என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சென்னையின் அடையாளம்:  விடைபெற்றது வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர்
    X

    சென்னையின் அடையாளம்: விடைபெற்றது வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர்

    • கொரோனா தொற்றுக்கு முன்பு வரை வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் செயல்பட்டது.
    • இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

    சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாக திகழ்ந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

    கொரோனா தொற்றுக்கு முன்பு வரை செயல்பட்ட இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

    சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. உதயம், திரையரங்கம், தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கம், பெரம்பூரில் இருந்த ஸ்ரீபிருந்தா திரையரங்கம் ஆகியவை அண்மையில் மூடப்பட்டது.

    ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×