என் மலர்
உலகம்
- ஐ.நா மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இந்த புதிய GHF அமைப்பை நிராகரித்துள்ளன.
- இஸ்ரேல் மக்களை கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாக உணவைப் பயன்படுத்த இந்த GHF அனுமதிக்கிறது.
உதவி மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 48 பேர் காயமடைந்தனர் என்று காசா அதிகாரிகள் தெரிவித்தனர்
கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களும் செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்தது. இதனால் அங்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில் பேரழிவை ஏற்படுத்தும் பஞ்சத்தை காசா எதிர்கொள்வதாக சர்வதேச சமூகம் கவலை தெரிவித்தது.
இதைடுத்து கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை எதிர்த்து கூட்டாக அறிக்கை விட்டன. தொடர்ந்து வழங்கப்பட்ட அழுத்தத்தால் காசாவுக்குள் சொற்ப அளவிலான உதவிகளை அனுப்ப இஸ்ரேல் வழிவிட்டது.
பல நாட்களாக பட்டினியையும், அத்தியவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் பற்றாக்குறையையும் எதிர்கொண்ட காசா மக்கள், தங்களுக்கு கிடைக்கும் சொற்ப அளவிலான உதவிப் பொருட்களை பெற்றுக்கொள்ள சாரை சாரையாக உதவி மையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
இந்த சூழலில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஆதரவு அறக்கட்டளை Gaza Humanitarian Foundation (GHF) காசா பகுதியில் அமைக்கப்பட்ட புதிய உதவி விநியோக மையத்தை ஆக்கிரமித்த கூட்டத்தின் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார். மேலும் 48 பேர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன பிரதேசங்களுக்கான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைவர் அஜித் சுங்கை ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் இந்த் துப்பாக்கிசூட்டால் 47 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்க, இஸ்ரேல் பின்னணியில் இயங்கும் GHF அமைப்பு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையை மற்ற அமைப்புகளில் இருந்து கையகப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஹமாஸ் பொருட்களைத் பெறுவதை தடுக்க GHF வலையமைப்பை நிறுவ இஸ்ரேல் உதவியதாகக் கூறுகிறது, நான்கு மையங்களை நிறுவியுள்ளதாக GHF கூறுகிறது, அவற்றில் இரண்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த உதவி மையங்களுக்கு வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பாக ஆயுதமேந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஐ.நா மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இந்த புதிய GHF அமைப்பை நிராகரித்துள்ளன. இது காசாவின் 2.3 மில்லியன் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்றும், இஸ்ரேல், மக்களை கட்டுப்படுத்த ஒரு ஆயுதமாக உணவைப் பயன்படுத்த இந்த GHF அனுமதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
ஐ.நா. மற்றும் பிற மனிதாபிமான குழுக்கள் GHF இன் அமைப்பில் பங்கேற்க மறுத்துவிட்டன. இந்த அமைப்பு மனிதாபிமானக் கொள்கைகளை மீறுவதாகக் கூறின. சில விநியோக மையங்களுக்கு மக்களை நகர்த்துமாறு கட்டாயப்படுத்துவதன் மூலம் மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்ய இஸ்ரேலால் இது பயன்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- அதன் பிரமிக்க வைக்கும் நீல நீர்நிலைகள், வெள்ளை மணல் நிறைந்த கடற்கரைகள் மற்றும் எரிமலைப் பகுதிகளுக்குப் பெயர் பெற்றது.
- இரண்டு வகையான விசா இல்லாத நுழைவு வசதிகளைப் பெறலாம்.
உலகின் கடைக்கோடியில் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் உள்ளது. அதன் பிரமிக்க வைக்கும் நீல நீர்நிலைகள், வெள்ளை மணல் நிறைந்த கடற்கரைகள் மற்றும் எரிமலைப் பகுதிகளுக்குப் பெயர் பெற்றது.
இங்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்னம் இருப்பர். இந்நிலையில் இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு வழங்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தின்படி, இந்திய பயணிகள் இரண்டு வகையான குறுகிய கால விசா இல்லாத நுழைவு வசதிகளைப் பெறலாம். இருப்பினும், இவை வெவ்வேறு தகுதி அளவுகோல்களைக் கொண்டுள்ளன.
14 நாள் விசா இல்லாத நுழைவு:
இந்தப் பிரிவின் கீழ், இந்திய குடிமக்கள் சுற்றுலா நோக்கங்களுக்காக மட்டும் எந்த விசாவும் இல்லாமல் பிலிப்பைன்ஸில் 14 நாட்கள் வரை தங்கலாம். இருப்பினும், இந்த விசா இல்லாத நுழைவை நீட்டிக்க முடியாது, அல்லது வேறு வகையான விசாவாக மாற்றவும் முடியாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
30 நாள் விசா இல்லாத நுழைவு:
இந்த வகை விசா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் போன்ற சில முக்கிய நாடுகளிலிருந்து ஏற்கனவே செல்லுபடியாகும் விசாக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பு அனுமதிகளை வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கு 30 நாள் விசா இல்லாத தங்குதலை வழங்குகிறது.
மேற்கூறிய விசா இல்லாத நுழைவுக்கு இந்திய பயணிகள் தகுதி பெறவில்லை என்றால், அவர்கள் இ-விசா வழியைப் பயன்படுத்தலாம் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக பிலிப்பைன்ஸ் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- கடந்த சில வாரங்களாக நடந்து வரும் கொலைகள் மற்றும் பசி பட்டினி எனது பார்வையை மாற்றியுள்ளன.
- பொறுப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட அரசாங்கக் கொள்கையின் விளைவாகும். ஆம், இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்கிறது.
காசா பகுதியில் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்து வருவதாக முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் செய்தித்தாளான ஹாரெட்ஸில் அவர் எஹுட் ஓல்மெர்ட் ஒரு கட்டுரையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசாங்கத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த கட்டுரையில் எஹுட் ஓல்மெர்ட் கூறுவதாவது,
"இஸ்ரேலுக்கு எதிராக சுமத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளை கடந்த ஒரு வருடமாக நான் பகிரங்கமாக மறுத்து வந்தேன். ஆனால் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் கொலைகள் மற்றும் பசி பட்டினி எனது பார்வையை மாற்றியுள்ளன.
காசாவில் நாம் நடத்துவது ஒரு அழிவுகரமான போர். சாதாரண மக்கள் கண்மூடித்தனமாக, கட்டுப்பாடுகள் இல்லாமல், கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இதற்கு ஒரு சில வீரர்களின் நடத்தை காரணமல்ல. இது வேண்டுமென்றே, தெரிந்தே, தீங்கிழைக்கும் நோக்கத்துடன், பொறுப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட அரசாங்கக் கொள்கையின் விளைவாகும். ஆம், இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்கிறது.
முதலாவது காசாவைப் பட்டினி போடுவது. கொள்கையின் ஒரு பகுதியாக, காசா மக்களுக்கு உணவு மற்றும் மருந்தை நாம் மறுக்கிறோம்.
பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்காக நேதன்யாகு பதில்களை மறைக்க முயற்சிக்கிறார். இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் சிலர் வெளிப்படையாக, பெருமையுடன் கூட, ஆம், நாங்கள் காசாவைப் பட்டினி போடுகிறோம் என்று கூறுகிறார்கள்.
காசாவின் சுமார் 20 லட்சம் மக்களை முற்றிலுமாக அழிப்பதில் எந்த தார்மீக அல்லது இராணுவ நியாயமும் இல்லை" என்று ஓல்மெர்ட் அந்தக் கட்டுரையில் தெரிவித்தார்.
- 30 நிமிடங்களுக்குள் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
- எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வியடைந்தது.
டெக்சாஸிலிருந்து ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குள் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த ராக்கெட் இறுதியில் இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
எரிபொருள் கசிவு காரணமாக ராக்கெட் ஏவுதல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டான் ஹவுட் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.
முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற முந்தைய ஏழாவது ஸ்டார்ஷிப் ஏவுதல் சோதனையும், மார்ச் 6 அன்று நடைபெற்ற எட்டாவது சோதனையும் தோல்வியடைந்தன.
மார்ச் 6 அன்று எட்டாவது சோதனையின் போது ஸ்டார்ஷிப் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அருகிலுள்ள நான்கு விமான நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. 240 விமானங்கள் பாதிக்கப்பட்டன.
- நான் மட்டும் இல்லையென்றால் ரஷியாவிற்கு நிறையமோசமான விஷயங்கள் நடந்திருக்கும்
- புதின் பைத்தியமாகி விட்டார் என்று டிரம்ப் தெரிவித்தார்
ரஷிய அதிபர் புதின் நெருப்போடு விளையாடுகிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக பதவியில் டிரம்ப் கூறியதாவது, "நான் மட்டும் இல்லையென்றால் ரஷியாவிற்கு நிறையமோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை விளாடிமிர் புடின் உணரவில்லை. நான் சொல்வது மிகவும் மோசமானது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நெருப்போடு விளையாடுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், பல உக்ரேனிய நகரங்களில் ரஷிய விமானப்படை நடத்திய கடுமையான தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதின் பைத்தியமாகி விட்டார் என்று டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 55 வயதானகாமி ரீட்டா, நேற்று அதிகாலை 4 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்தார்.
- 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.
காத்மாண்டு:
நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் இமயமலையில் வாழும் பழமையான இனக்குழுவாகும். இன்றளவும் இவர்களே எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள்.
அப்படி மலையேற்ற வழிகாட்டியான காமி ரீட்டா என்ற நேபாளி, எவரெஸ்ட் மலையேற்றத்தில் 31-வது முறையாக சிகரம் தொட்டு புதிய சாதனை படைத்து இருக்கிறார். 55 வயதான அவர், நேற்று அதிகாலை 4 மணிக்கு எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். இதன் மூலம் அவர் 31-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார்.
இந்த முறை அவர், லெப்டினன்ட் கர்னல் மனோஜ் ஜோஷி தலைமையிலான இந்திய ராணுவ சாகசப் பிரிவு வீரர்களை மலையேற்றத்தில் வழிநடத்திச் சென்றார்.
- பிரான்சில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா நடந்தது.
- சிறந்த இயக்குனருக்கான விருது ஈரான் இயக்குனர் ஜாபர் பனாஹிக்கு வழங்கப்பட்டது.
டெஹ்ரான்:
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா நடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.
திரைப்பட விழாவின் இறுதியில் சிறந்த இயக்குனருக்கான 'பாம் டி ஓர்' விருது ஈரானிய இயக்குனர் ஜாபர் பனாஹிக்கு வழங்கப்பட்டது. ஈரான் திரைப்பட இயக்குனர் ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதை வாங்குவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையே, ஈரான் இயக்குனருக்கு கேன்ஸ் திரைப்பட விருது வழங்கப்பட்டதற்கு பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி 'இது ஒரு விபத்து' என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.
இந்நிலையில், பிரான்ஸ் மந்திரியின் இந்தக் கருத்துக்கு ஈரான் அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் ஈரான் நாட்டுக்கான பிரான்ஸ் வெளியுறவு தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
- தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக கூறி எதிர்க்கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டது.
கராகஸ்:
வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.
54 கட்சிகள் கலந்துகொண்ட இந்த தேர்தலை அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வெனிசுலாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன.
மொத்தம் 285 உறுப்பினர்களைக் கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் சோசியலிஸ்ட் கட்சியினர் 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், மாகாணங்களில் 24 இடங்களில் 23 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் அந்நாட்டின் புதிய அதிபராக நிகோலஸ் மதுரோ மீண்டும் தேர்வாகி பதவியேற்க உள்ளார்.
- காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.
- .2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டது.
கார்டோம்:
காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2,700க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு காணப்பட்டுள்ளது.
தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின. ஆனால் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூடானின் சுகாதார மந்திரி ஹைதம் இப்ராஹிம் கூறுகையில், கடந்த 4 வாரங்களில் கார்டோம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை காலரா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
- ரசாயன தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகினர்.
பீஜிங்:
சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டம் நடந்தது.
- ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாகப் புகுந்ததில் பலர் காயம் அடைந்தனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நேற்று பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. அப்போது ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாகப் புகுந்தது.
இதில் காயமடைந்தவர்களில் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிய காயங்களுடன் மேலும் 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வெளியிட்டுள்ள செய்தியில், லிவர்பூலில் நடந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் ஆதரவாக இருப்போம். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்திற்கு விரைவாகவும், தொடர்ந்தும் செயல்பட்ட போலீசார் அவசர சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். போலீசார் விரிவான விசாரணை நடத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன.
- நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து குடிவரவு துறை (Immigration) பெண் அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் இந்தியர்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குடியேற்றத் தகவல்களைக் கேட்டு இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் திறக்கப்படுவதில்லை என்றும், அவை Spam (போலி) ஆக கருதப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அனைத்தும் குடியேற்றப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கேட்கும் மின்னஞ்சல்கள்.
ஆனால் அவர்களின் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை. நான் அதைத் திறந்து பார்ப்பதில்லை. அவை Spam போன்றது" என்று கூறினார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது.
"அமைச்சர் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களைத் தனிமைப்படுத்துகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.






