என் மலர்
உலகம்

பார்லே ஜி - இந்தியாவில் ரூ.5.. காசாவில் ரூ.2,342 - உதவிப் பொருட்கள் 500 மடங்கு அதிக விலையில் விற்பனை
- உதவி மையம் நோக்கி வந்த மக்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது.
- 500 மடங்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
காசா மீது இஸ்ரேல் போரை நிகழ்த்தி வருகிறது. கடந்த மார்ச் முதல் உணவு மற்றும் உதவிப் பொருட்களை தடுத்து வைத்த இஸ்ரேல் உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து சொற்ப அளவிலான பொருட்களை உள்ளே அனுமதித்தது.
ஆனால் அவற்றை வாங்க உதவி மையம் நோக்கி வந்த மக்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொன்றது. உதவி மையங்களுக்கு சென்றவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. காசாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில் , காசாவில் சொற்ப அளவில் கிடைக்கும் நிவாரண உதவிகளையும் சிலர் அபகரித்துக் கொண்டு, அவற்றை 500 மடங்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பார்லே ஜி பிஸ்கட் காசாவில் 2,342 ரூபாய்க்கு (24 யூரோ) விற்கப்படுகிறது.
ஒரு கிலோ சர்க்கரை ரூ. 4,914 ஆகவும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ, 4,177 , ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ. 1,965 , ஒரு கிலோ ரூ. 4,423 , ஒரு கப் காஃபி ரூ. 1,800 ஆகவும் விற்கப்படுகிறது.
ஒரு புறம் இஸ்ரேல் தாக்குதல், மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி என இரு பக்கங்களிலும் காசா மக்கள் மரணத்தை எதிர்கொண்டுள்ளனர்.






