என் மலர்tooltip icon

    உலகம்

    • அதிபர் டிரம்பின் அதிக வரிவிதிப்பு கொள்கை சட்டவிரோதமானது
    • அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதை எதிர்த்த சீனாவுக்கு வரி 145 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மற்ற நாடுகளுக்கான வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சீனா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நிலைமையை சற்று சுமூகமாகியது.

    டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் பல மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டன.

    அதில் அதிபர் டிரம்பின் அதிக வரிவிதிப்பு கொள்கை சட்டவிரோதமானது, இது அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் டிரம்ப் தன்னிச்சையாக வரிகளை விதிக்க முடியும் என்று கூறுவது தவறானது. வரிகளை விதிக்க பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    அவசரநிலை, வெளிநாட்டில் இருந்து அசாதாரண அச்சுறுத்தல் இருக்கும்போது மட்டுமே அதிபர் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே வரிவிதிப்பு கட்டணங்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் அவற்றைச் செயல்படுத்துவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த Manhattan வர்த்தக நீதிமன்றம் உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதி உயர் வரி விதிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த வழக்கின் விசாரணையில், "அமெரிக்க ஜனாதிபதிக்கு "வரம்பற்ற" அதிகாரங்களை வழங்கப்படவில்லை. ஒரு அசாதாரண அச்சுறுத்தல் அல்லது அவசரகாலத்தின் போது தேவையான பொருளாதாரத் தடைகளை விதிக்க மட்டுமே ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதிபர் டிரம்ப் தனக்கு இருக்கும் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக" கூறி நீதிபதிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    • அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக டாட்ஜ் என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.
    • அதன் செயல் தலைவராக டெஸ்லா நிறுவன அதிபரான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.

    அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

    அரசு ஊழியர்கள் பணியை விட்டு நீக்குதல், அரசு செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுக்ள்ளார்.

    இது தொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், "சிறப்பு அரசாங்க ஊழியர் என்ற எனது பணிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது; தேவையற்ற செலவினங்களை குறைக்கும் பணியில் ஈடுபட வாய்ப்பளித்த ட்ரம்பிற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    டிரம்பின் புதிய வரி மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பு பத்தாண்டு காலம் முடிவதற்குள், உலக வெப்பநிலை, மிகவும் ஆபத்தான 2 டிகிரி செல்சியசை எட்டும் வாய்ப்பு உள்ளது.
    • ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பிரதேசம், மற்ற பகுதிகளை விட 3.5 மடங்கு வேகமாக வெப்பமடைந்து உருகும்.

    இந்தியாவில் அக்னி நட்சத்திர வெயில் நேற்று முடிவடைந்தது. இந்த நேரத்தில், உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளுக்கான வானிலை கணிப்பை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அடுத்த 5 ஆண்டுகளில், வருடாந்திர வெப்பநிலை புதிய உச்சம் தொடுவதற்கு 80 சதவீத வாய்ப்பு இருக்கிறது. மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச வெப்பநிலை வரம்பை மீண்டும் மீறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. நடப்பு பத்தாண்டு காலம் முடிவதற்குள், உலக வெப்பநிலை, மிகவும் ஆபத்தான 2 டிகிரி செல்சியசை எட்டும் வாய்ப்பு உள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசை தாண்ட 86 சதவீத வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளது.



    கார்னெல் பல்கலைக்கழக பருவநிலை விஞ்ஞானி நடாலி மஹோவால்டு. இந்த கணிப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அவர் கூறுகையில், மிதமிஞ்சிய வானிலைக்கான காரணமாக வலுவான சூறாவளிகள், வலுவான மழைப்பொழிவு, வறட்சி ஆகியவை ஏற்படும். இதன் காரணமாக உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

    இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி மையத்தின் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி பிரிவின் தலைவர் ரிச்சர்டு பெட்ஸ் கூறுகையில், ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பிரதேசம், மற்ற பகுதிகளை விட 3.5 மடங்கு வேகமாக வெப்பமடைந்து உருகும். அதனால் கடல் நீர்மட்டம் உயரும். உலகளாவிய வெப்பநிலை, ஒரு நகரும் படிக்கட்டில் மேலே ஏறுவது போல் உயருகிறது என்றார்.

    • 2023 ஆம் ஆண்டு முதல் ஷியாமலா புறாக்களுக்கு உணவு வழங்கி வந்துள்ளார்.
    • புறாக்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தினர்.

    சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷியாமலா என்ற மூதாட்டிக்கு ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பறவை, விலங்குகளுக்கு வனவிலங்கு மேலாண்மை துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று உணவளிக்க வேண்டும் என அந்நாட்டு சட்டம் கூறுவதால் ஷியாமலாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷியாமலா புறாக்களுக்கு உணவு வழங்கி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அப்போது அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறாமல் வனவிலங்குகளுக்கு உணவு அழிப்பது சட்டவிரோதம் என்று அவரிடம் தெரிவித்த அதிகாரிகள் புறாக்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

    இதன் பிறகும், 2024 நவம்பர் வரை ஷியாமலா பலமுறை புறாக்களுக்கு உணவளித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், பிப்ரவரி 19 அன்று, ஷியாமலா தனது வீட்டிற்கு அருகில் புறாவை பிடிக்க முயற்சி செய்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    புறாக்களுக்கு அனுமதி பெருமாள் உணவு அளித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • சீனாவின் மின்சார காரான ‘பைட்’ நிறுவன உற்பத்தி ஆலை பிரேசிலில் அமைந்துள்ளது.
    • இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    பிரேசிலியா:

    சீனாவின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான 'பைட்' நிறுவன உற்பத்தி ஆலை பிரேசில் நாட்டின் சாவ் பவுலோ நகரில் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் சீன அதிகாரிகள் மட்டுமே பதவி வகித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், சீன கார் நிறுவனத்தின் மீது தொழிலாளர்கள் நலச்சங்கம் பிரேசிலியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் சீன நிறுவனம் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், குறிப்பிட்ட பணி நேரத்தைவிட அதிக நேரம் பணிபுரிய கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சீன கார் நிறுவன வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரிக்க உள்ளது. அந்த நிறுவனத்தை நாட்டில் இருந்து முழுவதுமாக அகற்ற அரசு வக்கீல்கள் நீதிபதிகளைக் கேட்டு கொண்டுள்ளனர்.

    • அதிபர் டிரம்ப் கல்வி, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
    • அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் சேர்கின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளார்.

    அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் சேர்கின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள்.

    இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்களை நிறுத்திவைக்கும்படி அந்நாட்டு வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார்.

    விசா கோரியுள்ள மாணவர்களின் பேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன், டிக்டாக் சமூக வலைதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதில் பயங்கரவாத ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு பதிவுகள் காணப்பட்டால், அவர்களின் விசா மறுக்கப்பட வாய்ப்புள்ளது.

    • காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஏற்கனவே முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.

    காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் சீனியர் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் பேசும்பேது நேதன்யாகு, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பட்டியலில் சின்வார் பெயரையும் சேர்த்து தெரிவித்தார்.

    முகமது சின்வார், யாஹ்யா சின்வாரின் சகோதரர் ஆவார். யாஹ்யா சின்வார், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர். இவர் கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

    • 1989 முதல் 2014 வரை இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • மயக்க மருந்து கொடுத்து சிறுமகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    20 ஆண்டுகளுக்கு மேலாக 299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கான பிரான்ஸ் நீதிமன்றம், 74 வயதான முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது.

    ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் 200 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு நான்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. 1989 முதால் 2014 வரை ஜோயல் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளா். மயக்கமடைந்த அல்லது மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் சராசரி வயது 11 ஆகும். இதில் 158 பேர் சிறுவர்கள். 141 பேர் சிறுமிகள் ஆவார்கள்.

    • ஆப்பிரிக்காவில் இருந்த ஐரோப்பிய பகுதிக்கு செல்ல ஸ்பெயின் தீவுக்கூட்டங்களை முக்கிய வழியாக பயன்படுத்துகின்றனர்.
    • அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    மொரோக்கா அருகே உள்ள ஸ்பெயினின் கேனரி தீவுக்கூட்டங்களின் துறைமுகத்தை நோக்கி சிறிய படகில் புலம்பெயர்ந்த ஒரு கும்பல் வந்து கொண்டிருந்தது. இந்த கும்பல் வந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் 4 பெண்கள், 3 சிறுமிகள் என 7 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    சிறிய படகில் 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தது விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் மீட்புப்படை அதிகாரிகள் பெரும்பாலனவரை காப்பாற்றியுள்ளனர். இந்த விபத்து கரையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் நடந்துள்ளது.

    ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய பகுதிகளுக்கு சட்டவிரோதமாக புலம்பெயரக் கூடியவர்கள் ஸ்பெயின் தீவுக்கூட்டம் கடல்வழியை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் ரப்பர் படகு மற்றும் சிறிய வகையில் படகு மூலம் ஆபத்தான நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும்போது இந்த விபத்தை சந்திக்கிறார்கள். இந்த விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது.
    • மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றார்.

    ரஷியவாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவைத் தேடும் வகையில் ஜெலென்ஸ்கி ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.

    போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையில் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் ரஷியாவின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் உக்ரைனுக்கு மேலும் இராணுவ ஆதரவை பெறும் வகையில் இன்று ஜெலன்ஸ்கி ஜெர்மனி சென்றார். அங்கு தலைநகர் பெர்லினில் புதிய ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸை சந்திக்கிறார்.

    அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களுக்கு ஜெர்மனியும் பிற முக்கிய நட்பு நாடுகளும் இனி எந்த வரம்பு கட்டுப்பாடுகளையும் விதிக்கபோவதில்லை என்று மெர்ஸ் திங்களன்று கூறினார்.

    மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றதில் இருந்து மெர்ஸ், போர்நிறுத்தத்தைப் கொண்டுவரவும், உக்ரைனுக்கு மேற்கத்திய ஆதரவை அதிகரிக்கவும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    • மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.
    • இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இது தொடர்பாக தூதரகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் இருந்து ஈரானுக்குச் சென்ற மூன்று இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    காணாமல் போன மூன்று பேர் ஹுஷான்பிரீத் சிங் , ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே 1 ஆம் தேதி தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் காணாமல் போனார்கள்.

    "ஈரானுக்குப் பயணம் செய்த பின்னர் தங்கள் உறவினர்கள் காணாமல் போனதாக மூன்று இந்தியர்களின் குடும்பத்தினர் இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர். தூதரகம் இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது.

    காணாமல் போன இந்தியர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது" என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தினர்.
    • விமான நிலைய முனையம் மற்றும் ஓடுபாதை கடுமையாக சேதம் அடைந்தது.

    ஹவுதி போராளிகளை குறிவைத்து ஏமனின் சனா விமான நிலையத்தின் மீது இரண்டாவது முறையாக இன்று தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுத்திகள் இஸ்ரேல் மீது பல ஏவுகணைகளை வீசி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும்  இல்லை.

    கடந்த மே 6 அன்று சனாவில் உள்ள விமான நிலையத்தை இஸ்ரேல் கடைசியாகத் தாக்கியது.

    இதில் விமான நிலைய முனையம் மற்றும் ஓடுபாதை கடுமையாக சேதம் அடைந்தது. அதைத்தொடர்ந்து மே 17 அன்று சனாவிற்கு சில விமானங்கள் மீண்டும் தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ×