என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
- பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், 'டியூட்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை இன்று மாலை 05.04 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
- ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
- 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவியிட்டுள்ளதாவது:-
2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.
- சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
- ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவத்தின் போராளிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபகாலமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து தாக்கினர். கடந்த மார்ச் மாதம் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தி 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து பயணிகளை மீட்டனர்.
இந்த நிலையில் இன்று ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்தது. சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதனால் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். உடனே மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார்.
- தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி கவாய்-க்கு போன் செய்து இந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்து சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி மீது காலணி வீச முயன்றது தொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், "செப்டம்பர் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அந்த வழக்கை கேலி செய்தார். நமது சனாதன தர்மம் தொடர்பான ஒரு வழக்கு வரும்போது, உச்ச நீதிமன்றம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கிறது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றாலும் அவரையும் கேலி செய்யாதீர்கள்.
இதனால் நான் காயப்பட்டேன்... நான் குடிபோதையில் இதை செய்யவில்லை. அவரது செயலுக்கு நான் எதிர்வினை ஆற்றினேன். இதற்காக நான் பயப்படவில்லை. நடந்ததற்கு வருத்தப்படவும் இல்லை
இதற்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. கடவுள் தான் என்னை இதைச் செய்ய வைத்தார். அவர் விரும்பினால் நான் சிறைக்குச் செல்ல தயார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்றாலும் அது கடவுளின் விருப்பம் தான்" என்று தெரிவித்தார்
முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.
அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்வீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார்.
- நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
- 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்தனர். பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இருமல் மருந்து உட்கொண்டதில் 14 குழந்தைகள் பலியான நிலையில் நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
இச்சம்பவத்தையடுத்து இருமல் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய 2 இருமல் மருந்துகளின் விற்பனையை மத்திய பிரதேச அரசு முழுமையாகத் தடை செய்துள்ளது.
இந்த மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமான அளவு ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதையடுத்து மத்திய பிரதேச அரசு விசாரணை கோரி குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விற்பனைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில் கர்நாடகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருமல், சளிக்கு இந்த நிறுவன மருந்துகளை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருமல் மருந்து பயன்படுத்தியதில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
- புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சி.பி.ஐ.-க்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. நிர்வாகி உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு வருகிற வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
- முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
- 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்தி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 10 தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில், 2வது டெஸ்ட்டுக்கு முன்பு இந்திய வீரர்களுக்கு விருந்து அளிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியாளர் கம்பீர் இந்திய வீரர்களுக்கு நாளை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இரவு விருந்து அளிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
- பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
- மறைந்த அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி (83) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயாரான அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் பிரேமலதா, சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரான அம்சவேணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார்.
- பலியானோர் குடும்பத்தை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வருவதாகவும் தெரிவித்தார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்ப திவு செய்துள்ளனர்.
இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார்.
பலியானோர் குடும்பத்தை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வருவதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் பலியானோர் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமார் அம்மா, தங்கை ஹர்ஷினியுடன் வீடியோ காலில் பேசிய விஜய், "நடக்க கூடாத நிகழ்வு நடந்து விட்டது. எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு. எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு துணை நிற்பேன். விரைவில் உங்களை சந்திப்பேன்" என தனுஷ்குமார் தாயாரிடம் பேசினார்.
தனுஷ் சகோதரியிடம் பேசுகையில், "ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து எப்போதும் உங்களுக்காக துணை நிற்பேன். மேலும் நேரில் உங்களை நிச்சயம் சந்திப்பேன்" என விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
தனுஷ்குமார் உறவினர்களிடம் சுமார் 20 நிமிடங்கள் விஜய் பேசியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்ததை தனுஷ்குமாரின் உறவினர் தமிழரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பலியானோர் குடும்பத்துடன் வீடியோ காலில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
- கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஆங்காங்கே ஏற்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி பரவிய வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையையொட்டி பூஜை பந்தல் அமைப்பது வாடிக்கை. அவ்வாறு கொல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்ட பூஜை பந்தல் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட ஏர் இந்திய விமான விபத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
260 பேரின் உயிர்களை காவு வாங்கிய அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தை மோதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவரும் மறக்க வேண்டிய இந்த கொடூர நிகழ்வை நினைவுப்படுத்தியது ஏன்? என்ற பதிவுகளுடன் இது தொடா்பான வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
- கரூர் சம்பவம் தொடர்பான தினமும் பேச வேண்டாம்.
- பேசிக்கொண்டே இருந்தால் சோகம் போய்விடாது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரூர் சம்பவம் தொடர்பான தினமும் பேச வேண்டாம். வழக்கு கோர்ட்டில் உள்ளது. சோகம் தான் இல்லை என்று சொல்லவில்லை. பேசிக்கொண்டே இருந்தால் சோகம் போய்விடாது. இனி நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய கடமை.
கரூர் சம்பவம் அரசியலாக மாறுகிறதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, இப்போது நான் பேசியதில் கூட அரசியல் செய்யலாம். அரசியல் செய்யாமல் இருப்பது நாம் இருவரின் கடமை என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
- வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் TIDCO சார்பில் நடைபெறும் விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான (AeroDefCon 25) கண்காட்சி கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
* தமிழக தொழில்துறை மாநாடுகள் உலக அளவில் பேசப்படுகின்றன.
* இந்தியாவை மட்டும் அல்ல, உலகையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
* வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது.
* உலக அளவில் வளரும் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
* தமிழ்நாட்டில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
* உற்பத்தி துறையில் லீடராக தமிழ்நாடு மாறி வருகிறது, அனைத்து தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது.
* இன்று நான் தொடங்கி வைத்தது வெறும் கண்காட்சி அல்ல, முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறியும் தளம்.
* இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.
* பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது.
* பாதுகாப்பு துறையில் முக்கிய மையமாக தமிழ்நாடு மாறும் என நம்புகிறேன்.
* பாதுகாப்புத்துறையில் 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
* சென்னை அருகே AEROHUB என்ற திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.
* தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீடுகளுக்கு உகந்த பகுதிகளாக திகழ்கிறது என்றார்.






