யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

இதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப். சாப்டர் 2 படமும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரின் யாஷ் கையில் gun உடன் நடந்து வருகிறார். அவரை சுற்றி தீ எரிந்துக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக வெளியாக இருக்கிறது. படத்தின் கதாநாயகியாக நயன் தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com