என் மலர்
உலகம்

VIDEO: ஏர்போர்ட்டில் அடையாளம் தெரியாத அளவுக்கு மேக் அப்.. பாஸ்போர்ட் படம் போல வரும் வரை துடைத்த பெண்
- ஸ்கேனர் அடையாளம் காணும் வரை அவர் தனது மேக்கப்பை துடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
- அப்பெண்ணும் சங்கடத்துடன் மேக் அப்பை துடைக்கிறார்.
விமான நிலைய ஸ்கேனர் அடையாளம் காண முடியாத அளவுக்கு இளம் பெண் ஒருவர் மேக் அப் போட்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்கேனர் அடையாளம் காணும் வரை அவர் தனது மேக்கப்பை துடைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்துள்ளது
அந்த வீடியோவில், விமான நிலைய ஊழியர் ஒருவர், அப்பெண் பாஸ்போர்ட் புகைப்படம் போல இருக்கும் வரை, அவரது மேக்கப்பை அகற்றுமாறு அறிவுறுத்துகிறார். அப்பெண்ணும் சங்கடத்துடன் மேக் அப்பை துடைக்கிறார்.
இந்த வீடியோவுக்கு பலரும் கமென்ட் செய்து அப்பெண்ணை கலாய்த்து வருகின்றனர்.
இருப்பினும், கடலை முத்து ரொம்ப ஸ்டிரிக்ட் என்பது போல அதிகாரிகளின் நடவடிக்கை இருப்பதாக அபிப்ராயப்படுகின்றனர்.
Next Story






