என் மலர்
இந்தியா

பீகார் சட்டமன்ற தேர்தல்- நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க.
- 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது.
- மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
பீகார் மாநில தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. பாஜக 101 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், முதலில் 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. பின்னர், 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் தலா 101 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பீகார் முதற்கட்டத் தேர்தலுக்கான பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.






