என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வென்றது.
- இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
'மன சங்கர வர பிரசாத் காரு' என்ற படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
டியூட்
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
டீசல்
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பி கட்ன கதை
நடிகர் நட்டி, ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் 'கம்பி கட்ன கதை' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே கார்த்தி, முத்துராமன், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் சதுரங்கவேட்டை பட பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் வருகிற 17ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
- தமிழகத்தில் கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- மின்னல் தாக்கயதில், சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரழந்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்த தென்மேற்கு பருவமழை இன்று விலகியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இதனால், தமிழகத்தில் கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வயலில் பெண்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென மின்னல் தாக்கயதில், சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரழந்தனர்.
இதில், பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப் பொண்ணு, கணிதா ஆகிய நால்வர் உயிரிழந்த நிலையில், தவமணி என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது.
- மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், முதலில் 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. பின்னர், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 101 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பீகார் முதற்கட்டத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
- ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை கண்டித்து வந்துள்ளார்.
- ரசிகக் கூட்டத்தை அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர் அஜித்.
ஸ்பெயினில் தன்னை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டதால் சைகை மூலம் அவர்களை நடிகரும் ரேசருமான அஜித் குமார் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தன்னுடைய ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை தொடர்ச்சியாக கண்டித்து வந்துள்ளார். அஜித் குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அஜித்குமார் குறித்து பேசிய வீடியோவை பகிர்ந்த பார்திபன், "decision ma'KING' Ajith தான்! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர். ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர்> எனக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்காக தனது ரசிகர்களை பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை மறைமுகமாக குறிப்பிட்டு அஜித்தை பார்த்திபன் பார்ட்டிய பதிவு இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து அவருக்கு அஜித் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த குறுஞ்செய்தி குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல்,ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்!அப்படி நேற்று முன்தினம் Mr Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதை(யும்) ரசித்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது.
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு,சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன் அது இப்படி வெளியே வந்து விட்டது!" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவிலும் விஜய் ரசிகர்கள் ஒழுங்கில்லாமல் நடந்துகொள்கின்றனர் என்ற விமர்சனத்தை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் 'ஒழுக்கமிகு ரசிகர்கள்' என்று கூறி மீண்டும் விஜயையும் அவரது ரசிகர்களையும் பார்த்திபன் சீண்டியுள்ளார்.
- அண்மையில் நாடு தழுவிய அளவில் BSNL நிறுவனத்தில்'4G' சேவை தொடங்கபட்டது.
- தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் அண்மையில் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கியது.
இதனையடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினர். இந்நிலையில், தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.1 செலுத்தி புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை பெறலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும் என்றும் நவம்பர் 15 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
- தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்த தென்மேற்கு பருவமழை இன்று விலகியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
அதேபோல் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இதையொட்டி தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, கடலூர், திருமபுரி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசியில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, திருவள்ளூர், நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ இன்று திரையிடப்பட்டது.
- அரசன் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டது. இந்த ப்ரோமோ சிறப்பாக உள்ளதாக பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ப்ரோமோவில் இயக்குநர் நெல்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். நெல்சனிடம் நான் கூறிய கதையில் தனுஷை நடிக்க வைங்க சார் என்று சிம்பு பேசிய வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விஜயை சந்தித்துள்ளனர்.
- கட்சி அலுவலத்தில், மதியழகன், பவுன்ராஜ் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசி வருகிறார்.
கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் சென்றுள்ளார்.
அங்கு, சிறையில் இருந்து வெளியே வந்த தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விஜயை சந்தித்துள்ளனர்.
கட்சி அலுவலத்தில், மதியழகன், பவுன்ராஜ் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசி வருகிறார்.
- அரசன் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
- இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார்.
இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன்மூலம் சிம்பு மற்றும் வெற்றிமாறன் உடன் முதல்முறையாக அனிருத் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக அரசன் படத்தின் ப்ரோமோ திரையிடப்பட்டது. இந்த ப்ரோமோ சிறப்பாக உள்ளதாக பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார்.
- கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது.
தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்றது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார். கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது. சட்ட முன்வடிவில் திருத்தங்களை கூற கவர்னருக்கு அதிகாரம் கிடையாது, சட்டம் இயற்றுவது என்பது சபைக்கு மட்டுமே அதிகாரம் என்றார்.
இதனை தொடர்ந்து, அரசு அனுப்பிய மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு அனுப்பிய நிலையில் சித்த மருத்துவ பல்கலை குறித்த கவர்னரின் கருத்தை சட்டசபை நிராகரித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். கவர்னர் கருத்துக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்!
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது" என்று பதிவிட்டுள்ளார்.
- ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
- நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டியளித்தார்.
அப்போது நிருபர் ஒருவர், இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், ஆமாம், நிச்சயமாக. அவர் (பிரதமர் மோடி) என்னுடைய நண்பர். எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று இன்று அவர் எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய நிறுத்தம். இப்போது நாம் சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்க வேண்டும்..." என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இரு தலைவர்களுக்கும் இடையில் நேற்று எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை" என்று டிரம்ப் கூற்றை மறுத்துள்ளார்.
முன்னதாக வெளியுறவு அமைச்சகம் வெளிட்ட அறிக்கையில், "இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.
நிலையான எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் பாதுகாப்புத் தன்மை ஆகிய இரண்டும் தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கை. எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகின்றன" என்று பொத்தாம்பொதுவாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






