என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வீடியோ: 3 ரன் அடித்தால் வெற்றி: மழை பெய்யாத போதிலும் கைவிடப்பட்ட ஆட்டம்: நடுவர்களின் செயலால் கடுப்பான வீராங்கனை
- மகளிர் பிக்பாஷ் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின.
- இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மகளிர் பிக்பாஷ் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. போட்டியின் போது மழை பெய்ததால் ஆட்டம் 5 ஓவர் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்டைக்கர்ஸ் அனி 5 ஓவரில் 46 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தண்டர் அணி 2.5 ஓவரில் 43 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 13 பந்தில் வெறும் 3 ரன்களே தேவைப்பட்டது.
அப்போது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் ஆட்டத்தை நடுவர்கள் நிறுத்தி வைத்தனர்.
இருப்பினும் களத்தில் இருந்த இரு நடுவர்களும் போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர். இதனை சற்று எதிர்பாரத தண்டர் அணி வீராங்கனைகள் கோபத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.
மேலும் வெளியில் இருந்த மற்ற வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலரும் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்தனர். இந்த முடிவை நடுவர்கள் வேண்டும் என்றே அறிவித்தது வெளிப்படையாக தெரிந்தது.






