என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
- தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியது.
- மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கூடுதல் சிறப்பு ரெயில், முன்பதிவு இல்லாத ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரம்- செங்கோட்டை அக்டோபர் 17ம் தேதி இரவு 7.30 மணிக்கு பறப்படும் ரெயில் மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் அக்டோபர் 20ம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தாம்பரம்- செங்கோட்டை இடையிலான சிறப்பு ரெயில் முன்பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கியதாகவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், அக்டோபர் 17, 18-ல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் மெமு ரெயில் இரவு 11.45 மணிக்கு புறப்புடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து அக்டோபர் 18ம் தேதி பிற்பகல் 12 மணிக்கும், 21ம் தேதி இரவு 8.30 மணிக்கும் மெமு ரெயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






