என் மலர்
நீங்கள் தேடியது "சியோமி MiA2"
- சியோமி 17 ப்ரோ மேக்ஸ், டாப் எண்ட் மாடல் ஆகும்.
- 6.9 இன்ச் OLED டச் ஸ்கிரீன், பின்பக்கமும் குட்டி டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் சியோமி நிறுவனம், சியோமி 17, சியோமி 17 ப்ரோ மற்றும் சியோமி 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போனைகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மூன்று மாடல்களிலும், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், அட்வான்ஸ் ஜூம் வசதி கொண்ட மூன்று 50 எம்.பி. கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் சியோமி 17 ப்ரோ மேக்ஸ், டாப் எண்ட் மாடல் ஆகும். இதில் 7500mAh பேட்டரி, 100 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களில், 6.9 இன்ச் OLED டச் ஸ்கிரீன், பின்பக்கமும் குட்டி டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது.
குட்டி திரையில், பாடல் கேட்பது, குறுந்தகவல்களை படிப்பது, அழைப்புகள் பற்றிய விவரங்களை பார்ப்பது போன்ற தேவைகளுக்காக, போனின் பின்பக்கம் வழங்கப்பட்டு இருக்கிறது.
தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட், அட்ரினோ 840 GPU கிராஃபிக்ஸ் கார்டு, ஹைப்பர் ஓ.எஸ். 3, 8K வீடியோ ரெக்கார்டிங், IP68 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வழங்கப்பட்டுள்ளது.







