என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 750-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது.
- 315-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
கோவை:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வருகிற அக்டோபர் மாதம் 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. முதல்நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டிற்கான லோகோவையும் இணையதளத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் 19 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளர்களுடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மத்திய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத்துறைகளும் பங்கேற்க உள்ளன. 750-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது. 315-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தலைமை செயல் அலுவலர் பதவியுடன் 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து, தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக இந்த ஸ்டார்ட் அப் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டார்ட் அப் தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்தில் இருந்தது. 2021-ம் ஆண்டு மூன்றாம் இடத்திற்கு முன்னேறி, லீடர் விருதை பெற்றோம். 2022-ல் சிறந்த செயல்பாட்டாளர் விருதை பெற்றது. தற்போது முதல் இடத்தில் நிற்கிறோம். இந்தியாவின் இதுவரை எங்கும் நடக்காத ஸ்டார்ட்அப் மாநாடு நடைபெறுகிறது. மற்ற மாநிலங்கள் வியக்கக்கூடிய அளவில் இது நிச்சயம் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறுகுறு தொழிலாளர்களுக்கு, லைசென்ஸ் முதற்கொண்டு மின் இணைப்பு வரை எதுவும் விரைவாக கிடைப்பது இல்லை என குற்றம் சாட்டுகிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு எந்த பகுதியில் பிரச்சனை என்று கூறுங்கள், அதை நிச்சயம் சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.
- இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது.
- அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்காவில் இன்று டிரம்பை சந்தித்து பேசவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது, டிரம்ப் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பிலும் ஷெரீப் கலந்து கொண்டார்.
முன்னதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இந்தாண்டு 2 முறை அமெரிக்காவிற்கு சென்று அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்
இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!
- இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக். வளைகுடாவில், நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!
இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபுதாபி #IUCNWorldConservationCongress2025-க்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
இந்த முயற்சியில் பங்கேற்ற @tnforestdept, Omcar Foundation உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது.
- டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு
டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை தற்போது வரை அதிபர் டிரம்ப் தொடர்ந்து நீட்டிப்பு செய்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயல்படும் ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
17 கோடி அமெரிக்க பயனர்களைக் கொண்ட டிக்டாக், கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றிபெற உதவியதாக டிரம்ப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கொரோனா தொற்றுக்கு முன்பு வரை வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் செயல்பட்டது.
- இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாக திகழ்ந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன்பு வரை செயல்பட்ட இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. உதயம், திரையரங்கம், தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கம், பெரம்பூரில் இருந்த ஸ்ரீபிருந்தா திரையரங்கம் ஆகியவை அண்மையில் மூடப்பட்டது.
ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.
- கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.
சினிமா, கலைத்துறையில் சேவை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் வகையில் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, சாய்பல்லவி, அனிருத் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கலைமாமணிக்கு பதிலாக கொலைமாமணி விருது அளிக்கலாம் என சமூக வலைத்தள பயனர்கள் காட்டமாக தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு அரசுக்கான 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்க கூடியது.
இந்தாண்டுக்கான கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில், கிராமிய பாடகர்களுக்காக வீர சங்கரும், பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக காமாட்சி அவர்களும், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக மருங்கன்,
பெரிய மேளத்துக்காக முனுசாமி அவர்களும் கலைமாமணி விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வாழ்த்துக்கள்.
இந்த வரிசையில் வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி. பாலு என்பவருக்கும் கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வள்ளி கும்மி மூலம் "வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்" என சத்தியம் வாங்கி வருகிறார் சாதியவாதி பாலு.
இது குடிபெருமை பேசி, சனாதனத்தை நிலை நிறுத்தும் நாகரீக சமூகத்துக்கு எதிரானதாகும். பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.
அதுவும் பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக்கருத்தியலை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை திரும்ப பெறவேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2-ஆக பதிவானது. 7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கம் பக்கத்து மாகாணங்களிலும் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
- லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- 3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது.
- விஜய் பேசுவதற்கு கரூரில் 4 இடங்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.
கரூர்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
முதல் நாளான 13-ந் தேதி திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். பின்னர் கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது.
பின்னர் பிரசாரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மறுநாள்( சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்ய உள்ளார்.
விஜய் பேசுவதற்கு கரூரில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், ஈரோடு ரோடு வேலுச்சாமி புரம், 80 அடி சாலை ஆகிய 4 இடங்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.
காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.
அந்த வகையில் கரூரில் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் பிரசாரத்துக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. அனேகமாக கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய இடம் ஒதுக்கப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விஜய் கரூர் வருகையை முன்னிட்டு அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
- பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது.
- தனது அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளினால் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர் பீலா வெங்கடேசன்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவரது மரணமடைந்ததை அடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் IAS அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது.

கொரோனா பேரிடர் காலத்தில் நான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளராக இருந்து திறம்பட பணியாற்றி, தனது அர்ப்பணிப்பு மிகுந்த செயல்பாடுகளினால் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 4வது நாளான இன்று பாசிப்பயறு சுண்டல், குங்குமப்பூ சாதம் மற்றும் அன்னாசிப்பழ கேசரி செய்து கூஷ்மாண்டா தேவிக்கு படைக்கலாம்.
முதலில், பாசிப்பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..
பாசிப்பயறு சுண்டல்
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 1 கப்
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
காய்ந்த மிளகாய் - 1-2 (கிள்ளியது)
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
இஞ்சி (துருவியது) - ½ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
மஞ்சள் தூள் - ⅛ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 2-3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பயறை ஊறவைத்து வேகவைத்தல்: பாசிப்பயறை நன்கு கழுவி, சுமார் 2-3 மணி நேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
பிறகு, அதை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, பிறகு வேகவைத்த பாசிப்பயறை கடாயில் சேர்த்து நன்கு கிளறவும்.
இறுதியாக, தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சில நிமிடங்கள் வதக்கி, சுவையான பாசிப்பயறு சுண்டலை பரிமாறவும்.
இந்த சத்து நிறைந்த பாசிப்பயறு சுண்டலை நவராத்திரி நாட்களில் பிரசாதமாக வழங்கலாம்.
குங்குமப்பூ சாதம்
நவராத்திரி குங்குமப்பூ சாதம் என்பது குங்குமப்பூவின் வாசனை மற்றும் நிறத்துடன் செய்யப்படும் இனிப்பு சாதம் ஆகும், இது நவராத்திரி பண்டிகையின் போது பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி: 3/4 முதல் 1 கப் வரை
குங்குமப்பூ: ½ டீஸ்பூன்
பால்: 1 கப் (குங்குமப்பூவை ஊற வைக்க)
நெய்: 1 டேபிள்ஸ்பூன்
சீரகம்: ½ டீஸ்பூன்
ஏலக்காய்: 3
முந்திரி: 10
சாதம்: 1 கப் (சமைப்பதற்கு)
உப்பு: தேவையான அளவு
கொத்தமல்லி: அலங்கரிக்க (விருப்பப்பட்டால்)
செய்முறை
பாஸ்மதி அரிசியைக் கழுவி, 10-15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் சூடான பால் சேர்த்து, அதில் குங்குமப்பூ இழைகளை ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் நெய் விட்டு, சீரகம் மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
ஊறவைத்த அரிசியை தண்ணீர் சேர்த்து சமைக்கவும்.
சாதம் தயாரானதும், குங்குமப்பூ பால், உப்பு சேர்த்து கலக்கவும்.
அலங்கரிக்க கொத்தமல்லியை மேலே தூவவும்.
நவராத்திரி குங்குமப்பூ சாதம் என்பது குங்குமப்பூவின் வாசனை மற்றும் நிறத்துடன் செய்யப்படும்சாதம் ஆகும், இது நவராத்திரி பண்டிகையின் போது பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.
அன்னாசிப்பழ கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை (சூஜி): 1 கப்
நெய்: ¼ முதல் ⅓ கப்
சர்க்கரை: ¾ முதல் 1 கப்
அன்னாசிப்பழத் துண்டுகள்: 1 கப் (அல்லது அன்னாசிப்பழ கூழ்)
தண்ணீர்: 2½ கப்
முந்திரி, உலர் திராட்சை: தேவையான அளவு
ஏலக்காய்த்தூள்: ¼ டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
குங்குமப்பூ (சற்று): விருப்பப்பட்டால்
செய்முறை
ரவையை வறுத்தல்: ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே நெய்யில் ரவையை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அன்னாசிப்பழத்தை சேர்த்தல்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், அன்னாசிப்பழ துண்டுகள் அல்லது கூழைச் சேர்த்து கொதிக்க விடவும்.
வறுத்த ரவையில் கொதிக்கும் அன்னாசிப்பழக் கலவையைச் சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.
ரவை வெந்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரையைச் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
ஏலக்காய்த்தூள் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து, சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.






