என் மலர்
விளையாட்டு

2027 உலக கோப்பையில் ரோகித், கோலி ஆட வாய்ப்பு- மார்னே மோர்கல்
- மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.
- ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது.
சீனியர் வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள்.
இந்த நிலையில் 2027-ல் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியதாவது:-
ரோகித் சர்மா, விராட் கோலி உலகத் தரத்திலான வீரர்கள் ஆவார்கள். 2027-ல் நடைபெறும் உலக கோப்பையில் விளையாடுவதற்காக முழு உடல்தகுதியுடன் இருப்பதற்கு கடின உழைப்பை வழங்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அணிக்காக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர். மிகப்பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.
ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது. ரோகித் , கோலி முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு இருக்கிறது என்றார்.






