என் மலர்
உலகம்

மாணவர் விசா நேர்காணல் நிறுத்தம்: அமெரிக்கா வெளியுறவு மந்திரி
- அதிபர் டிரம்ப் கல்வி, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
- அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் சேர்கின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் சேர்கின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள்.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்களை நிறுத்திவைக்கும்படி அந்நாட்டு வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார்.
விசா கோரியுள்ள மாணவர்களின் பேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன், டிக்டாக் சமூக வலைதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதில் பயங்கரவாத ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு பதிவுகள் காணப்பட்டால், அவர்களின் விசா மறுக்கப்பட வாய்ப்புள்ளது.
Next Story






