என் மலர்tooltip icon

    உலகம்

    • 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி அறிவிப்பு வெளியிட்டார்.
    • முழு அதிகாரமும் காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) மட்டுமே உண்டு.

    இந்தியாவின் தரம்சாலாவில் தஞ்சமடைந்துள்ள திபெத்திய பௌத்தம மத தலைவரான 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

    குறிப்பாக "சீனாவின் தலையீடு இல்லாமல், தனது வாரிசைத் தேர்வு செய்வதற்கான முழு அதிகாரமும் காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) மட்டுமே உண்டு" என்று தலாய் லாமா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலாய் லாமாவின் வாரிசு சீன மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், சீன சட்டங்கள், மதச் சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளுக்கு இணங்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

    • 20 நிமிடங்களில் 3,000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கி சென்றது.
    • பலர் இன்சூரன்ஸ் விவரங்களையும் வங்கிப் பின் நம்பர்களையும் கூட எழுதி வைத்துள்ளனர்.

    ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் JL8696 (போயிங் 737), ஜூன் 30 அன்று ஷாங்காயில் இருந்து டோக்கியோவிற்குப் 191 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 26,000 அடி கீழே இறங்கியது.

    20 நிமிடங்களில் 3,000 மீட்டருக்கு விமானம் வேகமாக கீழ்நோக்கிச் சென்றதால், ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் தானாக விழுந்தன. பயணிகளும் ஊழியர்களும் பீதியடைந்தனர்.

    பயணிகள் சிலர் உயில் எழுதத் தொடங்கி, அன்பானவர்களுக்கு கடைசி செய்திகளை அனுப்பியுள்ளனர். பலர் இன்சூரன்ஸ் விவரங்களையும் வங்கிப் பின் நம்பர்களையும் கூட எழுதி வைத்துள்ளனர்.

    பதற்றமான சூழ்நிலையிலும், விமானம் ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    விமானத்தின் அழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் பயணிகளுக்கு மன ரீதியான பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    • குண்டு வெடிப்பில் அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
    • இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மேளா மைதானத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அசிஸ்டண்ட் கமிஷனர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும், 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அம்மாகாண முதல் மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குண்டு வெடிப்புக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    • ஈரான் அணுசக்தி திட்டங்களை தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
    • மீண்டும் சீரமைத்து வருவதாக ஈரான் கூறிய நிலையில் ஒத்துழைப்புக்கு தடைவிதித்துள்ளது.

    ஈரான் அணுசக்தி திட்டங்களை மேம்படுத்தி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யூரேனியத்தை செறிவூட்டும் பணியை அதிவேகமாக மேற்கொண்டு வருகிறது எனக் குற்றம்சாட்டியது.

    இதனால் ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த நிலையில்தான் தங்கள் நாட்டிற்கு ஈரானால் அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் அறிவித்து, ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்கா ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆணுஆயுத திட்டங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தெரிவித்தது.

    சுமார் 12 நாட்களுக்குப் பின் போர் நிறுத்தம் ஏற்பட்டது. தற்போது ஈரான் அணுஆயுத திட்டங்களை சீரமைப்பு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு சஸ்பெண்ட் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார். ஈரான் பாராளுமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

    • மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவ வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார்.
    • அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிழைலயில், நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்கு போடப்பட்டது.

    வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வங்கதேசத்தில் திடீரென மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்னர் மாணவர்கள், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வன்முறையில் ஈடுபட்டனர். அவரது மாளிகையை முற்றுகையிட்டனர்.

    இதனால் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா திரும்பிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்தார்.
    • பின்னர் இந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.

    இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

    இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை| அமெரிக்க செனட் நிறைவேற்றியது.

    கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. 2024-25 நிதியாண்டில் இந்தியா - ரஷ்யா இடையே 68.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது.
    • சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி உள்ளது.

    அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தகுதி வாய்ந்ததாக மாற்றும் விதியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது. சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி உள்ளது.

    தற்போது சர்வதேச மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தங்கள் முழுநேர மாணவர் அந்தஸ்தை கடைபிடித்தால் அவர்கள் படிப்பு முடியும் வரை அமெரிக்காவில் தங்கலாம். இதை முன்னரே தீர்மானிக்கப்பட்ட தங்கும் காலத்திற்கு மாற்ற டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதனால் விசாவில் ஒரு நிலையான காலாவதி தேதியுடன் சர்வதேச மாணவர்கள் அடிக்கடி விசா நீட்டிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். இது கூடுதல் தேவையற்ற தாமதங்கள், நிதிச் சுமை மற்றும் மாணவர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள் மீது பாய்ந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தூதரகம் கூறும்போது, இஸ்கான் கோவில் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அனைத்து பக்தர்களுக்கும், சமூகத்திற்கும் துணைத் தூதரகம் முழு ஆதரவை வழங்குகிறது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    • குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.
    • பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.

    இதில் இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க மந்திரி மார்கோ ரூபியோ, ஜப்பான் மந்திரி தகேஷி இவாயா, ஆஸ்தி ரேலிய மந்திரி பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

    அதில், "பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் மீது எந்த தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தங்கள் கடமைகளுக்கு இணங்க, இந்த விஷயத்தில் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் தீவிர மாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காசா மீதி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
    • மத்திய கிழக்கின் நன்மைக்காக ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் என்று நான் நம்புகிறேன்.

    இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

    இந்நிலையில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய டிரம்ப், "எனது பிரதிநிதிகள் காசா போர் தொடர்பாக இஸ்ரேலுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.

    அந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். இந்த இறுதி முன்மொழிவை கத்தார்,எகிப்து ஆகிய நாடுகள் வழங்கும். மத்திய கிழக்கின் நன்மைக்காக ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் என்று நான் நம்புகிறேன். இல்லையென்றால் அவர்களுக்கு இது மோசமானதாக இருக்கும் என்றார்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்தார்.
    • பின்னர் இந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.

    இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

    இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும், இதுகுறித்து 8 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

    நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம் என்று நினைக்கிறேன். அது வேறு வகையான ஒப்பந்தமாக இருக்கும். இது நாம் உள்ளே சென்று போட்டியிடக்கூடிய ஒரு ஒப்பந்தமாக இருக்கும்.

    இந்தியாவுடன் மிகக் குறைந்த வரிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம். இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் நிறுவனங்களும் சமமாக போட்டியிடும் வகையில் மிகக் குறைவான வரிகளை கொண்டதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எலான் மஸ்கின் நிறுவனங்கள் தொடர்பாக DOGE அமைப்பை விசாரிக்கச் சொல்லலாம்.
    • எலான் மஸ்க் நிறைய சலுகைகளை அனுபவித்து வருகிறார் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து புதிய கட்சியை தொடங்குவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

    இதனையடுத்து எலான் மஸ்க் மீண்டும் தென் ஆப்பிரிக்காவிற்கே செல்ல வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், எலான் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், "மஸ்க்கை நாடு கடத்த முடியுமா எனத் தெரியாது. அதற்கான சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும். எலான் மஸ்கின் நிறுவனங்கள் தொடர்பாக DOGE அமைப்பை விசாரிக்கச் சொல்லலாம். நிறைய சலுகைகளை அவர் அனுபவித்து வருகிறார்" என்று தெரிவித்தார்.

    அமெரிக்க அரசின் செலவினத்தை குறைக்க மஸ்க் தலைமையில் DOGE அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அந்த அமைப்பில் இருந்து மஸ்க் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×