என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருமல் மருந்து தடை"

    • மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
    • கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் பிற மாநிலங்களில் தாரிக்கப்டும் ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய இருமல் மருந்துகளில், 'டை-எத்திலீன் கிளைக்கால்' எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

    இதையடுத்து காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரேசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் சென்னையில் ம.பி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    இதற்கிடையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை விதித்தித்தன.

    இந்நிலையில் இந்த வரிசையில் டெல்லி அரசும் கோல்ட்ரிஃப் மருந்துக்க்கு தடை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோல்ட்ரிஃப்'  இருமல் சிரப்பின் விற்பனை, கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கு டெல்லி அரசு தடை விதித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பொதுமக்கள் பாதுகாப்பின் நலன் கருதி, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

    இந்த விவகாரம் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், மருந்து விற்பனைப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்தியாவில் ஒழுங்குமுறைக் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
    • 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்தனர். பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இருமல் மருந்து உட்கொண்டதில் 14 குழந்தைகள் பலியான நிலையில் நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

    இச்சம்பவத்தையடுத்து இருமல் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய 2 இருமல் மருந்துகளின் விற்பனையை மத்திய பிரதேச அரசு முழுமையாகத் தடை செய்துள்ளது.

    இந்த மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமான அளவு ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதையடுத்து மத்திய பிரதேச அரசு விசாரணை கோரி குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விற்பனைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில் கர்நாடகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருமல், சளிக்கு இந்த நிறுவன மருந்துகளை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இருமல் மருந்து பயன்படுத்தியதில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் 'கோல்ட் ரிப்' மருந்து தயாரிக்கப்பட்டது.
    • மத்திய பிரதேசம், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

    அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது. பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

    இதையடுத்து மத்திய பிரதேசம், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த கேரள மாநில அரசு.தடை விதித்துள்ளது.

    • இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
    • கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

    சென்னை:

    மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

    அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது. பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

    இதுதொடா்பாக பல் துறை விசாரணைக் குழுவை மத்திய அரசும், மத்திய பிரதேச அரசுகளும் அமைத்துள்ளன. இதனிடையே, மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமாா் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.

    அதில், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட (13 பேட்ச்) 'கோல்ட்ரிஃப்' மருந்தை சோதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் எஸ்.குரு பாரதி தலைமையிலான குழுவினா், கடந்த இரு நாள்களாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். அங்கிருந்து அதே பேட்ச்சில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' உள்பட 5 மருந்துகளை ஆய்வுக்காக எடுத்து வந்துள்ளனா்.

    அதுமட்டுமல்லாது மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு 'கோல்ட் ரிப்' மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளன. மற்றொரு மருந்தான நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து தமிழகத்தில் ஏற்கெனவே விற்பனையில் இல்லை என எஸ்.குருபாரதி தெரிவித்து உள்ளாா்.

    • மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
    • இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது.

    கேப்டவுன்:

    தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை டாக்டர்கள் பரிந்துரைந்து வந்தனர்.

    இந்தநிலையில் இந்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன.

    அதில் இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது. இதனால் அதை குடிக்கும் குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மை உண்டாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்து பாட்டில்களையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளன.

    ×