என் மலர்
உலகம்
- கைபர் பக்துன்வாவில் உள்ள குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
- இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில் இதில் ஈடுபட்டார்.
- அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
அமெரிக்க அரசியலையும், உலகப் பிரபலங்களையும் உலுக்கி வரும் 'எப்ஸ்டீன் கோப்புகள்' விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
உலக பணக்காரரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் இந்தக் கோப்புகளில் இருப்பதாகவும், அதனால்தான் அவை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் எக்ஸ் தளத்தில் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் இன்று (ஜூன் 7) அந்த பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், 'எப்ஸ்டீன் கோப்புகள்' குறித்த கேள்விகள் வலுத்துள்ளன.

யார் இந்த எப்ஸ்டீன்?
ஜெஃப்ரி எப்ஸ்டீன், அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு நிதியாளர். பெரும் நிறுவனங்களுக்கு நிதி திரட்டித் தரும் பணியில் ஈடுபட்டு, பல பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ஆனால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறைக்கும், சமூக அந்தஸ்துக்கும் பின்னால், கிரிமினல் உலகமே இருந்தது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, எப்ஸ்டீன் மீது இளம் சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அவருக்குச் சொந்தமான 'லிட்டில் செயிண்ட் ஜேம்ஸ்' என்ற கரீபியன் தீவில், பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அங்கு பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவாகின.
2008-ல் எப்ஸ்டீனுக்கு மிகக் குறுகிய காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ல் மேலும் கடுமையான பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க் சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார். அவரது மரணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இன்று வரை ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

டொனால்டு டிரம்ப் உடன் ஜெஃப்ரி எப்ஸ்டீன்
'எப்ஸ்டீன் கோப்புகள்'
ஜெஃப்ரி எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அவருடைய தொலைபேசி அழைப்பு பதிவுகள், விமானப் பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், அவருடன் தொடர்பு கொண்ட பிரபலங்களின் பட்டியல் ஆகியவை 'எப்ஸ்டீன் கோப்புகள்' என அழைக்கப்படுகின்றன.
இந்த கோப்புகளில் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபல கலைஞர்கள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாகவே சந்தேகங்கள் நிலவி வருகின்றன. இந்த கோப்புகள் வெளியானால், பலரின் இமேஜ் அடியோடு சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், "உண்மையைச் சொல்கிறேன்... டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறார். அதனால்தான் அந்த ஆவணங்கள் பொதுவில் பகிரப்படவில்லை.
இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், எதிர்காலத்தில் உண்மை வெளிவரும்" என்று நேரடியாக குற்றம்சாட்டினார். ஆனால் அந்த பதிவை அவர் நீக்கியுள்ளது மேலும் சந்தேகங்களேயே எழுப்பியுள்ளது. ஏற்கவே பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் டிரம்ப் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, எலான் மஸ்கின் இந்தக் குற்றச்சாட்டுகளை டிரம்ப் நிராகரித்துள்ளார். "மஸ்க் ஒரு பைத்தியக்காரன்" என்றும், எப்ஸ்டீனின் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். எப்ஸ்டீன் வழக்கு விசாரணைக்கு அதிகாரிகளுக்கு தான் உதவியதாகவும் டிரம்ப் கூறினார்.
- முஜாஹிதீன் பிரிகேட்ஸ் என்ற பாலஸ்தீன ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கிப்புட்ஸில் உள்ள நான்கில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர் அல்லது பணயக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியான நட்டாபாங் பின்டா (Nattapong Pinta) என்பவரின் உடலை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
நட்டாபாங் பின்டாவின் உடல், 'முஜாஹிதீன் பிரிகேட்ஸ்' என்ற பாலஸ்தீன ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், காசாவின் தெற்குப் பகுதியான ரஃபா நகரில் இருந்து அது மீட்கப்பட்டதாகவும் காட்ஸ் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்குத் தாய்லாந்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயியாகப் பணிபுரிந்த பின்டா, காசா எல்லைக்கு அருகே உள்ள 'நிர் ஓஸ் கிப்புட்ஸ்' என்ற சிறு சமூகத்தில் இருந்து கடத்தப்பட்டார். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில், இந்தக் கிப்புட்ஸில் உள்ள நான்கில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர் அல்லது பணயக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.
நட்டாபாங் பின்டா உயிருடன் கடத்தப்பட்டதாகவும், பின்னர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்ட மேலும் இரண்டு இஸ்ரேலிய-அமெரிக்க பிணைக் கைதிகளின் உடல்களும், அதே ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. முஜாஹிதீன் பிரிகேட்ஸ் தரப்பில் இருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.
அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 251 பேர் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டனர். இவர்களில் 55 பேர் இன்னும் காசாவில் இருப்பதாகவும், அவர்களில் சுமார் 20 பேர் உயிருடன் இருக்கலாம் என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கையில் காசாவில் 54,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்ததாகவும் காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
- மஸ்க் தனது சுயநினைவை இழந்துவிட்டார்.
- சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்தது.
எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், மஸ்க் தனது சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட ஒருவருடன் தன்னால் பேச முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் செய்தியாளர் சந்திப்பில் பபேசிய டிரம்ப், தற்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், தற்போது எலோன் மஸ்க்குடன் பேசத் திட்டமிடவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் கூறியிருந்தார்.
டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவருக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் மஸ்க் வலுயுறுத்தியுள்ளார்.
- ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது.
- இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.
இதற்கிடையே ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.
மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
இதுபற்றி குறிப்பிட்ட டிரம்ப், உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மந்திரிசபையின் பிரதிநிதிகள் வருகிற 9-ந்தேதி லண்டனில் சீன மந்திரிசபை பிரதிநிதிகளை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் வருகிற 9-ந்தேதி லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டம் மிக சிறப்பாக நடக்க வேண்டும்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
- முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இல் வெளியிடப்பட்டன.
- இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம்
கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஆபத்தான வைரஸ், மனித குலத்தை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வௌவால்களில் காணப்படும் 'HKU5' என்ற துணை வகை வைரஸ், ஒரு சிறிய மரபணு மாற்றத்துடன் மனித செல்களுக்குள் நுழைந்து, அடுத்த உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வட கரோலினா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான இந்த ஆய்வின் விவரங்கள், முன்னணி அறிவியல் இதழான 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இல் வெளியிடப்பட்டன
வாஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் (WSU) தலைமையிலான ஆய்வின்படி, HKU5 வைரஸ்கள் மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸும் அதே ACE2 ஏற்பியைப் பயன்படுத்துகிறது.
இந்த HKU5 வைரஸ், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) உடன் நெருங்கிய தொடர்புடையது. MERS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் சுமார் 34% என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ்கள் ஜப்பானிய வீட்டு வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும், சமீபத்திய ஆய்வுகள் இவை மின்க்ஸ் போன்ற இடைநிலை விலங்குகளுக்கு பரவி வருவதாகக் கூறுகின்றன. இது மனிதர்களுக்கு பரவுவதற்கான முதல் படியாக அமையலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
WSU வைராலஜிஸ்ட் மைக்கேல் லெட்கோ, "இந்த வைரஸ்கள் மனிதர்களுக்குள் நுழைந்ததற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், அதற்கான திறன் உள்ளது. எனவே அவற்றைக் கண்காணிப்பது முக்கியம்" என்று எச்சரித்துள்ளார்.
ஆல்பாஃபோல்ட் 3 போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள், வைரஸ் எவ்வாறு செல்களுடன் தொடர்பு கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் முக்கியப் பங்காற்றி, ஆராய்ச்சி வேகத்தை விரைவுபடுத்தியுள்ளன.
இந்த ஆய்வு, எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் உத்திகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
- உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
ரஷியா, 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இது கடந்த மூன்று ஆண்டுக்கால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) ரஷிய படைகள் உக்ரைனின் ஒன்பது பிராந்தியங்களில் இந்த தாக்குதலை நடத்தியது. கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
இந்த தாக்குதல்களில் கியேவில் மூன்று தீயணைப்பு வீரர்கள், லுட்ஸ்கில் இரண்டு பொதுமக்கள் மற்றும் செர்னிஹிவில் ஒருவர் இறந்ததை உக்ரைனின் அவசர சேவைகள் உறுதிப்படுத்தின. இதன் மூலம் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி "இன்று, நாட்டின் பல பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷியா ஏவிய 400 ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் 80 பேர் காயமடைந்தனர். இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்" என்று கூறினார்.

மேலும், "துரதிர்ஷ்டவசமாக, உலகில் உள்ள அனைவரும் இந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை. புதின் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறார். போரைத் தொடர அவர் நேரத்தை வாங்குகிறார்" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
மறுபுறம், உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
- இங்கிலாந்தின் முதல் பெண் எம்.பி.யாக இருந்தவர் நான்சி ஆஸ்டர்.
- இவர் அணிந்திருந்த வைரக் கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
லண்டன்:
இங்கிலாந்தின் முதல் பெண் எம்.பி. நான்சி ஆஸ்டர். அமெரிக்க வம்சாவளியான இவர் 1919-ல் இங்கிலாந்தின் பிளைமவுத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
அங்கு மது அருந்தும் வயதை 14-ல் இருந்து 18 ஆக உயர்த்துதல், பெண்களின் வாக்குரிமை வயதை 30-ல் இருந்து 21 ஆக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் இவரது பங்கு அளப்பரியது.
எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது கணவர் லார்ட் வால்டோர்ப் ஆஸ்டர் நான்சிக்கு ஒரு கிரீடத்தைப் பரிசாக வழங்கினார். வைரத்தால் செய்யப்பட்ட அந்தக் கிரீடம் காண்போரின் கண்ணை கவரும் வகையில் இன்றும் அழகுடன் மிளிர்கிறது.
இதனை 1931-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் முதன்முறையாக அணிந்திருந்தார். அப்போது பலரது கவனத்தையும் இந்த கிரீடம் ஈர்த்தது.
இந்நிலையில், அவர் அணிந்திருந்த வைர கிரீடத்தை ஏலத்துக்கு விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி லண்டன் அருங்காட்சியகம் சார்பில் பல்வேறு பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட்டன.
இதில் நான்சி ஆஸ்டர் அணிந்திருந்த வைர கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது எதிர்பார்த்ததை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.
- ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
- வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என்றார்.
டாக்கா:
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அங்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
அதன்பின், ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்தது.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேர்தலை உடனே நடத்தாமல் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள யூனுஸ் விரும்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், 2026-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால தலைவர் யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் எந்த நாளிலும் தேர்தல் நடைபெறும் என்பதை குடிமக்களுக்கு அறிவிக்கிறேன். தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
- இரு நாட்டுத் தலைவர்களும் பேசியது குறித்து புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் விளக்கமளித்தார்.
- தொலைபேசி உரையாடல் சுமார் 70 நிமிடங்கள் நீடித்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாகிஸ்தானில் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து மே 7 இல் பாகிஸ்தான் - இந்தியா இடையே ஏற்பட்ட மோதல் மே 9 சண்டை நிருத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இரு நாட்டுக்கு இடையே ஆன சண்டையை வர்த்தகத்தை வைத்து பேசி தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். இதுவரை சுமார் 11 முறை அவர் இவ்வாறு கூறிவிட்டார். ஆனால் இந்தியா அதை மறுத்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் பேசியுள்ளார். இதற்கிடையே இரு நாட்டுத் தலைவர்களும் பேசியது குறித்து புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், "இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் சுமார் 70 நிமிடங்கள் நீடித்தது. ரஷியா - உக்ரைன் மோதலில் தொடங்கியது இந்த உரையாடல். பேச்சுவார்த்தையை முறியடிக்க உக்ரைன் முயற்சித்து வருகிறது.
அப்போது மத்திய கிழக்கு நாடுகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர். அடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் குறித்தும் பேசப்பட்டது. அதிபர் டிரம்பின் தனிப்பட்ட தலையீட்டால் இந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- உதவி மையம் நோக்கி வந்த மக்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது.
- 500 மடங்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
காசா மீது இஸ்ரேல் போரை நிகழ்த்தி வருகிறது. கடந்த மார்ச் முதல் உணவு மற்றும் உதவிப் பொருட்களை தடுத்து வைத்த இஸ்ரேல் உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து சொற்ப அளவிலான பொருட்களை உள்ளே அனுமதித்தது.
ஆனால் அவற்றை வாங்க உதவி மையம் நோக்கி வந்த மக்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. உதவி மையங்களுக்கு சென்றவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. காசாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில் , காசாவில் சொற்ப அளவில் கிடைக்கும் நிவாரண உதவிகளையும் சிலர் அபகரித்துக் கொண்டு, அவற்றை 500 மடங்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பார்லே ஜி பிஸ்கட் காசாவில் 2,342 ரூபாய்க்கு (24 யூரோ) விற்கப்படுகிறது.
ஒரு கிலோ சர்க்கரை ரூ. 4,914 ஆகவும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ, 4,177 , ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ. 1,965 , ஒரு கிலோ ரூ. 4,423 , ஒரு கப் காஃபி ரூ. 1,800 ஆகவும் விற்கப்படுகிறது.
ஒரு புறம் இஸ்ரேல் தாக்குதல், மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி என இரு பக்கங்களிலும் காசா மக்கள் மரணத்தை எதிர்கொண்டுள்ளனர்.
- தான் உதவியிராவிட்டால் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
- சிறுமிகள் பாலியல் துஷ்ப்ரயோக நெட்வொர்க் தொடர்பான வழக்கில் டிரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா தொடர்பாக எலான் மஸ்க் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறார்.
அரசு செயல்திறன் துறை தலைவர் பதவியை துறந்த எலான் மஸ்க், டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தான் உதவியிராவிட்டால் டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் 80% நடுத்தர மக்களின் பிரிதிநிதியாக புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?" என X தளத்தில் எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதன்மூலம் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளாரா என்ற கேள்வி வலுவடைந்துள்ளது.
இதற்கிடையே எப்ஸ்ட்டீன் கோப்புகள் எனப்படும், தொழிலதிபர்கள், பெரும்புள்ளிகள் தொடர்புடைய சிறுமிகள் பாலியல் துஷ்ப்ரயோக நெட்வொர்க் தொடர்பான வழக்கில் டிரம்ப்பும் சம்மந்தப்பட்டுள்ளார் என்று எலான் மஸ்க் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். டிரம்ப் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.






