என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கொல்கத்தா பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.
- ரகானே 26 பந்தில் அரைசதம் விளாசிய நிலையில், 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். 3-வது பந்தில் கேட்ச் கொடுத்தார். அதை சுயாஷ் சர்மா தவறவிட்டார்.
ஆனால் 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் 3 ஓவரில் கொல்கத்தா 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக ரன் குவித்தது.
4-வது ஓவரை ரஷிக் சலாம் வீசினார். இதனால் ஓவரில் 16 ரன்கள் விளாசியது கொல்கத்தா. குருணால் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், யாஷ் தயால் வீசிய 6-வது ஓவரில் 20 ரன்களும் சேர்த்தது. இதனால் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.
9-வது ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ரகானே 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் கொல்கத்தா 22 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய ரகானே 11ஆவது ஓவரின் 3 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 ரன்கள் எடுத்திருந்தது.
- கடந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தில் மட்டுமே நிறைவு செய்தது.
- முதுகு காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, தடை விதிக்கப்பட்டதால் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை.
ஐபிஎல் 2025 சீசன் போட்டிகள் இன்று கொல்கத்தாவில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது. ஆர்சிபி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடி வருகின்றன.
இதற்கிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது. சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டிக்கு தற்போதிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
டோனிக்கு இப்போது 43 வயதாவதால் சிஎஸ்கே அணியில் இதுவே அவரின் கடைசி சீசன் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தில் மட்டுமே நிறைவு செய்தது.
எனவே இந்த முறை தனது குறைகளை களைந்து வெற்றி அணியாக சிஎஸ்கே உருவெடுக்குமா என்று ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

இதற்கு சாதகமாக அஸ்வின், நூர் அகமது, ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சிஎஸ்கேவின் பட்டாளத்தில் புதிதாக களமாடுகின்றனர். டோனியின் அனுபவமும், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜின் முடிவுகளும் இந்த முறை ஆட்டத்தை வென்றெடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நாளைய ஆட்டத்தை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் முதுகு காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, தடை விதிக்கப்பட்டதால் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்த உள்ளார்

இந்த முறை சிஎஸ்கே அணியை தங்களால் வீழ்த்த முடியும் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா விளையாடாதது குறித்து பேசிய சூர்யகுமார், "ஹர்திக் விளையாடவில்லை என்றாலும் அவர் எங்களுடனேயே உள்ளார்.
அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை சேர்ப்பது சாத்தியமற்றது. அணியின் மற்ற வீரர்கள் அவரின் வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று தெரிவித்துள்ளார். மொத்தத்தில் நாளை சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.
- கொல்கத்தா அணியில் ஸ்பென்சர் ஜான்சன் அறிமுகமாகிறார்.
- ஆர்சிபி 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்குகிறது.
ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி 4 வேகபந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.
கொல்கத்தா அணி:-
டி காக், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், அந்த்ரே ரசல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
ஆர்சிபி அணி:-
விராட் கோலி, சால்ட், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, ரஷிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஹேசில்வுட், யாஷ் தயால்
- அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
- மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஒடிசாவை சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, பல வருடங்களாக விளையாடுவதற்கு GROUND இல்லாமல் இருந்த கிராமத்து சிறுவர் மற்றும் இளைஞர்களுக்காக தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் சிங்கஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இந்த கிராமத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிங்கஜார், விளையாட்டுகளை விரும்பும் கிராமமாக மாநிலத்தில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளது. இருந்தபோதிலும், கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
எனவே விளையாட தங்களுக்கென ஒரு மைதானம் இல்லாதது குறித்து குழந்தைகளின் ஏக்கத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த விளையாட்டு ஆர்வலரான 95 வயது மூதாட்டி சபித்ரி மாஜி, விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக தனது ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசாங்கம் ஒரு அரங்கம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

தனது முடிவு குறித்து பேசிய மூதாட்டி சபித்ரி மாஜி ''எங்கள் கிராமத்தின் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களுக்கு வழங்கிய விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுகிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆரோக்கியமாக இருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார்.
முன்னதாக மூதாட்டி, கிராமத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சபித்ரி மாஜியின் கணவர் நிலம்பர் மாஜி 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
- விராட் கோலியை கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என ஷாருக்கான் பாராட்டினர்.
- ஆர்சிபி அணிக்காக 18 வருடமாக விளையாடும் விராட் கோலிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2025 சீசன் ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஷ்ரேயா கோஷல் பாடல்கள் பாடி அசத்தினார். இஷா பதானி கவர்ச்சி நடனம் ஆடினார்.
அதன்பின் ஷாருக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர்சிபி அணிக்காக 18 வருடங்கள் தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலியை புகழந்து பேசினார். அப்போது கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என விராட் கோலியை பாராட்டி வரவேற்றார். அதற்கு விராட் கோலியை நன்றி தெரிவித்தார்.
பின்னர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் உடன் சற்று உரையாடினார். விராட் கோலியை கோல்டன் தலைமுறை எனவும், ரிங்கு சிங்கை இளம் தலைமுறை எனவும் ஷாருக்கு கூறினார்.
பின்னர் இருவருடன் ஆட்டம் போட்டார். ஷாருக்கான் உடன் விராட் கோலியும், ரிங்கு சிங்கும் சேர்ந்து ஆடினர். பின்னர் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக தலைவர்களை மேடைக்கு அழைத்தார். ஐபிஎல் கோப்பை மேடைக்கு கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கேகேஆர் அணி கேப்டன் ரகானே, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, விராட் கோலிக்கு 18 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடுவதை கவுரவப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
- இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.
- டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப். சாப்டர் 2 படமும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரின் யாஷ் கையில் gun உடன் நடந்து வருகிறார். அவரை சுற்றி தீ எரிந்துக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக வெளியாக இருக்கிறது. படத்தின் கதாநாயகியாக நயன் தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.
- தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (Chat GPT) சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.
பொய்யான தகவலை கொடுத்ததற்காக சாட்ஜிபிடி மீது நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஹோல்மென் சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார்.

அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்? என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார்.
இதற்கான பதிலளித்த சாட்ஜிபிடி, "ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயை சேர்ந்தவர். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவருக்கு பத்து வயது, மற்றொன்றுக்கு ஏழு வயது.
இரண்டு குழந்தைகளும் டிசம்பர் 2020 இல் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது" என்று கூறியுள்ளது.

அர்வே ஜால்மர் ஹோல்மென்
இதைக் கண்டு ஹோல்மன் அதிர்ச்சியடைந்தார். இதற்குப் பிறகு, நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகிய அவர், அவர்கள் மூலம் ஓபன் ஏஐ நிறுவனம் மீது புகார் அளித்தார்.
இதில், ஓபன்ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொய்யை மக்கள் உண்மை என்று நம்பக்கூடும் என்பது ஹோல்மனின் கவலை.
இந்த நிலையில், சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
- காலை நிகழ்ச்சி தொடக்கத்தில் ஷாருக்கான் உருக்கமாக பேசினார்.
- நடிகை இஷா பதானி கவர்ச்சி உடையில் நடனமாடினார்.
ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் இன்று கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக்கான் உரையுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.

அதன்பின் பாடகி ஷ்ரேயா கோஷல் இசைக்கலைஞர்களுடன் பாடல்கள் பாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். புஷ்பா, ஆயுத எழுத்து உள்ளிட்ட பல்வேறு பட பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ரஹ்மான் இசையில் உருவான வந்தே மாதரம் பாடலை இந்தியில் பாடி அசத்தினார்.

அதன்பின் ரசிகர்களை கிரங்க வைக்கும் வகையில் நடிகை இஷா பதானியின் கவர்ச்சி நடனம் இடம் பெற்றது. பின்னர் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா மேடையில் ஆடிக்கொண்டே பாடல் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
- பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).
- ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் நடிகர் சிம்புவின் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது. இப்பாடலிற்கு கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் இன்னும் திரைப்படம் வெளியாக 75 நாட்கள் மட்டுமே இருக்கிறது என தெரிவித்துள்ளனர். போஸ்டரில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடம் பெற்றுள்ளனர். போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர்
- இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைனிய நகரமாக ஜபோரிஷ்யாவில் நேற்று இரவு ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மீது நடந்த ரஷிய டிரோன் தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜாபோரிஷ்யா மீது 10 முறை தாக்குதல் நடந்ததகவும், இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்தனர் என அந்நகரின் ஆளுநர் இவான் பெட்ரோவ் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கிடையில் காயடைந்தவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வடகிழக்கில் உள்ள சுமி (Sumy) பகுதியில் உள்ள கிராமத்தில் ரஷியா குறைந்தது 6 குண்டுகளை வீசியதாகவும், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் கிழக்கில் உள்ள டோன்ட்ஸ்க் (Donetsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்றும் அம்மகானை ஆளுநர் தெரிவித்தார்.

இதனையடுத்து ரஷியாவின் வோரோனிஸ், பெலோகிராட் ரோஸ்டோவ் வோலோகிராட் உள்ளிட்ட பகுதிகள் மீது உக்ரைன் ஏவிய 47 டிரோன்களை இடைமறித்து அளித்ததாகவும், மொத்தம் 6 பேர் காயமடைந்ததாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை போர் நடைபெறும் எல்லையில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷியாவின் ஏங்கல்ஸ் ராணுவ விமானத் தளம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது.
சோவியத் காலத்திலிருந்தே ஏங்கல்ஸ் தளத்தில், வைட் ஸ்வான்ஸ் என்று அழைக்கப்படும் டுபோலேவ் டு-160 அணுசக்தி திறன் கொண்ட கனரக குண்டுவீச்சு விமானங்கள் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலின் வீடியோவும் வைரலாகியது.
2022 முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மோசமாக்கியுள்ளது.
- ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா?
- தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
சென்னையில் இன்று பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்- மந்திரிகள் உள்பட 24 கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பார்த்து உண்மையிலேயே கவலைப்படுகிறீர்களா? அல்லது அரசியல் நோக்கத்திற்காகவா? என ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கூறியதாவது:-
என்னுடைய கருத்தின்படி, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா? அல்லது அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காகவா? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அவர்கள் இது பற்றி சிந்திக்கட்டும். ஆனால் மீடியாக்கள், உண்மையிலேயே தொகுதி மறுசீரமைப்பு பணிகள் தொடக்கப்பட்டுள்ளதா? என அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பும் தொடங்கப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனையும் தொடங்கப்படவில்லை. சட்டம் தொடர்பான வரைவு கூட இன்னும் செய்யப்படவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு சட்டம் வரைவு உருவாக்கும்போது, மத்திய அரசு செயல்முறைக்கு தயாராகும்போது, இது தொடர்பாக கேள்வி எழும்.
தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரையொருவர் நம்புவதும், அனைவரையும் அழைத்துச் செல்வதும் ஜனநாயகத்தின் சாராம்சம். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்றவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அருண் குமார் தெரிவித்துள்ளார்.
- லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
- பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் மை ஷோ செயலியில் புக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணலில் பிருத்விராஜ் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எம்புரான் திரைப்பட ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் பெரும்பாலான பணத்தை படத்தின் உருவாகத்திற்கு மட்டுமே செலவு செய்துள்ளோம். இப்படத்திற்கு மோகன்லால் சம்பளமாக ஒரு ரூபாய் கூட பெறவில்லை. மற்ற திரைப்படங்களைப் போல் 80 சதவீத பணத்தை படக்குழுவின் சம்பளத்திற்கும் 20 சதவீத பணத்தை ப்ரொடக்ஷன் செலவுகளில் ஈடுப்படும் திரைப்படம் இது இல்லை.
அதேப்போல் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுக்கோள் படத்தின் இறுதி வரை பாருங்கள். படத்தின் எண்ட் கார்ட் டைட்டிலுக்கு பிறகு பாகம் 3-க்கான ஒரு முன்னோட்டத்தை வைத்துள்ளோம்." என கூறியுள்ளார்






