என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
    • இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.

    இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது கேள்விக்குள்ளாகி உள்ளது.

    இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஆலோசிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.

    அகமதாபாத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பி.சி.சி.ஐ அதிகாரிகள், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.

    • மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.
    • ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது.

    சீனியர் வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2027-ல் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியதாவது:-

    ரோகித் சர்மா, விராட் கோலி உலகத் தரத்திலான வீரர்கள் ஆவார்கள். 2027-ல் நடைபெறும் உலக கோப்பையில் விளையாடுவதற்காக முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு கடின உழைப்பை வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர். மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.

    ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. ரோகித் , கோலி முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றார்.

    • இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
    • முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் அடித்து கலக்கினர்.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் டிசம்பர் 10-ம் தேதி வரை 13 நாள் ஹாக்கி போட்டிகள் பெறுகிறது.

    இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் முறையாக 24 அணிகள் கலந்துகொண்டன. இதுவரை 16 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் உள்ளது. சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.

    இந்நிலையில், சென்னையில் நேற்று ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் போட்டியில் சிலியை எதிர்கொண்டது. அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் அடித்து கலக்கினர்.

    இறுதியில், இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, துருக்கியின் நல்ஜியான் இன்சி-பென்கிசு எர்டின் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

    • மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
    • மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருவதாக தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்:

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில், அடுத்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ரக்ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-15, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 21-13, 21-19 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையான லோ சின் யானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • மகளிர் பிக்பாஷ் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின.
    • இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    மகளிர் பிக்பாஷ் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. போட்டியின் போது மழை பெய்ததால் ஆட்டம் 5 ஓவர் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்டைக்கர்ஸ் அனி 5 ஓவரில் 46 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தண்டர் அணி 2.5 ஓவரில் 43 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 13 பந்தில் வெறும் 3 ரன்களே தேவைப்பட்டது.

    அப்போது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் ஆட்டத்தை நடுவர்கள் நிறுத்தி வைத்தனர்.

    இருப்பினும் களத்தில் இருந்த இரு நடுவர்களும் போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர். இதனை சற்று எதிர்பாரத தண்டர் அணி வீராங்கனைகள் கோபத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

    மேலும் வெளியில் இருந்த மற்ற வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலரும் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்தனர். இந்த முடிவை நடுவர்கள் வேண்டும் என்றே அறிவித்தது வெளிப்படையாக தெரிந்தது.  

    • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது.
    • ஆண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.

    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் 21-14, 21-4 என்ற செட் கணக்கில் கிடாம்பி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மஞ்சுநாத்- மன்ராஜ் ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் மஞ்சுநாத் 21-18, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

    • சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் இன்று மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 72 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.'

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 15 ஓவரில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. இதனால் கடைசி 5 ஓவரில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி அணி விளையாடியது.

    பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதனை ஹிம்மாட் சிங் வேகமாக சுற்றினார். அந்த பந்து பவுண்டரி லைனில் நின்ற ஷாருக்கானிடம் சென்றது. அதனை பார்த்த அவர் உடனே முன்னாடி வந்தார். ஆனால் பந்து பின் நோக்கி செல்வதை அறிந்து மீண்டும் பின்னாடி போய் பந்தை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து அவரின் கையில் பட்டு சிக்சர் ஆனது.

    இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2 போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    • அரியானா- பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் 207 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.
    • இதனால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது.

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அங்கிட் குமார் தலைமையிலான அரியானா அணியும் அபிஷேக் சர்மா தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த ஓவரை அன்ஷுல் காம்போஜ் வீசினார். முதல் பந்தில் 1 ரன் விட்டுக்கொடுத்த அவர் அடுத்த 2 பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அபிஷேக் சர்மா, சன்வீர் சிங் ஆகியோர் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்கள். இதனால் அரியானா அணிக்கு 2 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அரியானா அணி முதல் பந்திலேயே அடித்து வெற்றி பெற்றது.

    சூப்பர் ஓவரில் மிரட்டிய அன்ஷுல் காம்போஜ் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா - இலங்கை அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இந்த தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    அதன்படி இந்த டி20 தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 2 போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

    முதல் டி20 டிசம்பர் 21-ந் தேதியும் 2-வது டி20 போட்டி 23-ந் தேதியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 3,4,5-வது டி20 போட்டிகள் முறையே 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.

    • ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
    • விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு எம்எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி சாதனை படைத்தது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இதற்காக ராஞ்சி வந்த இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம் எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

    அதற்காக 3 பேரும் நேற்று இரவு தோனி வீட்டுக்கு சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    3 பேரும் தோனி வீட்டிற்குள் சென்றது மற்றும் வெளி வந்த புகைப்படம் மற்றும் வீடியோ மட்டுமே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது குறித்தும் அவர்கள் விருந்தில் என்ன சாப்பிட்டார்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் தோனி, கோலி, ரிஷப் பண்ட் ஆகிய 3 பேரும் சாப்பிடுவது போன்ற AI புகைப்படத்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்திற்கு வெறுப்பவர்கள் மட்டுமே இதை AI என கூறுவார்கள் எனவும் தலைப்பிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    ×