என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மருந்து மத்திய பிரதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்தது ஆகும்.
    • பெண்ணின் புகாரை தொடர்ந்து மருந்து ஆய்வாளர்கள் களத்தில் இறங்கினர்.

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

    இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்தது பகீர் கிளப்பி இருக்கிறது.

    அங்குள்ள குவாலியர் மாவட்டத்தின் மொரார் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.

    அங்கு அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்து குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. இந்த மருந்து பாட்டிலில் புழுக்கள் நெளிந்ததை பார்த்து அந்த பெண் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மருந்து ஆய்வாளர்களிடம் புகார் அளித்தார்.

    இந்த மருந்து மத்திய பிரதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்தது ஆகும்.

    அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து மருந்து ஆய்வாளர்கள் களத்தில் இறங்கினர். அந்த பெண்ணிடம் இருந்து மருந்து பாட்டிலை கைப்பற்றிய அவர்கள், அதன் மாதிரிகளை போபால் மற்றும் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து பரிசோதனைக்கூடத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த ஆஸ்பத்திரியில் 306 பாட்டில்களில் இருந்த மேற்படி மருந்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் சில பாட்டில்களில் இருந்தும் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவற்றில் பூச்சி, புழுக்கள் இருப்பதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    கோல்ட்ரிப் இருமல் மருந்து ஏற்படுத்திய உயிரிழப்புகளால் ஏற்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்த விவகாரம் வெளியாகி இருப்பது மத்திய பிரதேசத்தில் மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்கபட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
    • இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-31 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி பிற்பகல் 2.16 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : மகம் மாலை 5.22 மணி வரை பிறகு பூரம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர் திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் படை வீடு, ஸ்ரீ ரேணுகாபாள் புறப்பாடு.

    லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-விவேகம்

    கடகம்-அன்பு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-ஆசை

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-செலவு

    தனுசு- நற்செயல்

    மகரம்-வரவு

    கும்பம்-பணிவு

    மீனம்-சுகம்

    • தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பா.ஜ.க. விரும்புகிறது. அதற்கான முயற்சிகளையும் பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது.

    இந்நிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை பனையூரில் உள்ள இல்லத்தில் பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. நேற்று சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்தித்துப் பேசியது அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

    • ராணுவ மந்திரி பீட் ஹெக்செத் தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.
    • நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

    லண்டன்:

    பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

    இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் ராணுவ மந்திரி பீட் ஹெக்செத்தும் கலந்துகொண்டார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.

    இந்நிலையில், நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் விமானி தெரிவித்தார்.

    அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்த விமானம் இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

    அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் பீட் ஹெக்செத் உள்பட அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர். விமானியின் சாமர்த்தியத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    • பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • பதிவான வாக்குகளை எண்ணும் பணி 14ம் தேதி நடைபெறுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நவம்பர் 6, 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 101, லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் (எல்ஜேபி-ஆர்) 29 , ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 6 , இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொது அவர் கூறியதாவது:

    பீகார் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ்குமார்தான் முதல் மந்திரியா என்பதை நான் முடிவு செய்ய முடியாது.

    இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி நிதிஷ்குமார் தலைமையில் போட்டியிடுகிறது என்பதை மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியும்.

    தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி பேசி அதை முடிவு செய்வார்கள்.

    பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை கண்ட மக்கள் மீண்டும் அந்தக் கட்சியை ஆட்சியில் அமர வைக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

    • பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டமாக நடைபெறுகிறது.
    • 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற இருக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 101 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 48 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    மாநில தலைவர் ராஜேஷ் ராம் கடும்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இதில் 24 பேர் முதல் கட்ட தேர்தலிலும், மீதி 24 பேர் இரண்டாவது கட்ட தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.

    • நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
    • மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்குச் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார்.

    மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஓ.பி.ரவீந்திரநாத், இன்று உலகமெங்கும் உள்ள மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகன், பத்மவிபூஷண், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைந்து, மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, ஆசி பெற்றேன் என பதிவிட்டுள்ளார்.


    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலிய அணி 4 வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    விசாகப்பட்டினம்:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    • கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது.
    • கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    ஒட்டாவா:

    கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.

    கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த ஜூன் மாதம் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது

    தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் இந்த ஓட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    இந்நிலையில், மூன்றாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குல்வீர் சித்து, கோல்டி தில்லோன் உள்ளிட்ட குற்றவாளி குழுக்க்கள் பொறுப்பேற்றுள்ளன.

    இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினம்:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபன மாஸ்ட்ரே அரை சதம் கடந்து 66 ரன்னும், ரூபியா ஹெய்டர் 44 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லே கார்ட்னர், அனபெல் சதர்லேண்ட், ஆலனா கிங், ஜார்ஜியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. கேப்டன் அலீசா ஹீலி, லிட்ச்பீல்டு ஆகியோர் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அலீசா ஹீலி சதம் கடந்தார். லிட்ச்பீல்டு அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.

    'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 'காந்தாரா சாப்டர்1' படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    படம் வெளியாவதற்கு முன்பே காந்தாரா சாப்டர் 2 படத்தின் டிரெயிலர் வெளியான நிலையில், படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தீபாவளியை முன்னிட்டு படக்குழு புதிய டிரெயிலரை வெளியிட்டுள்ளது.

    இந்த டிரெயிலர் ஜெட் வேகத்தில் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.

    ×