என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார்.
    • எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்து திருச்சபையின் 1400 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் பெரியாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    63 வயதான சாராம் முல்லாலி இங்கிலாந்தில் உள்ள கேன்டர்பரி தேவாலயத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். சாராம் முல்லாலி ஆங்ளிகன் சபையின் 106-வது ஆவார்.

     இவர் 2018 ஆம் ஆண்டு முதல் லண்டன் ஆயராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பரில்  பேராயர் ஜஸ்டின் வெல்பி ராஜினாமா செய்த காலியிடத்தில் சாராம் முல்லாலி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்வு ஜனவரியில் நடைபெற்றது.

    11 ஆண்டுகளுக்கு முன்பு சபையால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தமே பெண்ணான முல்லாலி, பேராயர் பதவிக்கு வர வழிவகுத்தது.

     இவர் பேராயராக இருந்தபோது, ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதித்தது போன்ற சம்பவங்களால் செய்திகளில் இடம்பிடித்தார். இதனால், சுமார் எட்டரை கோடிக்கும் அதிகமான ஆங்ளிகன் விசுவாசிகள் மத்தியில் இவரது நியமனம் சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    • கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
    • கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீர் நிலைகளை தூர்வாருதல், கரைகளை, பலப்படுத்துதல் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் எவ்வளவு மழை வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின், நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள்.

    கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.

    கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு. 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல.

    விஜயை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மோட்டோம். அனாவசியமாக நாங்க யாரையும் கைது செய்ய மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.
    • அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாமக்கல்:

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந்தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக அக்டோபர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகிலும், அதன்பிறகு குமாரபாளையம் தொகுதியில் ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. அதேபோல், நாளை மறுநாள் (6-ந்தேதி) மாலையில் நாமக்கல் பழைய பஸ் நிலையம் அருகிலும், அதைத்தொடர்ந்து பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.

    இதற்கிடையே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு கோர்ட் அனுமதி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்றனர். எனவே எடப்பாடி பழனிசாமி வேறு இடத்தில் பிரசாரம் செய்யவும், பட்டா இடத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை நடத்திக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

    • கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், ட்யூட் படத்தின் மூன்றாம் சிங்கிளான 'சிங்காரி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • சியோமி 17 ப்ரோ மேக்ஸ், டாப் எண்ட் மாடல் ஆகும்.
    • 6.9 இன்ச் OLED டச் ஸ்கிரீன், பின்பக்கமும் குட்டி டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன்களில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் சியோமி நிறுவனம், சியோமி 17, சியோமி 17 ப்ரோ மற்றும் சியோமி 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போனைகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மூன்று மாடல்களிலும், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், அட்வான்ஸ் ஜூம் வசதி கொண்ட மூன்று 50 எம்.பி. கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இதில் சியோமி 17 ப்ரோ மேக்ஸ், டாப் எண்ட் மாடல் ஆகும். இதில் 7500mAh பேட்டரி, 100 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களில், 6.9 இன்ச் OLED டச் ஸ்கிரீன், பின்பக்கமும் குட்டி டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது.

    குட்டி திரையில், பாடல் கேட்பது, குறுந்தகவல்களை படிப்பது, அழைப்புகள் பற்றிய விவரங்களை பார்ப்பது போன்ற தேவைகளுக்காக, போனின் பின்பக்கம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், அட்ரினோ 840 GPU கிராஃபிக்ஸ் கார்டு, ஹைப்பர் ஓ.எஸ். 3, 8K வீடியோ ரெக்கார்டிங், IP68 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வழங்கப்பட்டுள்ளது.

    • கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.
    • ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.

    கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.

    மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும்.

    பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும்.

    துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்! என்று கூறியுள்ளார். 



    • RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெய்ப்பூர் RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு பா.ஜ.க. பெண் தொண்டர் நோயாளிக்குக் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டைப் புகைப்படம் எடுத்தவுடன் உடனடியாகத் திரும்பப் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உதவி செய்வது போல நடித்த பெண் பாஜக தொண்டரின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.
    • த.வெ.க. தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

    கோவை:

    தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    டெல்லியில் அவர் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் கரூர் சம்பவம் குறித்து அவர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்தபோது அண்ணாமலை, இலங்கையில் சுற்றுப்ப யணம் மேற்கொண்டு இருந்தார்.

    தகவல் அறிந்து அவர் உடனடியாக இலங்கையில் இருந்து கரூர் திரும்பினார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.

    உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். மேலும் த.வெ.க. தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் கரூர் வருகை தந்த பா.ஜ.க. விசாரணை குழுவுடனும் அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்தநிலையில் அண்ணாமலை திடீரென டெல்லி செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கத்தை விஜய் மல்லையா வழங்கினார்.
    • விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் பணிகளுக்காக 27 ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30.3 கிலோ தங்கம் மாயமானதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செப்டம்பர் 4, 1998 அன்று, சபரிமலையில் உள்ள கருவறை, கூரை மற்றும் துவாரபாலக சிற்பங்கள் ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கம் மற்றும் 1,900 கிலோ செம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்பட்டன.. இந்த தங்கத்தை தொழிலதிபர் விஜய் மல்லையாவால் பரிசாக அப்போது வழங்கினார்.

    இந்நிலையில், சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 2 துவார பாலகர் சிலைகளில் இருந்த தகடுகளில் தங்கம் எதுவும் இல்லை, அவை செம்புத் தகடுகள் என பழுது பார்க்கும் நிறுவனம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.

    • தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
    • கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கரூர்:

    கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரியும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார் கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.

    ஏற்கனவே இந்த வழக்கினை முதலில் கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் நியமிக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், மத்திய மாவட்ட நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்கியது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். அது மட்டுமில்லாமல் கூடுதல் துணை போலீஸ் சூப்பரண்டுகள், துணைபோலீஸ் சூப்பிரண்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற இருக்கிறார்கள்.

    ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமி புறம் பகுதியை பார்வையிடுகிறார்கள். அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிர படுத்த உள்ளனர்.

    முன்னதாக வழக்கின் அத்தனை ஆவணங்களையும் கரூர் போலீசார் இன்று சிறப்பு புலனாய்வு குழு தலைமை அதிகாரி அஸ்ராகர்க்கிடம் ஒப்படைத்தனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.

    அவர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் உயிரிழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை சந்தித்து குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்த இஸ்ரேலை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
    • மத்தியஸ்தம் செய்யும் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அவர் கூறினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்று, இஸ்ரலிய பணய கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்த இஸ்ரேலை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில் கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸின் முடிவை அமைதிக்கான முக்கிய படியாக வர்ணித்தன.

    பிணைக் கைதிகளை விடுவிப்பதும், போர் நிறுத்தம் செய்வதும் இப்போது சாத்தியம் என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

    இது ஒரு முக்கியமான முன்னேற்றப் படி என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். மத்தியஸ்தம் செய்யும் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அவர் கூறினார்.

    ஹமாஸின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றது. இந்த துயரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தார்

    நிரந்தர போர் நிறுத்தம் உடனடியாக நிறுவப்பட வேண்டும், அனைத்து பணயக்கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்வதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.    

    • கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும்
    • இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும்

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    கரூர்த் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும். ஊடகங்களும் சமூக உரையாடல்களும் அந்த மனத்தடையிலிருந்து வெளியேற வேண்டும். அரசியல் கூட்டங்களிலோ ஆன்மிகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும்.

    41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் இதுதான். இந்தக் கருப்புத் துயரத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய யாரும் ஒரு தனி அறையில் தம் மனச்சான்றோடு உரையாடித் தாமே தம்மிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

    ஒரு செய்தி என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு வேலையும் இன்றி 27ஆயிரம் பேர் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க முடியுமென்றால் அவர்களின் வாழ்வியல் என்ன? அவர்களால் இழக்கப்படும் மனிதவளம் என்ன? கல்வி நிறைந்த சமூகம் என்கிறோமே இவர்களுக்குக் கல்வி என்ன செய்தது? வெறும் எழுத்தறிவா கல்வி?

    காலத்தின் அருமையை வாழ்வின் பெருமையைக் கற்றுத் தருவதல்லவா கல்வி அந்த 27 ஆயிரம் பேர் இன்னும் கலைந்துவிடவில்லை. நாடெங்கும் அந்த மக்களைக் கணக்கெடுக்க வேண்டும். தொழில் கொடுத்து அவர்களுக்கு நேரமில்லாமல் செய்ய வேண்டும். நாளாகலாம்... ஆனால், அதை நோக்கிச் சமூகம் நடந்தே தீர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    ×