என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது.
- சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
மும்பை:
மும்பை - நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும்.
இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
தற்போது இலகுரக வாகனங்களுக்கு கி.மீ.க்கு ரூ.1.73, வணிக இலகுரக வாகனங்களுக்கு ரூ.2.79, கனரக வாகனங்களுக்கு ரூ.5.85, 3 ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.6.83, கட்டுமான கனரக எந்திரங்களுக்கு ரூ.9.18, 7-க்கு மேற்பட்ட ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.11.07 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முறையே ரூ.2.06, ரூ.3.32, ரூ.6.97, ரூ.7.60, ரூ.10.93, ரூ.13.30 ஆக உயர்த்தப்பட்டது.
அதாவது நாக்பூர் - இகத்பூரி இடையே ரூ.1,080 ஆக இருந்த இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.1,290 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மினிபஸ் போன்ற இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.1,745-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 75 ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட 2 ஆக்சில் கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 655-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 750 ஆகவும், கனரக கட்டுமான எந்திரங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்து 740-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 830 ஆகவும், 7 ஆக்சில் அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 980-ல் இருந்து ரூ.8 ஆயிரத்து 315 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த சுங்க கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
- கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
- வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), 28, ஏப்ரல் 11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 10.10 மணிக்கு சேப்பாக்கம் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.
* வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும்.
* சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 12.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் இந்தியர்களான ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
- விராட் கோலி 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.
- ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டி காக் 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரகானே சிறப்பாக விளையாடினார் ரகானே, சுனில் நரைன் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். ரகானே அரைசதம் அடித்து 56 ரன்களில் வெளியேறினார். நரைன் 44 ரன்களில் வெளியேறினார் தொடர்ந்து ரிங்கு சிங் 12 ரன்கள் , ரசல் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர்.
ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, பில் சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். விராட் கோலி 59 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.
- பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் அமீர்கான்,
- நடிகர் அமீர்கான் தனது 60வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார்.
பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் அமீர்கான், கயாமத் சே கயாமத் தக் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து, பாசி, ராஜா இந்துஸ்தானி, இஷ்க் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து பாலிவுட்டின் முன்னணி ஸ்டார் நடிகராக மாறினார். இவர் நடித்த பிகே, லகான், தங்கல் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளின. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இந்த திரைப்படங்கள் கொண்டு சென்றது.
இந்நிலையில், நடிகர் அமீர்கான் தனது 60வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். அப்போது தனது காதலியை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் ரீதா தத்தா, கிரண் ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இவர்களை விவாகரத்து செய்துவிட்டார். அண்மையில் தான் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தனது மூன்றாவது காதலியான கெளரி ஸ்ப்ராட்டை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் " நான் முதல் மனைவியான ரீனா தத்தாவை விவாகரத்து செய்த போது கடும் மன அழுத்ததிற்கு சென்றேன். நான் வீட்டில் தனியாக இருந்தேன் சுமார் 1.5 வருடங்களுக்கு மிக அதிகமான அளவில் மது அருந்தினேன். என்னை அனைவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒரு மனிதனாக மட்டுமே தெரியும் ஆனால் நான் அந்த மன அழுத்தத்தில் ஒரு நாளைக்கு 1 பாட்டில் மதுவை அருந்தினேன் " என சமீபத்தில் நடந்த நேர் காணலில் கூறியுள்ளார்.
- கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.
- ரூ.10க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 மதிப்புள்ள சுவையான பிரிஞ்சி (வெஜிடபிள் பிரியாணி) ரூ.10க்கு வழங்கப்பட்டு வருகிறது.
தினமும் 120 முதல் 150 பேர் வரை இங்கு மதிய உணவு சாப்பிட்டு வருகிறார்கள். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் மதியம் 12.30 மணி முதல் 1:30 மணி வரை இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. லாப நோக்கம் இல்லாமல் மக்களின் வயிறு பசியைப் போக்குவதற்காக மட்டுமே இந்த உணவகம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

வேலை தேடும் இளைஞர்கள், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சினிமா உதவி இயக்குனர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் இந்த உணவகத்தில் தினசரி பசியாறி வருகிறார்கள். இந்த உணவகம் தொடங்கி இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மக்களுக்கு உணவு வழங்கும் இந்த சேவை தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது.
- அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
- இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58 வயது).
ஆஸ்தில்டர் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது இள வயது அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது தனது 22 ஆவது வயதில், 16 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
ஆஸ்தில்டர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்நாட்டில் கடும் கண்டனங்களை குவித்தது. இதனால் ஆஸ்தில்டர் வகித்து வந்த அமைச்சர் பதவிக்கே நெருக்கடி வந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் கிறிஸ்ட்ரூன், நேற்று முன் தினம் இரவு ஆஸ்தில்டரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமாவுக்கு பின் பேசிய அவர், "அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. இன்று இந்தப் பிரச்சினைகளை நான் நிச்சயமாக வித்தியாசமாகக் கையாண்டிருப்பேன். அப்போது அதற்கான முதிர்ச்சி என்னிடம் இல்லை" என்று கூறினார்.
இதற்கிடையே இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர், "இது மிகவும் தனிப்பட்ட விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த விஷயத்தில் நான் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.
- முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
- இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜரில் நாட்டில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 13 பேர் படுக்கையமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலுள்ள சந்தை மற்றும் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்தையடுத்து 3 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நைஜர், மாலி மற்றும் புர்கினா பசோ ஆகிய 3 நாடுகளும் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக அல்கொய்தா உள்ளிட்ட ஜிகாதி கிளர்ச்சிக் குழுக்களால் நடத்தப்படும் கிளர்ச்சியை ஒடுக்க போராடி வருகிறது.
- ரகானே அரைசதம் விளாசினர்.
- குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். 3-வது பந்தில் கேட்ச் கொடுத்தார். அதை சுயாஷ் சர்மா தவறவிட்டார்.
ஆனால் 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் 3 ஓவரில் கொல்கத்தா 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக ரன் குவித்தது.
4-வது ஓவரை ரஷிக் சலாம் வீசினார். இந்த ஓவரில் 16 ரன்கள் விளாசியது கொல்கத்தா. குருணால் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், யாஷ் தயால் வீசிய 6-வது ஓவரில் 20 ரன்களும் சேர்த்தது. இதனால் கொல்கத்தா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.
9-வது ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ரகானே 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் கொல்கத்தா 22 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய ரகானே 11ஆவது ஓவரின் 3 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் அய்யருடன் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். ரகானே விக்கெட் இழந்த பின்னர் கொல்கத்தா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரகுவன்ஷி ஒரு பக்கம் விக்கெட்டை காப்பாற்ற மறுமுனையில் வெங்கடேஷ் அய்யர் 7 பந்தில் 6 ரன்கள் எடுத்தும், ரிங்கு சிங் 10 பந்தில் 12 ரன்கள் எடுத்தும், ரசல் 3 பந்தில் 4 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா 15.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களே எடுத்திருந்தது.
7-வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் ராமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஓவர் (டெத் ஓவர்) என அழைக்கப்படும் கடைசி 4 ஓவரில் அதிரடியாக ஆட கொல்கத்தா அணியில் வீரர்கள் இல்லாமல் போனது.

லிவிங்ஸ்டன் 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 4 ரன்களே கிடைத்தது. 18-வது ஓவரை ஹெசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ரகுவன்ஷி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் 10 ரன்கள் கிடைத்தது.
19-வது ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். அவர் 22 பநதில் 30 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா 18.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க 4 ரன்கள்தான் கிடைத்தது.
கடைசி ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட் எடுத்து 5 ரன்கள் மட்டுமே கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க 174 ரன்கள் அடித்துள்ளது. கடைசி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடித்தது.
ஆர்சிபி அணி சார்பில் ஹேசில்வுட் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். குருணால் பாண்ட்யா 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். யாஷ் தயால், ரஷிக் சலாம், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி விளையாடி வருகிறது.
- மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார்.
அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மம்மூட்டி பசூக்கா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தீனோ டெனிஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர்களுடன் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹகிம், திவ்யா பிள்ளை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை சரிகமா, யூட்லீ பிலிம்ஸ் மற்றும் தியேட்டர் ஆஃப் டிரீம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் இசையை மிதுன் முகுந்தன் மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரெய்லரை படக்குழு விரைவில் வெளியிடப்போவதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம் உடன் வருகிறது.
- கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது
பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ஷே தனது ஐந்தாவது தலைமுறை மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கிராஸ் (Cross) இ-பைக் சைக்கிள் மொத்தம் நான்கு வகைகளில் வருகிறது.
ஆரம்ப நிலை மாடலான, கிராஸ் ( £4,994), கிராஸ் பெர்பார்மன்ஸ் (£7,471), கிராஸ் பெர்பார்மன்ஸ் EXC மற்றும் பிரீமியம் மாடலான ஸ்போர்ட் ( £8309) விலையுடன் முறையே அறிமுகமாகியுள்ளன.
4 கிராஸ் மாடல்களும் மிகவும் ஒத்தவையாகவே உள்ளன. அனைத்தும் ஒரே மாதிரியான ஷிமானோ (SHIMANO) EP801 மோட்டாரைக் கொண்டுள்ளன. 62lb அடி முறுக்குவிசை, நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம், 12-ஸ்பீட் கியர்ஷிஃப்ட், சைக்கிளின் முன்னாள் மற்றும் பின்னால் சூப்பர்-ப்ரைட் விளக்குகள் மற்றும் இலகுரக கார்பன் வீல் செட்கள் இடம்பெற்றுள்ளன.

கிராஸ் அடிப்படை மாடலில் டிரெயில் டிஸ்க் பிரேக்குகள், ஒரு சிறிய 504Wh பேட்டரி மற்றும் ஒரு டெலஸ்கோபிக் சீட் போஸ்ட் ஆகியவை உள்ளன. கிராஸ் பெர்பார்மென்ஸ் மாடலில் நான்கு-பிஸ்டன் மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது
பிரீமியம் மாடலான ஸ்போர்ட் வேரியண்டில் கிராஸ் பெர்பார்மென்ஸ் அம்சங்களுடன் சேர்ந்து, 21.6 கிலோகிராமே எடை கொண்ட அல்ட்ரா-லைட் கார்பன் பிரேம் இடம்பெற்றுள்ளது.

இந்த பிரீமியம் ஸ்போர்ட் வேரியண்டில் உள்ள அதிக முறுக்கு-எதிர்ப்பு கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் 120 மில்லிமீட்டர் டிராவலுடன் கூடிய சூப்பர் ஃபேன்ஸி சஸ்பென்ஷன் ஃபோர்க் உள்ளது. பயணிக்கும்போது கை மற்றும் கால் வலியை குறைக்கும் வடிவமைப்புடன் ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
- தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
- இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி', 'ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்து இவரது இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் அண்மையில் வெளியாகி கலவையான விமரசனத்தை பெற்றது.
இதனை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனிடையே இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திரைப்படத்தின் சில காட்சிகள் இன்னும் படப்பிடிப்பு முடியாததால திரைப்படம் அந்த தேதியில் வெளியாகாது எனவும் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம் என தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் சமீபத்தில் கூறினார்.
மேலும் ஆகாஷ் பாஸ்கரன் அடுத்தது லப்பர் பந்து இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக கூறியுள்ளார். சமீப காலமாக தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது அதைக்குறித்து கேள்வி எழுப்பிய போது அந்த செய்தி உண்மை தான் ஆனால் எல்லாம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது அதனால் எதுவும் சொல்ல முடியாது என கூறினார்.
அப்படி தனுஷ் இயக்கத்தில் அஜித் நடித்தால் அப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு விண்ணை பிளக்கும் என்பது உறுதி.






