பு சொன்னாலும், இந்த ஏஜெண்டுகள் தாங்கள் கூறவந்ததை அழுத்தம் திருத்தமாக அவருக்கு உரைக்கும் வகையில் கூறிவிட்டுதான் அங்கிருந்து நகர்வார்கள். புகார் அளித்த ஊழியரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

    இந்த ஏஜெண்டுகள் தொழில்முறை வசைபாடுபவர்கள் [scolder] என்று அழைக்கப்டுகின்றனர். ஒரு வேலை புகார் அளித்த ஊழியரின் நிறுவனம் தங்கள் சேவை எல்லைக்கு அப்பால் வேரோரு நகரத்தில் இருந்தால் போன் மூலமாக இந்த ஏஜெண்டுகள் நிறுவன மேலதிகாரியை தொடர்புகொண்டு பேசுவார்கள். 

     இந்த OCDA நிறுவனம் 80,000 சப்ஸ்கிரைபர்களுடன் யூடியூப் சேனலும் வைத்துள்ளது. அதில் தங்கள் கிளைன்ட்டுகள் சார்பில் ஏஜெண்டுகள் மேலதிகாரிகளிடம் பேசும் வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இந்த வீடியோவில் ஒன்று சமீபத்தில் வைரலான நிலையில் இந்த நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்தியாவில் இதன் சேவைகள் வழங்கபடுமா அல்லது கிளைகள் தொடங்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையே இந்த வசைபாடும் ஏஜெண்டுகளுக்கான ஆளெடுப்பும் நடந்து வருகிறது.

    இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குச் சிறப்புத் தகுதிகள் இருக்க வேண்டுமாம், அதாவது, தங்கள் குழந்தைகளை அதிகம் திட்டிக்கொண்டிருக்கும் பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம் அதிலும், தனியாளாகக் குழந்தையை வளர்க்கும் சிங்கிள் பேரெண்ட் ஆக இருப்பது அதி உத்தமம். 

    • நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
    • ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது.

     உக்ரைன் போர்

    அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மேற்கு நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.

    1000 வது நாள்  

    நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு கட்டுப்பாடு இருந்த நிலையில் அதை ஜோ பைடன் தளர்த்திய நிலையில் நேற்றைய தினம் ரஷியா மீது முதல் முறையாக பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

     

    Bryansk

    நேற்று இரவு ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் இருந்த ராணுவக் கிடங்கை தங்களின் ஏவுகணை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலை குறித்து பேசியுள்ள ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவால் வழங்கப்பட்ட 5 ATACMS ஏவுகணைகள் ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] வான்பகுதிக்குள் வந்ததாகவும் அவற்றை தாங்கள் அழித்ததாகவும், அதில் ஒரு ஏவுகணையின் சேதமடைந்த பாகங்கள் ராணுவ தளவாடம் அருகே விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் எந்த உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

     

     உலகப் போர்

    முன்னதாக உக்ரைன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா உத்தரவிட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது. மேலும், உக்ரைனுக்கு இந்த அனுமதியை அளித்ததன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் நேரடியாக தங்களுடன் மோதுவதாக ரஷியா கருதும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே போர் தொடங்கி நேற்றைய 1000 வது நாளில் ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத பயன்பாட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளார்.

     

    அணு ஆயுத கொள்கை

    இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.

    இந்த உத்தரவுக்கு வெளிவந்த அதே நாளிலேயே உக்ரைன் பாலிஸ்டிக் தாக்குதல் நடத்தி ரஷியாவை சீண்டியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன்படி ரஷியா அணு ஆயுத்தங்களை பயன்படுத்தினால் அது மனித குல வரலாற்றின் மீது மேலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

    • கூகுள் பிரவுசரை விற்பனை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
    • அமெரிக்க நீதித்துறை கருத்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டது.

    உலகம் முழுவதும் பலரும் தங்களது செல்போன், கணினி, மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களில் பெரிதும் பயன்படுத்துவது கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசரை தான். இந்த நிலையில் கூகுள் பிரவுசரை விற்பனை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த நிலையில், அந்த நீதிபதியின் மூலமாகவே கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய சொல்ல வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை அறிவுறுத்த உள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து அமெரிக்க நீதித்துறை கருத்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டது. சட்ட சிக்கல்களை எல்லாம் கடந்து இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கையை அரசு தரப்பு மேற்கொள்ள முயல்வதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் பயனர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தளபதியுடன் வந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது
    • ஹமாஸ் கடத்திச்சென்ற பணயக் கைதிகள் 250 பேரில் 101 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.

    அக்டோபர் 7 தாக்குதல் 

    கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

    காசா போர் 

    அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முற்றிலுமாக உருக்குலைந்த காசா நகரில் அடிப்படை மருத்துவ வசதிகள், அத்தியாவசிய உணவு என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அகதிகளாக தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். போரை அமெரிக்கா, ஐநா என சர்வதேச அரங்கில் எடுக்கப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.

     பெய்ட் லாஹியா தாக்குதல் 

    இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    நேதன்யாகு விஜயம்  

    இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசா நகருக்கு நேற்று வருகை தந்துள்ளார். கடந்த மாதம் ஈரான் அணு சக்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்ட நேதன்யாகு தெற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் காசாவுக்கு திடீர் வருகை தந்துள்ளது முக்கியத்துவமானதாகப் பார்க்கப்படுகிறது.

     

    இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மற்றும் ராணுவ தளபதியுடன் பாதுகாப்பு கவசம், பாலிஸ்டிக் ஹெல்மெட் சகிதம் காசாவில் நேதன்யாகு சுற்றிப்பார்த்த வீடியோவை இஸ்ரேல் பகிர்ந்துள்ளது.

    பரிசு 

    ஹமாஸ் கடத்திச்சென்ற பணயக் கைதிகள் 250 பேரில் 101 பேர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். எனவே பணய கைதிகளை கண்டுபிடித்து இஸ்ரேலிடம் ஒப்படைப்பவர்களுக்கு ஒவ்வொரு பணய கைதிக்கும் தலா 5 மில்லியன் டாலர்கள் என்ற அடிப்படையில் [இந்திய மதிப்பில் 42 கோடி ரூபாய்] சன்மானம் அளிக்கப்படும் என்று காசா சென்ற நேதன்யாகு அறிவித்துள்ளார்.

    பணய கைதியை எங்களிடம் ஒப்படைக்கும் நபரின் அடையாளம் பாதுகாக்கப்படும். அந்த நபர் குடும்பத்துடன் காசாவில் இருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல இஸ்ரேல் அழைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    உயிருடனோ? பிணமாகவோ?

    மேலும் பணய கைதிகளின் இருப்பிடத்தை அறிந்து அவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அந்த முயற்சிகளைக் கைவிடப்போவதில்லை. அனைத்து பணய கைதிகளையும் உயிருடனோ? பிணமாகவோ? மீட்கும்வரை போரை தொடருவோம். யாரேனும் பணய கைதிகளுக்குத் தீங்கு விளைவிக்க நினைத்தால் அவர்கள் கொல்லப்படுவர் என்று நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 2008-ம் ஆண்டு தொழிலதிபரான ஜவோவை சந்தித்து 2010-ல் திருமணம் செய்து கொண்டார்.
    • வினோத ஆசை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வலைத்தள வாசிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.

    சீனாவை சேர்ந்த தம்பதிக்கு 9 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மேலும் அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனாவை சேர்ந்தவர் தியான். 2008-ம் ஆண்டு தொழிலதிபரான ஜவோவை சந்தித்து 2010-ல் திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்பட தற்போது வரை 9 குழந்தைகள் பிறந்துள்ளது. உடல் பலவீனம் காரணமாக குழந்தை பெறுவதை தள்ளி வைத்துள்ளநிலையில் அந்த தம்பதி மேலும் 4 குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகிறார்கள்.

    இதுகுறித்து தியான் கூறுகையில், என் குழந்தைகளில் 2 பேர் ஒரே ராசிக்காரர்கள், மீதமுள்ள 7 பேர் வெவ்வேறு ராசிகளை கொண்டவர்கள். எனவே சீன சாஸ்திரத்தின்படி 12 ராசிகளை குறிக்கும் வகையில் மேலும் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்வேன் என்றார். மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில் தம்பதியின் இந்த வினோத ஆசை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வலைத்தள வாசிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.

    • பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது.
    • அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசினார்.

    பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்றார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

    நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் சென்ற மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் தொடங்கிய ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்கினார்.

    இந்த மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேசினார்.

    இதனை தொடர்ந்து இன்று மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான கயானாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. 56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானா சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.



    • லிண்டா மெக்மஹோன் தொழில்முறை மல்யுத்த கோடீஸ்வர பெண்மணி ஆவார்.
    • 2017 முதல் 2019 வரை டிரம்ப் ஆட்சிக்காலத்தில் பணியாற்றியுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போது ஜோ பைடன் அரசு அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே ஒவ்வாரு துறைக்கும் அதிகாரிகளை நியமித்து வருகிறார் டொனால்டு டிரம்ப். இந்த நிலையில் கல்வித்துறை செயலாளராக கோடீஸ்வர மல்யுத்த பெண்மணி லிண்டா மெக்மஹோனை பரிந்துரை செய்துள்ளார்.

    மெக்மஹோன் கடந்த டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் 2017 முதல் 2019 வரை சிறு வணிக நிர்வாகத்தை வழிநடத்தினார். இரண்டு முறை குடியரசு கட்சி சார்பில் கனெக்கடிகட்ல் இருந்து செனட்டிற்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    2009-ல் இருந்து கனெக்டிக்கட் கல்வி வாரியத்தில் பல வருடங்கள் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழக அறக்கட்டளை குழுவிழும் பணியாற்றியுள்ளார். டிரம்ப் அகற்றுவதாக உறுதியளித்த அமைப்பின் துறையின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.

    அமெரிக்காவின் கல்வித்துறை செயலாளராக பரிந்துரை செய்யப்பட்டாலும், கல்வி வட்டாரங்களில் தெரியாத முகமாகவே காணப்படுகிறார்.

    • ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

    பிரேசிலியா:

    பிரேசிலில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி அதிபரான ஜெயிர் போல்சனரோவை தோற்கடித்து, இடதுசாரி வேட்பாளரான லுலா டி சில்வா வெற்றிப் பெற்றார். இதையடுத்து, அவரது தலைமையில் புதிய அரசு அமைந்தது.

    இந்த நிலையில் 2022-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் அதிபர் லுலா டி சில்வா தலைமையிலான அரசை கவிழ்க்க பெரும் சதி நடந்தது தற்போது தெரிய வந்துள்ளது. ராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் டி சில்வா, துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோரை படுகொலை செய்யவும் சதி திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.

    இந்த சதி முயற்சி தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் ராணுவ கிடங்கை உக்ரைன் தாக்கியுள்ளது.
    • உக்ரைன் அனுப்பிய 6 ஏவுகணைகளில் 5 ஏவுகணைகளை ரஷியா வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

    ரஷியா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது.

    ஆனால் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க தடைவிதித்திருந்தது. இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரக்தி அடைந்தார். வடகொரியா வீரர்கள் தாக்கும் வரை காத்திருப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஆதரவு வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். இதனால் ஜனவரி 20-ந்தேதி ஜோ பைடன் அதிபர் பதவியில் இருந்து வெளியேற இருக்கிறார்.

    அதற்கு முன்னதாக உக்ரைனுக்கு உதவும் வகையில் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த ஜோ பைடன் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இன்றுடன் உக்ரைன் - ரஷியா போர் ஆரம்பித்து 1000 நாட்கள் நிறைவடைகிறது. இதனையொட்டி முதல்முறையாக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் ராணுவ கிடங்கை உக்ரைன் தாக்கியுள்ளது.

    அமெரிக்காவில் தயாரான நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் அனுப்பிய 6 ஏவுகணைகளில் 5 ஏவுகணைகளை ரஷியா வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ரஷியா சுட்டதில் சேதமடைந்த 6 ஆவது ஏவுகணை ராணுவ கிடங்கில் மேல் விழுந்து அப்பகுதி தீப்பிடித்தது. இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

    ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • இரண்டு மாதங்களில் மட்டும் 1,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி லெபனானை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

    "வெறும் இரண்டே மாதங்களுக்குள் லெபனானில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்ட போதிலும், ஒரு குழப்பமான நடைமுறை வெளிப்பட்டுள்ளது. இந்த வன்முறையை தடுக்க முடிந்தவர்களால் அவர்களின் மரணங்கள் ஏற்பட்டுள்ளன" என்று ஐ.நா. அமைப்பின் குழந்தைகள் நிறுவனமான யூனிசெஃப் (UNICEF) செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் "லெபனானில் கடந்த இரண்டு மாதங்களில், ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்," என்று கூறினார்.

    இஸ்ரேல் தாக்குதலில் சிக்கி கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர். காசாவில் உள்ள பாலஸ்தீன குழுவான ஹமாஸ்-க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    ×