என் மலர்
உலகம்
- ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாலஸ்தீனிய தூதர் பங்கேற்றார்.
- காசாவின் நிலையை எடுத்துரைக்கும்போது அவர் கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.
நியூயார்க்:
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான தகவலின்படி உணவு மற்றும் மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், உணவு வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டது. உணவு வாகனங்கள் செல்லாவிட்டால் பல ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பாலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், காசாவில் குண்டுவெடிப்பு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே மக்கள் தவிப்பதாக தெரிவித்தார்.
அப்போது மனம் உடைந்து கதறி அழுத அவர், தனக்கும் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். காசா குழந்தைகளின் நிலையைப் பார்க்க முடியவில்லை. காசாவின் குழந்தைகள் அண்டை நாடுகள் உள்ளிட்ட இடங்களிலும், அகதிகள் முகாமிலும் வாழ்வதைப் பார்க்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
- இது புளூட்டோவை விட மூன்று மடங்கு சிறியதாகவும் இருக்கிறது.
- கிரகத்திற்கு தற்போது 'பிளானெட் நைன்' (ஒன்பதாவது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நாம் வாழும் இந்த பூமி மற்றும் இதர கோள்கள் சூரியனை ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.
ஒரு காலத்தில் சூரியன் உள்பட 7 கிரகங்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில், விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சி காரணமாக, சூரிய மண்டலத்திலேயே அதிக தொலைவில் அமைந்துள்ள சனி கிரகத்திற்கும் அப்பால், யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இன்றும் புளூட்டோ கிரகத்திற்கும் அப்பால் கிரகங்கள் உள்ளதா? அவற்றில் உயிரினங்கள் வாழ்கிறதா? என்ற விஞ்ஞானிகளின் சந்தேகம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.
1930 ஆம் ஆண்டில், வானியலாளர்கள் பிளானட் 'எக்ஸ்' ஐத் தேடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் புளூட்டோவைக் கண்டு பிடித்தனர். அதன் ஒரு பகுதியாக தற்போது புளூட்டோ கிரகத்தையும் தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் ஒரு பெரிய மற்றும் மர்மமான கிரகம் நமது பார்வையிலிருந்து விலகி பதுங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த கிரகத்திற்கு தற்போது 'பிளானெட் நைன்' (ஒன்பதாவது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம், அமெரிக்கா நியூஜெர்சியின் மேம்பட்ட ஆய்வு நிறுவன விஞ்ஞானி சிஹோவோ செங் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இந்த புதிய கிரகம் தோராயமாக 700 கி.மீ. அகலம் கொண்டது. இது புளூட்டோவை விட மூன்று மடங்கு சிறியதாகவும் இருக்கிறது.
ஆனால் ஒரு கிரகம் என்று கருதப்படும் அளவுக்கு பெரியதாக உள்ளதாகவும், எனினும் இது ஒரு குள்ள கிரகமாகக் கருதப்படும் என்று சிஹாவோ செங் கூறினார்.
இந்த கிரகம் தற்போது பூமியிலிருந்து நெப்டியூனை விட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது. மேலும் அதன் மிக நீளமான சுற்றுப்பாதை பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட 1,600 மடங்கு அதிகமாக நகர்ந்து, சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள பனிக்கட்டி பாறைகளின் வளையத்திற்குள் செல்கிறது.
இந்த கிரகம் கடந்த காலத்தில் நமது சூரியனைத் தவிர வேறு நட்சத்திரங்களைக் கடந்து சென்றிருக்கலாம் என்று செங் கூறினார். அதன் 25,000 ஆண்டு சுற்றுப்பாதையில், இந்தப் பொருள் பூமிக்கு அருகில் இருப்பதால், சுமார் 0.5 சதவீதம் நேரம் மட்டுமே காணப்படுகிறது, அதாவது தோராயமாக ஒரு நூற்றாண்டு இது ஏற்கனவே மங்கலாகி வருகிறது என்று அவர் கூறினார்.
ஜேம்ஸ் வெப், ஹப்பிள் மற்றும் அல்மா தொலைநோக்கிகள் மூலம் தங்கள் கண்டுபிடிப்பைச் சுட்டிக் காட்ட ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆனால் 23 வயதான சாம் டீன் என்ற வானியலாளர், பழைய தரவுத்தொகுப்புகள் மூலம் இந்த புதிய கிரகத்தை கண்காணித்துள்ளார்.
இந்த கிரகம் கடந்த தசாப்தத்தில் வெளிப்புற சூரிய மண்டலத்தில் மிகவும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
"பெரிய தொலை நோக்கிகள் பிரபஞ்சத்தின் விளிம்பிற்கு கிட்டத்தட்ட பார்க்கக்கூடிய ஒரு சகாப்தத்தில் நாம் இருக்கி றோம். ஆனால் அதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது பெரும்பாலும் தெரியவில்லை என்று செங் கூறினார்.
- கனமழையால் மோக்வா நகர் தத்தளித்த நிலையில், அணை உடைந்து நீர் புகுந்தது.
- ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால், நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமையை மேலும் மோசமாக்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பலமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் மோக்வா நகர் வெள்ளத்தில் தத்தளித்த நேரத்தில், அணை உடைந்து தண்ணீர் நகருக்குள் புகுந்ததால் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது. கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- துருக்கியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
உக்ரைன்- ரஷியா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் இருநாட்டு அதிகாரிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இருநாடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த நிலையில் வருகிற திங்கட்கிழமை 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷியா பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை உக்ரைன் ஏற்றுக்கொள்ளுமா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் டாப் ஆலோசகர், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் டாப் ஆலோசகர் ஆண்ட்ரிய் யெர்மக் கூறியதவாது:-
அடுத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொள்ள உக்ரைன் தயாராக இருக்கிறது. ஆனால், நாங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறோம். இதன் அர்த்தம், ரஷியாவின் நிபந்தனையை பெறுவது முக்கியமானது. இன்னும் மூன்று நாட்கள் உள்ளது. நிபந்தனைக்கான வரைவை தயாரித்து அனுப்புவதற்கு போதுமான நேரம் உள்ளது.
இவ்வாறு யெர்மார்க் தெரிவித்துள்ளார்.
3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரும்புகிறார். முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா வழங்கியது.
மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் பெறுவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என ரஷியா முக்கிய நிபந்தனையாக முன் வைக்கிறது. அதேவேளையில் ரஷியா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த விரும்புகிறது. உக்ரைன் நாட்டின் பகுதிகளை மேலும் கைப்பற்ற விரும்புகிறது என மேற்கத்திய நாடுகள் ரஷியாவை குற்றம்சாட்டி வருகின்றன.
- வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்களும் கசிந்தன.
- கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்பெயர்கள் (Username) மற்றும் கடவுச்சொற்கள் (password) ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் அங்கீகார URL களைக் கொண்ட பாதுகாப்பற்ற தளம் ஆன்லைனில் கண்டறியப்பட்டது.
இதுமட்டுமின்றி, வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இந்தத் தளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது சைபர் குற்றவாளிகளால் எளிதில் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்கி உள்ளது.
அபைபர் குற்றவாளிகள், வணிக ஆவணங்களைத் திருடவும், பெருநிறுவனங்களை உளவு பார்க்கவும், ரான்சம்வேர் தாக்குதல்களைத் நடத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்ஃபோஸ்டீலர் மால்வேர்:
இந்தத் தரவு இன்ஃபோஸ்டீலிங் மால்வேர் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லம்மா ஸ்டீலர் போன்ற மால்வேர்களை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
மேலும் இத்தகைய மால்வேர் தனிப்பட்ட சாதனங்களைப் பாதித்து, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள், குக்கீகளை திருடுகிறது
பயனர்களுக்கு எச்சரிக்கை
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃபிக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஒரே பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் கணக்குகளை அணுகினால், அவர்கள் ஆன்லைன் மோசடி, அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.
எனவே தரவு மீறல்களிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வழி இல்லை என்றாலும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்தத் தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து வருகின்றனர்.
- ஸ்கேனர் அடையாளம் காணும் வரை அவர் தனது மேக்கப்பை துடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
- அப்பெண்ணும் சங்கடத்துடன் மேக் அப்பை துடைக்கிறார்.
விமான நிலைய ஸ்கேனர் அடையாளம் காண முடியாத அளவுக்கு இளம் பெண் ஒருவர் மேக் அப் போட்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்கேனர் அடையாளம் காணும் வரை அவர் தனது மேக்கப்பை துடைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்துள்ளது
அந்த வீடியோவில், விமான நிலைய ஊழியர் ஒருவர், அப்பெண் பாஸ்போர்ட் புகைப்படம் போல இருக்கும் வரை, அவரது மேக்கப்பை அகற்றுமாறு அறிவுறுத்துகிறார். அப்பெண்ணும் சங்கடத்துடன் மேக் அப்பை துடைக்கிறார்.
இந்த வீடியோவுக்கு பலரும் கமென்ட் செய்து அப்பெண்ணை கலாய்த்து வருகின்றனர்.
இருப்பினும், கடலை முத்து ரொம்ப ஸ்டிரிக்ட் என்பது போல அதிகாரிகளின் நடவடிக்கை இருப்பதாக அபிப்ராயப்படுகின்றனர்.
- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
- அதிபரின் முடிவுக்கு தடை விதிப்பது ஆபத்தான போக்கு என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி பரஸ்பர வரி விதித்தும்,கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும் உத்தரவிட்டார்.
மேலும் பல நாடுகளின் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயார்க் நகரில் உள்ள சர்வதேச வர்த்தக கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று கூறி உலக நாடுகளின் மீதான பரஸ்பர வரி விதிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கடுமையாக விமர்சனம் செய்தார். அரசின் வரி விதிக்கும் முறைக்கு தடை விதிப்பது நீதித்துறையின் அத்துமீறல் என்று விமர்சனம் செய்தார். மேலும் தேர்வு செய்யப்படாத நீதிபதிகள் அதிபரின் முடிவுக்கு தடை விதிப்பது ஆபத்தான போக்கு என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து அதிபர் டிரம்ப் நிர்வாகம் சார்பில் அந்நாட்டு உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது.
வரி விதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மேலும் வரிவிதிப்பை நிறுத்தி வைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவித்து உச்சநீதிமன்றம் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தற்காலிக அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
- அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, தாக்குதலுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கிறார்.
- யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட ஈரான் மறுத்தது.
ஈரானை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, தாக்குதலுக்கு எதிராக டிரம்ப் எச்சரிக்கிறார். இது குறித்து டிரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வந்தன. இதைத்தொடர்ந்து ஈரானுடனான பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயில் இருக்கும் நேரத்தில், ஈரானை தாக்குவது பொருத்தமற்றது என்று டிரம்ப் நெதன்யாகுவிடம் கூறினார்.
ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. ஆனால் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்று முன்னர் கூறியது, ஆனால் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட மறுத்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு பாடம் புகட்ட தயாராக இருந்தோம்.
- Su - 30 MKI போர் விமானங்கள் மூலம் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல் மே 10 சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து அஜர்பைஜான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "கடந்த 10ம் தேதி காலை 4.30 மணி தொழுகைக்கு பிறகு இந்தியாவுக்கு பாடம் புகட்ட தயாராக இருந்தோம். ஆனால் அதற்கு முன்பாகவே இந்தியா எங்களை தாக்கிவிட்டது.
நீண்டதூர சூப்பர்சோனிக் பிரமோஸ் குரூஸ் வகை ஏவுகணைகளை வைத்து தாக்கியது. ராவல்பிண்டி விமான தளம் உட்பட பாகிஸ்தானின் பல இடங்களை குறி வைத்து தாக்கியது. அதன் பிறகு இது பற்றி எனக்கு ராணுவ தளபதி அசிம் முனீர் தகவல் சொன்னார்'' என்று தெரிவித்தார்.
பிரமோஸ் என்பது ரஷியாவுடன் சேர்ந்து இந்தியா தயாரித்த அதிநவீன ஏவுகணை ஆகும். மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா மொத்தம் 15 பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியதாகி கூறப்படுகிறது. Su - 30 MKI போர் விமானங்கள் மூலம் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டன.
ராவல்பிண்டியில் உள்ள நுர்கான் விமான தளம் உட்பட மொத்தம் 11 இடங்கள் இதில் குறிவைக்கப்பட்டன.
- வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
- கலீதா ஜியா மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்றனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் புதிய இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய அரசாங்கம் போலீசாரை களம் இறக்கியதை தொடர்ந்து சுமார் 200 பேர் இறந்தனர். இதனால் வன்முறை தீவிரமான நிலையில் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் நேற்று பெரும் பேரணி நடத்தினர்.
தலைநகர் டாக்காவில் சாலையில் குவிந்த அவர்கள் கட்சிக் கொடிகளை ஏந்தியும், பதாகைகளை சுமந்தபடியும் சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- லோயர் மன்ஹாட்டனில் இந்திய திருமண ஊர்வலம் நடைபெற்றது.
- இதில் பங்கேற்ற இந்தியர்கள் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட தெருக்களில் ஊர்வலமாகச் சென்று நடனமாடினர்.
வாஷிங்டன்:
இந்திய கலாசாரத்தில் திருமணங்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. கொண்டாட்டங்கள் அதிகம் நிறைந்த திருமணமாக இருக்கும். மணமகன், மணமகள் ஊர்வலங்களில் ஆட்டம் பாட்டத்திற்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கும்.
இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த இந்திய திருமணம் ஒட்டுமொத்த அமெரிக்காவை வியக்க வைத்துள்ளது.
நியூயார்க்கில் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்டில் இந்த திருமணத்திற்காக ஒரு பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
லோயர் மன்ஹாட்டனில் நடந்த இந்த மணமகன் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சுமார் 400-க்கும் மேற்பட்டோர் வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட தெருக்களில் ஊர்வலமாகச் சென்று நடனமாடினர்.
பாரம்பரிய இந்திய உடை அணிந்திருந்த இவர்கள், டிஜே பாடல் போட உற்சாகமாக நடனமாடிக் கொண்டே சென்றனர். டிஜே ஒரு வண்டியில் அமர்ந்து கொண்டு பாடல்களைப் போட, ஊர்வலத்தில் இருந்த அனைவரும் ஆட்டம் போட்டனர். இந்த ஊர்வலம் வால் ஸ்ட்ரீட்டை இந்தியத் திருமணம் நடக்கும் இடத்தை போலவே மாற்றிவிட்டது.
மணமகன், மணமகளையும் தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டனர். இதை அங்கிருந்த அமெரிக்கர்கள் வியப்போடு பார்த்தனர். சுமார் 400 பேர் பங்கேற்ற இந்த ஊர்வலத்திற்காக வால் ஸ்ட்ரீட்டே கொஞ்ச நேரம் முடங்கியது என்றால் மிகையல்ல.
- நான்கு பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
- இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்கொரியாவில் 4 பேருடன் சென்ற கடற்படைக்கு சொந்தமான ரோந்து பயிற்சி விமானம், திடீரென விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பி-3 என்ற ரோந்து விமானம் தென்கிழக்கு நகரான போஹாங்கில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என் கப்பற்படை தெரிவித்துள்ளது.






