என் மலர்
உலகம்
- ஜெர்மனியில் நடுவானில் சென்றபோது விமானம் குலுங்கியது.
- இதனால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெர்லின்:
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து ரியானேர் என்ற விமானம் புறப்பட்டது. இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்தனர்.
நடுவானில் சென்றபோது பலத்த புயல் காற்று வீசியது. அப்போது விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகள் இருக்கை மீது மோதினர்
இதனால் பீதியடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து, விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி பவேரியாவின் மெம்மிங்கன் விமான நிலையம் அருகே விமானம் வட்டமிட்டது. பின்னர் விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் 185 பேரும் உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவத்தில் பணியாளர் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதனையடுத்து பவேரியா விமான நிலையத்தில் இருந்து விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டது. எனவே பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டார்.
- டிரம்ப் வரி விதிப்புக்கு எதிராக சீனாவும் வரி விதித்தது. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக சீனாவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டொலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். டிரம்ப் 2ஆவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் ஜி ஜின்பிங் உடன் முதன்முறையாக பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங், டொனால்டு டிரம்ப் தங்களுக்கு நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் டொனால்டு டிரம்பும், ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள எதிர்மறையான நடவடிக்கைகளைத் திரும்பப் பெற டிரம்பிடம் ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
- 2024ஆம் ஆண்டில் 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன.
- 2023ஆம் ஆண்டை காட்டிலும் 5.7 சதவீதம் குறைவாகும்.
ஜப்பானில் எதிர்பார்க்கப்பட்டதை விட 2024ஆம் ஆண்டு புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் அதிக அளவில் குறைந்துள்ளதாக அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2024-ல் 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2023ஆம் ஆண்டை விட 5.7 சதவீதம் குறைவாகும். 1899ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக குழந்தைகள் பிறப்பு 7 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப்பின், குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் 27 லட்சம் குழந்தைகள் பிறந்தன. அதில் நான்கில் ஒரு பகுதிதான் தற்போது பிறந்துள்ளது.
அதிகரித்து வரும் வயது மூப்பு மற்றும் சுருங்கி வரும் மக்கள் தொகை ஆகியவை ஜப்பானின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைத்தன்மை குறித்து கவலை அடையச் செய்துள்ளது.
இந்த சூழ்நிலை அமைதியான எமர்ஜென்சி எனத் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, திருமண தம்பதிகள் வேலை மற்றும் குடும்பத்தை பேலன்ஸ் செய்து கொள்ளும் வகையில் வேலை செய்யும் இடத்தில் மேலும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும், மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ஆகிய நாடுகளில் வயது மூத்த மக்கள் தொகையை அதிகமாகவும், குழந்தை பிறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவிலும் கொண்ட நாடாக ஜப்பான் மாறியுள்ளது. தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள குடும்பங்களை ஊக்குவிக்க கடுமையாக போராடி வருகின்றன. வியட்நாம் நேற்று, இரண்டு குழந்தைகள் என்ற சட்டத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
- இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள பிரைலுகி நகர் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்ததாக வியாசெஸ்லாவ் சாஸ் கவர்னர் தெரிவித்துள்ளார். 5 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
6 டிரோன்கள் பிரைலுகி பகுதியில் இன்று அதிகாலை தாக்கியது. இதில் பல குடியிறுப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் கிழக்கு உக்ரைன் நகரான கார்கீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண், குழந்தைகள் உள்பட 17 பேர் காயம் அடைந்துள்ளனர். இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை டிரோன் தாக்கியது. இதில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.
சில தினங்களுக்கு முன் உக்ரைன் ரஷியாவின் விமானத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பல விமானங்கள் சேதடைந்தன.
- 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்ட நிலையில், 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு 7ஆம் தேதி திடீரென இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அத்துடன் உயிரிழந்த சிலரின் உடல்களையும் எடுத்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசா முனை உருக்குலைந்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனார்.
பேச்சுவார்த்தை மூலம் இரண்டு முறை இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸ் பிடியில் இன்னும் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். தற்போது காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய வருகிறது. பாதுகாப்பு பகுதிகளை அதிகரிப்பதற்காக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜூடி வெயின்ஸ்டெயின் (70), கட் ஹக்காய் (72) ஆகிய இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
கணவன் மனைவிகளாக இவர்கள் கிப்புட்ஸ் நிர் ஓஸ் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் நடைபயணம் மேற்கொண்ட போது ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக்கொலை செய்து உடல்களை எடுத்துச் சென்றுள்ளனர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் கொல்லப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டது.
இருவருடைய உடல்களும் மீட்கப்பட்ட நிலையில் பெஞ்சமின் நேதன்யாகு "இஸ்ரேலின் அனைத்து மக்களுடன் நானும், எனது மனைவியும் இணைந்து, அவர்களுடைய அன்பான குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் பயங்கரமான இழப்பால் எங்கள் இதயங்கள் வேதனையடைகின்றன. அவர்களில் நினைவு ஆசீர்வதிக்கப்படட்டும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜூடி வெயின்ஸ்டெயின், கட் ஹக்காய் ஆகிய இருவரும் அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.
- 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறுகிறார்கள்.
- கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும்.
எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறும் தீர்க்க தரிசிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்களில் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவும் ஒருவர்.
இவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பற்றி கூறியது பலமுறை உண்மையாகி உள்ளது. இந்நிலையில் ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைய தொடங்கினார். அவர் 1980 முதல் தெளிவான கனவுகளை வரைய தொடங்கிய நிலையில் இது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்ததாக கூறப்படுகிறது. 1991-ம் ஆண்டு பிரெட்டி மெர்குரியின் மரணம், 1995-ம் ஆண்டு கோபே நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி, 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறுகிறார்கள்.

அதன்பிறகே அவர் முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக அங்கீகரிக்கப்பட்டதோடு அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் வரைந்த மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த ஆண்டு (2025)-ம் ஜூலை மாதத்தில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார்.
இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார். இதனால் மீண்டும் சுனாமி ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் ரியோ டட்சுகியின் கணிப்பு தொடர்பாக ஜப்பான் அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரம் ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இயற்கை பேரழிவு குறித்து தங்கள் நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுத்தியுள்ளது.
ரியோ டட்சுகியின் இந்த கணிப்பு காரணமாக ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஜப்பானுக்கான விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரியோ டட்சுகியின் கணிப்பு காரணமாக தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
- தேச பாதுகாப்பு கருதி இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
- அமெரிக்காவுக்குள் 7 நாட்டினருக்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிர தமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி 12 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், மியான்மர் , சாட், காங்கோ, இகுவடோரியல் கினியா, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்கு வர அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த தடை உத்தரவு வருகிற 9-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பயணத் தடையை அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டார்.
அதில் அவர் கூறும்போது, கொலராடோவில் நடந்த சமீபத்திய தாக்குதல், முறையாக சரிபார்க்கப்படாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினரின் தீவிர ஆபத்துகளை விளக்குகிறது. இதனால் பல நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு உள்ளேன். வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் நுழைந்து அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்க முடியாது என்றார்.
மேலும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகேல் ஜாக்சன் கூறும் போது, அமெரிக்காவுக்கு மிக அதிகமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நாடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த வகையில் 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
நமக்கு பிரச்சினையை விளைவிக்க விரும்பும் வெளிநாட்டு நபர்களிடம் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பேன் என்று நான் வாக்குறுதி அளித்து இருந்தேன். இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறேன் என்றார்.
இதற்கிடையே ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர் விசாக்களை கட்டுப்படுத்தும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
- சுதந்திரம் என்பது அமெரிக்கா போன்றவர்களிடமிருந்து பச்சைக்கொடிக்காகக் காத்திருக்கக் கூடாது.
- சிலர் பகுத்தறிவு என்றால் அமெரிக்காவிற்கு பணிந்து அடக்குமுறை சக்திக்கு சரணடைவது என்று நினைக்கிறார்கள்.
அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளைத் தொடர முடிவு செய்தனர்.
இருப்பினும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட ஆரம்ப திட்டத்தில் அவர் அதிருப்தி தெரிவித்தார். அமெரிக்க திட்டம் தனது நாட்டின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானது என்று அவர் கூறினார்.
"நாடு நூறு அணு மின் நிலையங்களை கட்டினாலும், அந்த நாடு பொருளாதார செழிப்பை அடையவில்லை என்றால், அந்த ஆலைகளால் எந்தப் பயனும் இருக்காது. மீண்டும் நிதியுதவிக்காக அமெரிக்காவை அணுக வேண்டியிருக்கும்" என்று கமேனி கூறினார்.
இருப்பினும், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அவர் முழுமையாக நிராகரிக்கவில்லை. அமெரிக்காவால் வழங்கப்பட்ட திட்டத்தில்
ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான அம்சங்களை வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
ஈரானின் எரிசக்தி சுதந்திரதுடன் இருப்பதற்கு யுரேனியம் செறிவூட்டல் முக்கியமானது. ஈரான் யுரேனியன் செறிவூட்டல் செய்ய வேண்டுமா இல்லையா என்பதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்? நீங்கள் எந்தக் கருத்தையும் கூற முடியாது.
சுதந்திரம் என்பது அமெரிக்கா போன்றவர்களிடமிருந்து பச்சைக்கொடிக்காகக் காத்திருக்கக் கூடாது. சிலர் பகுத்தறிவு என்றால் அமெரிக்காவிற்கு பணிந்து அடக்குமுறை சக்திக்கு சரணடைவது என்று நினைக்கிறார்கள்; இது பகுத்தறிவு அல்ல" என்று தெரிவித்தார்.
- குவா பியூட்டி' என்ற அவரது கணக்கில் 12,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
- லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.
அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து பிரபலமான தைவான் பெண் 24 வயதில் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.
குவா பியூட்டி' என்ற அவரது கணக்கில் 12,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
ஆபத்தான இரசாயனங்கள் கொண்ட அழகுசாதனப் பொருட்களை உட்கொண்டதற்காக அவர் மீது சமூக ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் அவரது மரணச் செய்தியை குடும்பத்தினரே சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். திடீர் உடல்நலக் குறைவால் அவர் மே 24, 2025 அன்று இறந்ததாக அவர்கள் வெளியிட்ட தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது.
- பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 8,500 கோடி) நிதியுதவி கிடைத்தது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) சமீபத்தில் சுமார் 800 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,800 கோடி) நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வாதத்தின்படி, பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆபத்தான முறையில் பலவீனமடைந்து வருகிறது.
பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வரி வருவாய் 2018 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டில் அது வெறும் 9.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதார பாதிப்பின் பிரதிபலிப்பாகும்.
இதுபோன்ற சூழ்நிலையில், சர்வதேச நிதியமைச்சகம் மற்றும் ADB போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பதிலாக இராணுவத் தேவைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு திருப்பிவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மாதம், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 8,500 கோடி) நிதியுதவி கிடைத்தது. அப்போதும் இந்தியாவும் தனது ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- விடுதலைப் போராட்டம், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்டது.
- 'விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்' ஆக்கப்பட்டுள்ளனர்.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 'தேசத்தந்தை' என்ற பட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது.
சமீபத்தில் புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இருந்து முஜிபுர் ரஹ்மானின் உருவப்படம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால அரசாங்கம் 'தேசிய சுதந்திரப் போராட்ட கவுன்சில் சட்டத்தில்' திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக உருவாவதற்குக் காரணமானவிடுதலைப் போராட்டம், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்டது.இது ஒரு தனி நாட்டை உருவாக்க வழிவகுத்தது.
விடுதலை காலத்தில் வங்கதேச அரசாங்கத்தில் இருந்தவர்கள், சுதந்திரப் போராளிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் தற்போது இடைக்கால அரசால், 'விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்' ஆக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் முஜிபுர் ரஹ்மானின் தேசத்தந்தை பட்டம் நீக்கப்பட்டாலும், அவரின் சுதந்திரப் போராட்ட வீரர் அந்தஸ்து தக்கவைக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
- அதிபர் டிரம்ப் இந்தியா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.
இந்தியாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவை எரிச்சலடையச் செய்துள்ளதாக அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) எட்டாவது கூட்டத்தில் லுட்னிக், அதிபர் டிரம்ப் இந்தியா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.
இருப்பினும் ரஷியாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை வாங்குவது, டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயல்படுவது போன்ற சில விஷயங்கள் அமெரிக்காவை எரிச்சலடையச் செய்ததாக தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.






