என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்குச் சென்று தரிசித்தார்.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கர்னூல் வந்தார். அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.
அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீசைலம் சென்றார். ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் சிறிது நேரம் தியானம் செய்தார்.
அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்குச் சென்று தரிசித்தார்.
இதனைத் தொடர்ந்து நன்னூர் அருகே 'சூப்பர் ஜிஎஸ்டி- சூப்பர் சேமிப்பு' என்ற பொதுக் கூட்டம் நடந்தது. ஆந்திர மாநில கவர்னர் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், லோகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். முடிவற்ற திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
'சூப்பர் ஜி.எஸ்.டி சூப்பர் சேமிப்பு' என்ற கருப்பொருளில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 450 ஏக்கர் பரப்பளவில் நடந்த இந்த கூட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.
- மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நக்சலைட்டுகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கிய நாள்.
இன்று, சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். நேற்று சத்தீஸ்கரில் 27 பேர் ஆயுதங்களை கீழே போட்டனர். மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.
மொத்தத்தில், கடந்த இரண்டு நாட்களில் 258 இடதுசாரி பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டனர்.
இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, வன்முறையை கைவிடுவதற்கான அவர்களின் முடிவை நான் பாராட்டுகிறேன்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சிகளால் நக்சலைட்டு அதன் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது: சரணடைய விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள், மேலும் துப்பாக்கியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எங்கள் படைகளின் கோபத்தை சந்திப்பார்கள்.
நக்சலைட் பாதையில் இன்னும் இருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மைய நீரோட்டத்தில் சேருமாறு நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
- LIK படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
- நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கும் LIK படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்ட்டது. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டூட்' படம் அதே நாளில் வெளியாவதால் Lik படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து, Lik படம் டிசம்பர் மாதம் 18-ந்தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை 'LIK' படக்குழு வெளியிட்டுள்ளது.
- சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- பணியில் சேர விரும்பினால் உடனே அவர்களுக்கான ஆணைகளை வழங்க மாநகராட்சி தயாராக இருக்கிறது.
சென்னை மாநகராட்சி சாலை பராமரிப்புப் பணிகளுக்காக 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் என 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் பராமரிப்புப் பணிகளை சாலைப்ப ணியாளர்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, ஐ .டி.பி.ஐ. வங்கி மற்றும் எக்விட்டாஸ் வங்கியின் சார்பில் பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் வழங்கப்பட்ட 21 மின்கல வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் பிடிப்பதற்காக கூடுதலாக 5 வாகனங்களும் குப்பை அள்ளுவதற்கும் 21 வாகனங்கள் என மொத்தம் 26 வாகனங்கள் இன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே 23 நாய் பிடிக்கும் வாகனங்கள் சென்னை மாநகராட்சியில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக 5 வாகனங்கள் நாய்கள் பிடிப்பதற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்ற வருகிறது. தற்போது 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
அதேபோல நாய்களுக்கு சிப் பொருத்தக்கூடிய பணிகளும் கடந்த மாதம் தொடங்கி இருக்கிறது.
மண்டலத்துக்கு ஒரு கருத்தடை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் அனைத்து பணிகளும் முடிய உள்ளது. பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவு வழங்குகிறார்கள். அதனால் அதிக அளவு நாய்கள் அந்த பகுதியில் சுற்றுகிறது. பொதுமக்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஓரிரு நாட்களில் எந்த பணிகளும் முடியாது. ஒரு 6 மாதம் காலம் எடுத்துக் கொள்ளப்படும். தெரு நாய்கள் கருத்தரிப்பதை கட்டுப்படுத்தும் போது நாய்கள் தொல்லை குறையும். 2022-ம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதியில் மழை நீர்வாடிக்கால் வாய் பணிகள் முடிந்துள்ளது. தற்போது மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ள இடங்களில் மழைநீர் வடிகால் வாய் பணிகள் நடைபெற்றது.
தற்போது நடைபெற்று வரக்கூடிய பணிகளை அப்படியே நிறுத்தி ஜனவரிக்கு பிறகு மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். சாலை வெட்டும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்டலம் 5- 6 தூய்மை பணியாளர்கள் இப்போதும் பணியில் வந்து சேரலாம்.
பணியாளர்கள் நிறைய நபர்கள் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள். பணியில் சேர விரும்பினால் உடனே அவர்களுக்கான ஆணைகளை வழங்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. போதுமான அளவிற்கு பணியாளர்கள் இருக்கிறார்கள். பணிகள் சீராக நடைபெற்று வருகிறது.
கூடுதலாக கட்டுப்பாட்டு மையத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டு பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக வட்டார அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உடனே தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறோம் .
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்தது.
- ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல்படுத்தினார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி, இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது?
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது...! (வருடத்திற்கு 52 வாரங்கள்)
ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல்படுத்தினார்கள். 4 வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்..! (12×4=48 வாரங்கள்) அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4 வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
அதனை தரும்படி 1930-1940 களில் மகாராஷ்டிராவில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப்படுவதாக போராடினார்கள்.
அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்..!
அப்போது தான், தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது..! பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு கொடுக்கப்பட்டது.
- 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
- இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை முதல்வர் சந்திக்க உள்ளார்.
குஜராத் பாஜக அரசின் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) ராஜினாமா செய்தனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சரவை மாற்றம் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்வர் பூபேஷ் படேலை தவிர அனைவரும் கூட்டாக ராஜினாமா செய்தனர்.
முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. குஜராத் பாஜக தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா, மாநில அமைச்சரவையை முழுமையாக மறுசீரமைக்க வசதியாக அமைச்சர்களை பதவி விலகுமாறு உத்தரவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்தைத் தொடர்ந்து, 16 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர். இன்று இரவு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திடம் அவற்றை பூபேஷ் படேல் ஒப்படைக்க உள்ளார்.
புதிய அமைச்சரவை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு காந்திநகரின் மகாத்மா மந்திரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அறிவிக்கப்பட உள்ளது.
- தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியது.
- மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கூடுதல் சிறப்பு ரெயில், முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரம்- செங்கோட்டை அக்டோபர் 17ம் தேதி இரவு 7.30 மணிக்கு பறப்படும் ரெயில் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் அக்டோபர் 20ம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் 17, 18-ல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து அக்டோபர் 18ம் தேதி பிற்பகல் 12 மணிக்கும், 21ம் தேதி இரவு 8.30 மணிக்கும் மெமு ரெயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசிய கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் அபிஷேக் 314 ரன்கள் குவித்தார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர் நாயகி விருதை மந்தனா வென்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்த விருதை தட்டி சென்றுள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 314 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வகையில் தொடர் நாயகன் விருதை இவர் தட்டி சென்றார்.

மகளிருக்கான செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர் நாயகி விருதை மந்தனா வென்றார். 3 போட்டிகளில் விளையாடிய மந்தனா 1 சதத்துடன் 308 ரன்கள் குவித்தார்.
- 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதிய மோதல்கள் மற்றும் தீண்டாமையின் பின்னணியில் கபடி வீரரின் கதையாக இப்படம் உருவாகி உள்ளது.
- எப்போதும் பதற்றத்திலேயே இருப்பதால் மிக விரைவாக வேலை பார்க்கக்கூடிய ஆள் நான்.
பரியேறும் பெருமாள் படம் மூலம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ஒழியவில்லை என உறக்கச் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மாரி செல்வராஜ்.
தொடர்ந்து 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை மாரி செல்வராஜ் பிடித்துவிட்டார்.
தற்போது தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 அன்று அவர் இயக்கிய பைசன் படம் வெளியாக உள்ளது. 1900-களில் தென்மாவட்டங்களில் நிலவிய சாதிய மோதல்கள் மற்றும் தீண்டாமையின் பின்னணியில் கபடி வீரரின் கதையாக இப்படம் உருவாகி உள்ளது.
படத்தின் புரோமோஷன் பணிகளில் இருக்கும் மாரி செல்வராஜ் அண்மையில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் "நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், எனது வாழ்வில் கலைதான் எனக்கு பெரிய போதை. எப்போதும் பதற்றத்திலேயே இருப்பதால் மிக விரைவாக வேலை பார்க்கக்கூடிய ஆள் நான். நிறைய படங்கள் இயக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இன்னும், 15 கதைகளையாவது திரைப்படமாக உருவாக்கிவிட என விரும்புகிறேன். அதனால், அரசியலுக்கு வர மாட்டேன். ஆனால், இயக்குநர் பா. இரஞ்சித் வருவார்" என்று தெரிவித்தார்.
- பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும்.
- நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும்.
தொழில் ரீதியிலான வளர்ச்சி வேண்டுமென்றால் லட்சுமி குபேர பூஜையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது தொழில் மேன்மை பெறும். வீட்டிலும் எப்போதும் தானிய வகைகள் நிரம்பி இருக்கும். உத்தியோகம், ஊதிய உயர்வு மற்றும் பணவரவு அதிகரிக்கும்.
லட்சுமி குபேர பூஜை செய்தால் அந்த லட்சுமி குபேரர் உங்களின் தீராத கடன்களையும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும். கடன் தீர்வது மட்டுமின்றி உங்களுக்கு கிடைக்கும் சொத்து பல்கிப் பெருகி பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.
நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் பெருகும்.
பணம், சொத்து என பொருளைத்தேடி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதன் அதை சம்பாதிக்கும் போது பலரது ஆசிகளை இழப்பது மட்டுமின்றி அறிந்தோ, அறியாமலோ பலவித பாவங்களையும், சாபத்தையும் சம்பாதிக்கிறான். ஒருவருக்கு கெடுதல் செய்தால் தான் பாவம் என்று அர்த்தமில்லை. ஒருவரை மனதளவில் காயப்படுத்திவிட்டாலும் அதுவும் பாவம் தான்.
காலம் முழுவதும் தான் சுகமாக வாழ பிறரை வஞ்சித்தும், சாபத்தைப் பெற்றும் வாழும் மனிதர்களுக்கு அருளோ கடவுளின் ஆசியோ கிடைப்பதரிது. ஏனென்றால் குரோதம், மோகம், ஆணவம் ஆகிய இம்மூன்றும் செல்வத்தால், பொருளால் வருவது. இவை இருந்தால் நிச்சயமாக கடவுளின் அருள் கிடைக்காது.

பாவங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்றால் பாவங்கள் போய்விடுமா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் கோவில்களுக்குச் செல்வதால்- தானதர்மம் வழங்குவதால் ஒருவர் பாவங்களை ஒருபோதும் அழிக்கமுடியாது. சக மனிதர்களிடம் அன்பு, பணிவு, அமைதி ஆகியவை இருந்தால், கடவுளின் அருளோடு பொருளும் தானாக வந்துசேரும்.
உங்களின் பாவங்களைப் போக்கி இந்த தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட லட்சுமி குபேரரிடம், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரி வழிபாடு செய்யுங்கள். இறை அருளோடு நிரம்பிய பொருள் பெற்று நல்வாழ்வு பெறுங்கள்.
- ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ளது.
- இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கவுள்ளது.
இந்திய கிரிக்கெட் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலில் தொடங்கும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நேற்று டெல்லியில் இருந்து 2 கட்டமாக இந்திய வீரர்கள் சென்றனர்.
இந்நிலையில் இன்று இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தனர். அங்கு ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். இதனையடுத்து பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுப்பட்டனர்.
குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா பேட்டிங் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
- மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஏமனில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் கதி குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.
இந்நிலையில் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதி விக்ரமநாத் மற்றும் நீதிபதி சந்தீப் மேத்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி இந்த தகவலை தெரிவித்தார்.
"இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய ஒரு புதிய மத்தியஸ்தர் முன்வந்துள்ளார். இந்த விஷயத்தில் எந்த பாதகமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நல்ல செய்தி" என்று அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விசாரணை ஜனவரி 2026 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
அவரது மரண தண்டனையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.






