என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- ஆஸ்திரேலிய அணி 4 வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
விசாகப்பட்டினம்:
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
Next Story






