என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.
    • ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.

    பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு செய்தார். இதோடு எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் ஒத்துழைப்பை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

    நைஜீரியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வந்த பிரதமர் மோடி, இங்கு நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி லூலாவை சந்தித்தார்.

    இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், "நாங்கள் எங்கள் நாடுகளுக்கு இடையிலான முழு அளவிலான இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்தோம். எரிசக்தி, உயிரி எரிபொருள்கள், பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    19வது ஜி20 மாநாட்டை பிரேசில் நடத்துகிறது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் லூலாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    • கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்
    • சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது..

    வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரங்களுக்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மத்திய கிழக்கில் செல்வச்செழிப்பான நாடக விளங்கும் சவூதி அரேபியாவில் பலர் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்குச் சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு சனிக்கிழமையன்று சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த வருட மரண தண்டனை எண்ணிக்கை குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்த ஆண்டில் [2024 இல்] இதுவரை மொத்தமாக 274 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதில் 101 வெளிநாட்டவர்கள் ஆவர். இது கடந்த 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை விட இது மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

     

    பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமன் - 20 பேர், சிரியா - 14 பேர், நைஜீரியா - 10, எகிப்து - 9 பேர், ஜோர்டான் - 8 பேர், எத்தியோப்பியா - 7 பேர், சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா 3 பேர், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் கடந்தால் தொடர்பாக வழக்குகள் இந்த ஆண்டு மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.  இந்த ஆண்டு போதைப்பொருள் வழக்குகளில் 92 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதில் 69 பேர் வெளிநாட்டவர்கள். ஒரு வருடத்தில் இந்த அளவிலான எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றுவது இதுவே முதல் முறை.

     

    சவுதி இளவரசர் - முகமது பின் சல்மான் அல் சவுத் 

    முன்னதாக 2023ல் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அரேபியா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த மரண தண்டனைகள் சர்வதேச அரங்கில் கவலையளிப்பதாக உள்ளது.

    • எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்துவேன் என்று டிரம்ப் தெரிவித்தார்
    • டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களைப் பாதிக்கும்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    இவர் கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஆவார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோதமான குடியேறிகள் மீது கடுமையான போக்கை டிரம்ப் கையாண்டார்.

    தொடர்ந்து அமைந்த ஜோ பைடன் ஆட்சியில் சற்று தளர்வான சூழல் நிலவிய நிலையில் தற்போது டிரம்ப் மீண்டும் பதவியேற்றுள்ளது விஷயத்தை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே சட்டவிரோத குடியேற்றம் குறித்து அதிகம் பேசினார்.

     

    சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்சிகோவுடனான எல்லையை உறுதி செய்து நாட்டை பாதுகாப்பேன் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று ட்ரூத் என்ற சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், 'அது உண்மைதான்' என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

     

    அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களைப் பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

    • உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
    • உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது.

    மாஸ்கோ:

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டிருந்தது.

    உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. இதனால் தற்போது இருப்பதை விட சர்வதேச அளவில் பதற்றத்தை இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார் என கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர்

    டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் புதின் இந்தியா வரும் தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    • இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்
    • பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்

    பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் வைத்து 19-வது ஜி 20 உச்சி மாநாடானது நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளனர்.

    அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. தற்போது நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், இத்தாலி, பிரான்ஸ் அதிபர்கள் என உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்தியா சார்பில் சென்ற பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார். இந்நிலையில் ஜி20 மாநாட்டின் ஹைலைட்டாக இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒன்றில் அனைத்து தலைவர்களும் சேர்ந்த எடுத்த குரூப் போட்டோவில் அமெரிக்க அதிபரை காணவில்லை என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

     

     

    ஜோ பைடன் வருதற்கு தாமதமானதால் அவர் புகைப்படத்தில் இருந்து விடுபட்டுள்ளார் என்று மாநாட்டை ஏற்பாடு செய்த பிரேசில் அதிகாரிகள் விளக்கமளித்தாலும், ஜோ பைடன் பதவிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைய உள்ளது என்பதால் அதன் பின்னர் அவரது முக்கியத்துவம் உலக அரங்கில் இருக்காது என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் இருப்பதால் இதை இணையவாசிகள் டிரண்ட் செய்து வருகின்றனர்.

    மற்றொரு புகைப்படம் இந்திய பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ லியோனி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடக்கும் மேஜையில் எதிரெதிரே அமர்ந்து நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் கண்கொட்டாமல் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

     

    மெலோனி மற்றும் மோடி நட்புறவு, கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியில் வைத்து நடந்த ஜி7 மாநாட்டில் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு மெலோனி + மோடி = மெலோடி என்று பொருள்படும்படி அதிபர் மெலோனி சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலானது. எனவே தற்போது ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    மெலோனியை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ""ரியோ டி ஜெனிரோ ஜி 20 மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதை மையமாக வைத்து எங்களது பேச்சுக்கள் அமைந்தன.

    கலாச்சாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம். இந்தியா-இத்தாலி நட்புறவு ஒரு சிறந்த உலக முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்" என்று அதில் பதிவிட்டிருந்தார். 

    • வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சீனாவின் ஹுனான் மாகாணம் சாங்டே நகரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு இன்று காலை குழந்தைகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாகனம் ஒன்று பள்ளி வாசலில் மோதியது. இதில் ஏராளமான குழந்தைகள் காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியிலும், ஆஸ்பத்திரியிலும் குவிந்தனர்.

    வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வாகனத்தை ஓட்டி வந்தது யார் என்பது குறித்தும் போலீசார் தெரிவிக்கவில்லை.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தென் கொரியாவை அதிகாரப்பூர்வமாக எதிரி நாடாக அறிவித்து அதனுடன்
    • தொடர்ச்சியாக வினோதமான சத்தங்களை வட கொரியா ஸ்பீக்கர்கள் ஒளிபரப்பை வருகிறது.

    தென் கொரியாவுடன் பகைமை பாராட்டி வரும் வட கொரியா அணு ஆயுத மிரட்டல், ஏவுகணை சோதனை என உலக நாடுகளை பதற்றத்திலேயே வைத்துள்ளது. சமீப காலமாக ரஷியவுடன் ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம், உக்ரைன் போருக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது என வட கொரியா தனது இருப்பை வெளிப்படுத்தி வருகிறது.

    சமீபத்தில் தென் கொரியாவை அதிகாரப்பூர்வமாக எதிரி நாடாக அறிவித்து அதனுடன் இருந்த அணைத்து எல்லை தொடர்பு சாலைகளைத் துண்டித்து அழித்தது. தென் கொரியாவுக்குள் தங்கள் நாட்டின் குப்பைகள் நிரம்பிய பலூன்களை அனுப்புவது என தொல்லை கொடுத்த வந்த வட கொரியா தற்போது தென் கொரியாவை சீண்ட நூதன வழியை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது.

     

    அதாவது, எல்லைப் பகுதியில் அதிக ஒலிகளை எழுப்பும் ஸ்பீக்கர்களை நிறுவி 24 மணி நேரமும், எல்லைக்கு அந்த புறம் இருக்கும் தென் கொரிய கிராமங்களில் உள்ள மக்களைப் பாடாய் படுத்தி வருகிறது. அமானுஷ்யமான, வினோத ஒலிகளை 24 மணி நேரமும் ஒலிக்கச் செய்வதால் அம்மக்களின் அன்றாட வாழ்வு சீர்குலைந்துள்ளது.

    குறிப்பாக எல்லையில் தென் கொரியாவுக்குள் உள்ள டாங்கன் என்ற கிராமம் இதனால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. கார் விபத்துகள் ஏற்படுவது போன்ற சத்தம், பேய் அலறுவது, உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, ஓநாய்கள் ஊளையிடுதல், பீரங்கித் தாக்குதல் சத்தம் எனதொடர்ச்சியாக வினோதமான சத்தங்களை வட கொரியா ஸ்பீக்கர்கள் ஒளிபரப்பை வருகிறது.

     

    குண்டு ஒன்று தான் வீசவில்லை என்றாலும் அதற்க்கு ஈடாக இந்த சத்தங்கள் தங்களை பைத்தியமாக்குவதாகவும் இரவில் தூக்கமில்லை என்றும் அந்த கிராம மக்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

     

    கடந்த ஜூலை மாதம் முதல் 24 மணி நேரமும் இடைவிடாமல் இதுபோன்ற சத்தம் வந்துகொண்டிருப்பதாக அவர்கள் புலம்பித தவிக்கின்றனர். இந்த சத்தங்கள் [ NOISE BOMBING] தென் கொரியா மீதான வடகொரியாவின் உளவியல் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. 

    • புலனாய்வுத்துறையின் ரகசிய தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
    • அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கில் சுடத் தொடங்கியதால், வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

    பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

    புலனாய்வுத்துறையின் ரகசிய தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டபோது இந்த சண்டை நடைபற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய கமாண்டர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சண்டை கைபர் மாவட்டத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இதில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

    பாதுகாப்புப்படையினர் 8 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சண்டை பல மணி நேரம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சண்டையில் அருகில் இருந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர்.

    • ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளதால் உக்ரைன் அனுமதி.
    • அதிபர் பதவியில் இருந்து விலக இருக்கும் நிலையில் ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல்.

    ரஷியா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது.

    ஆனால் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க தடைவிதித்திருந்தது. இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரக்தி அடைந்தார். வடகொரியா வீரர்கள் தாக்கும் வரை காத்திருப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஆதரவு வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். இதனால் ஜனவரி 20-ந்தேதி ஜோ பைடன் அதிபர் பதவியில் இருந்து வெளியேற இருக்கிறார்.

    அதற்கு முன்னதாக உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த ஜோ பைடன் உத்தரவிட்டதாக நேற்று செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும். இதனால் தற்போது இருப்பதை விட சர்வதேச அளவில் பதற்றத்தை இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என புதின் மாளிகை செய்தி தொடரப்ாளர் தெரிவித்துள்ளார்.

    மோதலின் தன்மை வியத்தகு முறையில் மாற்றமடையும். அதன் அர்த்தம் நேட்டோ நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுடன் போர் நடத்துகிறது என்பதாகும் என புதின் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    • தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

    வாஷிங்டன்:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன.

    அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.

    அந்த வகையில், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ செயற்கைக்கொளை விண்ணில் ஏவியுள்ளது.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் - என்2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

    இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    • போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.
    • உக்ரைன் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 700 பேர் பலியானதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. எனினும் தாக்குதல் குறைந்தபாடில்லை.

    கடந்த சில தினங்களாக உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் மீது 120 ஏவுகணைகள் மற்றும் 90 டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. இன்று அதிகாலையிலும் 210 ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் உக்ரைன் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    ரஷியாவின் ஏவுகணைகளில் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை உக்ரைன் வான்பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். ஒரு சில பகுதிகளில் உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. ரஷியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன் மக்கள், உயிருக்கு பயந்து ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் போன்ற இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்நிலையில் உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் ரஷிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 89 பேர் காயமடைந்தனர் என்று அவசரநிலைகளுக்கான மாநில சேவை தெரிவித்துள்ளது.

    சுமி பிராந்திய ராணுவ நிர்வாகத்தின் தகவல்படி, ஒரு ஏவுகணை மக்கள் வசித்து வந்த ஒன்பது மாடி அடுக்குமாடி கட்டிடத்தைத் தாக்கியது, மற்றொன்று முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்கியது, நகரத்தை மின்சாரம் இல்லாமல் செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இருதரப்பு சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை.
    • ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசினர்.

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உரையாடினார்.

    "ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சி மாநாட்டில் ஜோ பைடனுடன். அவரைச் சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி" என்று மோடி எக்ஸ் பதிவில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில், மோடியும் பைடனும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசினர்.

    பிரேசில் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடி மற்றும் பைடென் இடையேயான இருதரப்பு சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. அடுத்த மாதம் பைடென் அமெரிக்க ஜனாதிபதி பதவியை குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்பிடம் ஒப்படைப்பதற்கு முன், இந்த சந்திப்பு அவர்களின் கடைசி உரையாடலாக இருக்கலாம்.

    நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸிடம் 78 வயதான டிரம்ப் அமோக பெற்றார். டிரம்பின் பதவியேற்பு விழா ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது.

    நைஜீரியாவிற்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி தனது பிரேசில் பயணத்தை தொடங்கிய மோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஜி20 உச்சிமாநாட்டில் வறுமை, பசி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது போன்ற உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர ஜி20 தலைவர்கள் ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் காசாவின் நிலைமை குறித்தும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×