என் மலர்
சினிமா செய்திகள்

'ஒழுக்கமிகு ரசிகர்கள்'... விஜயை மீண்டும் சீண்டிய பார்த்திபன் - நன்றி தெரிவித்த அஜித்
- ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை கண்டித்து வந்துள்ளார்.
- ரசிகக் கூட்டத்தை அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர் அஜித்.
ஸ்பெயினில் தன்னை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டதால் சைகை மூலம் அவர்களை நடிகரும் ரேசருமான அஜித் குமார் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தன்னுடைய ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை தொடர்ச்சியாக கண்டித்து வந்துள்ளார். அஜித் குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அஜித்குமார் குறித்து பேசிய வீடியோவை பகிர்ந்த பார்திபன், "decision ma'KING' Ajith தான்! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர். ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர்> எனக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்காக தனது ரசிகர்களை பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதனை மறைமுகமாக குறிப்பிட்டு அஜித்தை பார்த்திபன் பார்ட்டிய பதிவு இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து அவருக்கு அஜித் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த குறுஞ்செய்தி குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல்,ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்!அப்படி நேற்று முன்தினம் Mr Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதை(யும்) ரசித்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது.
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு,சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன் அது இப்படி வெளியே வந்து விட்டது!" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவிலும் விஜய் ரசிகர்கள் ஒழுங்கில்லாமல் நடந்துகொள்கின்றனர் என்ற விமர்சனத்தை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் 'ஒழுக்கமிகு ரசிகர்கள்' என்று கூறி மீண்டும் விஜயையும் அவரது ரசிகர்களையும் பார்த்திபன் சீண்டியுள்ளார்.






