என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கிரகம்"

    • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.
    • இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ள கோள்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டு புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கோளுக்கு 'சா 1107 - 7626' என்று பெயர் சூட்டினார்கள். வழக்கமாக ஒரு கோள் என்பது ஏதாவது ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும்.

    நாம் வாழும் பூமி எனப்படும் கோளானது, சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.

    மேலும், இந்த கோளானது வளி மண்டலத்தில் தூசு மற்றும் மற்ற பொருட்களின் மோதல்கள் காரணமாகவோ அல்லது அந்த பொருட்கள் ஒன்றாக இணைவதன் மூலமாகவோ உருவாகவில்லை என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கோளானது கிடைத்த பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வருகிறது. இப்படி அனைத்து பொருட்களையும் விழுங்கும் வகையில் இந்த கோள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த கோள் ஒவ்வொரு வினாடியும் தனது சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் தூசி மற்றும் வாயு பொருட்களை விழுங்கி வருகிறது. இந்த கோள் விழுங்கும் பொருட்களின் அளவு மற்றும் வேகம் ஆகியவற்றை இதுவரை பார்த்ததில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

    பொதுவாக, நட்சத்திரங்களை சுற்றும் கோள்கள் மட்டுமே இதுபோன்று பொருட்களை தனக்குள் சேர்த்து வளர்ச்சி அடையும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கருதினார்கள்.

    ஆனால் விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாக பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வளர்வதை பார்ப்பது இதுதான் முதல் முறை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    இந்த 'சா 1107 - 7626 ' கோளின் தீவிர வளர்ச்சியானது, நட்சத்திரங்கள் உருவாகும்போது நடப்பது போலவே அதன் காந்தபுலத்தால் தூண்டப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

    இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய கோளின் நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இது புளூட்டோவை விட மூன்று மடங்கு சிறியதாகவும் இருக்கிறது.
    • கிரகத்திற்கு தற்போது 'பிளானெட் நைன்' (ஒன்பதாவது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    நாம் வாழும் இந்த பூமி மற்றும் இதர கோள்கள் சூரியனை ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

    ஒரு காலத்தில் சூரியன் உள்பட 7 கிரகங்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில், விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சி காரணமாக, சூரிய மண்டலத்திலேயே அதிக தொலைவில் அமைந்துள்ள சனி கிரகத்திற்கும் அப்பால், யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இன்றும் புளூட்டோ கிரகத்திற்கும் அப்பால் கிரகங்கள் உள்ளதா? அவற்றில் உயிரினங்கள் வாழ்கிறதா? என்ற விஞ்ஞானிகளின் சந்தேகம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை.

    1930 ஆம் ஆண்டில், வானியலாளர்கள் பிளானட் 'எக்ஸ்' ஐத் தேடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் புளூட்டோவைக் கண்டு பிடித்தனர். அதன் ஒரு பகுதியாக தற்போது புளூட்டோ கிரகத்தையும் தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் ஒரு பெரிய மற்றும் மர்மமான கிரகம் நமது பார்வையிலிருந்து விலகி பதுங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த கிரகத்திற்கு தற்போது 'பிளானெட் நைன்' (ஒன்பதாவது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கடந்த வாரம், அமெரிக்கா நியூஜெர்சியின் மேம்பட்ட ஆய்வு நிறுவன விஞ்ஞானி சிஹோவோ செங் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இந்த புதிய கிரகம் தோராயமாக 700 கி.மீ. அகலம் கொண்டது. இது புளூட்டோவை விட மூன்று மடங்கு சிறியதாகவும் இருக்கிறது.

    ஆனால் ஒரு கிரகம் என்று கருதப்படும் அளவுக்கு பெரியதாக உள்ளதாகவும், எனினும் இது ஒரு குள்ள கிரகமாகக் கருதப்படும் என்று சிஹாவோ செங் கூறினார்.

    இந்த கிரகம் தற்போது பூமியிலிருந்து நெப்டியூனை விட மூன்று மடங்கு தொலைவில் உள்ளது. மேலும் அதன் மிக நீளமான சுற்றுப்பாதை பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட 1,600 மடங்கு அதிகமாக நகர்ந்து, சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள பனிக்கட்டி பாறைகளின் வளையத்திற்குள் செல்கிறது.

    இந்த கிரகம் கடந்த காலத்தில் நமது சூரியனைத் தவிர வேறு நட்சத்திரங்களைக் கடந்து சென்றிருக்கலாம் என்று செங் கூறினார். அதன் 25,000 ஆண்டு சுற்றுப்பாதையில், இந்தப் பொருள் பூமிக்கு அருகில் இருப்பதால், சுமார் 0.5 சதவீதம் நேரம் மட்டுமே காணப்படுகிறது, அதாவது தோராயமாக ஒரு நூற்றாண்டு இது ஏற்கனவே மங்கலாகி வருகிறது என்று அவர் கூறினார்.

    ஜேம்ஸ் வெப், ஹப்பிள் மற்றும் அல்மா தொலைநோக்கிகள் மூலம் தங்கள் கண்டுபிடிப்பைச் சுட்டிக் காட்ட ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் 23 வயதான சாம் டீன் என்ற வானியலாளர், பழைய தரவுத்தொகுப்புகள் மூலம் இந்த புதிய கிரகத்தை கண்காணித்துள்ளார்.

    இந்த கிரகம் கடந்த தசாப்தத்தில் வெளிப்புற சூரிய மண்டலத்தில் மிகவும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

    "பெரிய தொலை நோக்கிகள் பிரபஞ்சத்தின் விளிம்பிற்கு கிட்டத்தட்ட பார்க்கக்கூடிய ஒரு சகாப்தத்தில் நாம் இருக்கி றோம். ஆனால் அதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது பெரும்பாலும் தெரியவில்லை என்று செங் கூறினார்.

    நாசாவின் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். #NASA #TESS #planets
    பாஸ்டன்:

    அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது.

    இந்த செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். இக்கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

    இதற்கு எச்டி 21749 பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் அருகே அதிக வெளிச்சத்துடன் கூடிய நட்சத்திரம் காணப்படுகிறது. இது குளிர்ச்சியான கிரகம்.


    பூமியை விட 3 மடங்கு பெரியதாக உள்ளது. இந்த கிரகத்தில் பாறைகள் உள்ளன.

    எனவே உயிரினங்கள் வாழ தகுதியுடையவை. இங்கு அதிகளவில் கியாஸ் நிரம்பியுள்ளது. நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை போன்று அடர்த்தியான வளி மண்டலத்தால் ஆனது. இங்கு அதிக அளவு நைட்ரஜன் வாயு உள்ளது. எனவே இங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டயானா டிரகோமர் தெரிவித்துளார்.

    ‘டி.இ.எஸ்.எஸ்.’ விண்கலம் கடந்த 3 மாதங்களில் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. #NASA #TESS #planets
    சூரியன் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது. #NewPlanet

    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது.

    இது சூரியனிடம் இருந்து 2 சதவீத சக்தியை கிரகித்து கொள்கிறது. இதன் மேற்பரப்பில் மைனஸ் 160 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரினங்கள் வாழமுடியாது. ஏனெனில் அங்கு திரவ நிலையில் தண்ணீர் இல்லை.

    தண்ணீர் அல்லது வாயு இருந்தால் திட நிலையில் தான் இருக்கும். அவை உறைந்த நிலையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #NewPlanet

    ×