என் மலர்
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: சிலியை 7-0 என வீழ்த்தியது இந்தியா
- இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
- முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் அடித்து கலக்கினர்.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் டிசம்பர் 10-ம் தேதி வரை 13 நாள் ஹாக்கி போட்டிகள் பெறுகிறது.
இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் முறையாக 24 அணிகள் கலந்துகொண்டன. இதுவரை 16 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் உள்ளது. சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.
இந்நிலையில், சென்னையில் நேற்று ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் போட்டியில் சிலியை எதிர்கொண்டது. அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் அடித்து கலக்கினர்.
இறுதியில், இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது.






