என் மலர்
விளையாட்டு
- U19 ஆசிய கோப்பை தொடர் வருகிற டிசம்பர் 12-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.
- இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணி டிசம்பர் 14-ந் தேதி மோதுகிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இணைந்து 2025-ம் ஆண்டுக்கான U19 ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதாக அறிவித்துள்ளன.
U19 ஆசிய கோப்பை தொடர் வருகிற டிசம்பர் 12-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணி டிசம்பர் 14-ந் தேதி மோதுகிறது.
8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 3 அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக CSK வீரர் ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அணியில் வைபவ் சூரியவம்சியும் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணி:-
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (கீப்பர்), ஹர்வன்ஷ் சிங், யுவராஜ் கோஹில், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், நமன் புஷ்பக், டி. தீபேஷ், ஹெனில் மோகன்.
- ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ந் தேதி தொடங்கி அடுத்த நாளே முடிவடைந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக நவம்பர் 29-ந் தேதி இங்கிலாந்து அணி 2 நாள் பயிற்சி போட்டியில் பிரதமர் லெவன் அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் இடம் பெறவில்லை. தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வந்த இருவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் இந்த போட்டியிலும் இடம்பெறவில்லை.
2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:-
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லயன், மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடக்கிறது.
- இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ராஞ்சிக்கு வந்தடைந்தனர்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிந்தது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெற்ற விராட் கோலி, ரிஷப் பண்ட், ருதுராஜ் ஆகியோருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே வீரருமான எம் எஸ் தோனி தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.
அதற்காக 3 பேரும் நேற்று இரவு தோனி வீட்டுக்கு சென்றனர். விருந்துக்கு பின்னர் தோனியே தனது காரை ஓட்டிச் சென்று விராட் கோலியை ஹோட்டலில் இறக்கிவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மும்பை:
19-வது ஐ.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியை வின்பனை செய்ய இருப்பதை அதன் உரிமையாளரான டியாஜியோ உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் பெங்களூரு அணியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் 65 சதவீத பங்குகளை ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுமம் வைத்துள்ளது.
இது தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் சகோதரரான ஹர்ஷா கோயங்கா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியை தொடர்ந்து மேலும் ஒரு அணி விற்பனைக்கு வர உள்ளதாக கேள்விப்பட்டேன். அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆகும். எனவே விற்பனைக்கு 2 அணிகள் உள்ளன. அதை வாங்குவது புனே, அகமதாபாத், மும்பை, பெங்களூரு அல்லது அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? என்று தெரிவித்து உள்ளார்.
ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் விற்பனை தொடர்பாக அந்த அணி நிர்வாகம் எந்த அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
- 2 முறை சாம்பியனான இந்திய அணி (2001,2016 ) ‘பி’ பிரிவில் உள்ளது.
- சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.
சென்னை:
14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி முதல் முறையாக தமிழ் நாட்டில் நடத்தப்படுகிறது. சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் இன்று முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை 13 நாட்கள் ஹாக்கி போட்டி கள் கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் முறையாக 24 அணிகள் கலந்து கொண்டன. இதுவரை 16 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
2 முறை சாம்பியனான இந்திய அணி (2001,2016 ) 'பி' பிரிவில் உள்ளது. சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.
7 முறை மற்றும் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, கனடா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து (குரூப் ஏ) 2 தடவை கோப்பையை வென்ற அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா (சி), ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா (டி) நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா (இ), 1997-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்கொரியா, வங்காளதேசம் (எப்) ஆகிய நாடுகள் மற்ற பிரிவுகளில் இடம் பெற்று உள்ளன.
தொடக்க நாளான இன்று 8 ஆட்டங்கள் நடக்கிறது. மதுரையில் இன்று காலை நடந்த தொடக்க ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள ஜெர்மனி-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் 19-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடித்தது. இந்த கோலை ஜஸ்டஸ் வார்வெக் அடித்தார். பதில் கோல் அடிக்க தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடினார்கள்.
ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் போட்டியில் சிலியை எதிர்கொள்கிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்த ஆட்டம் சென்னையில் இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-
கோல்கீப்பர்கள்: பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங்.
பின்களம்: ரோகித் (கேப்டன்) அமீர் அலி, அன்மோல் எக்கா, தலிம் பிரியோபார்தா, சுனில் பாலக்ஷப்பா பென்னுர், ஷர்தானந்த் திவாரி.
நடுகளம்: அங்கித் பால், அத்ரோகித் எக்கா, தோனவ் ஜாம் இங்கலெம்பா லுவாங், மன்மீத் சிங், ரோசன் குஜூர், குர்ஜோத் சிங்.
முன்களம்: சவுரவ் ஆனந்த் குஷ்வாஹா, அர்ஷ்தீப் சிங், அஜீத் யாதவ், தில்ராஜ் சிங்.
உலக தரவரிசையில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. தென்அமெரிக்க நாடான சிலி 18-வது இடத்தில் உள்ளது.
- முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 181 ரன்களை குவித்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவரில் 142 ரன்களை மட்டும் எடுத்தது.
சட்டோகிராம்:
வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்களை குவித்தது. ஹாரி டெக்டர் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 69 ரன்கள் எடுத்தார். டிம் டெக்டர் 19 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.
வங்கதேசம் சார்பில் டம்ஜிம் ஹசன் 2 விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் முன்னணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தவ்ஹித் கிரிடோய் தனி ஆளாகப் போராடினார். அவர் 50 பந்தில் 83 ரன் குவித்தார்.
இறுதியில், வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்களை மட்டும் எடுத்தது. இதன்மூலம் 39 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் 1-0 என அயர்லாந்து முன்னிலை வகிக்கிறது.
அயர்லாந்து சார்பில் மேத்யூ ஹப்ரைஸ் 4 விக்கெட்டும், பேரி மெக்கர்தி 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சக நாட்டின் ஜெனித் அபிகைல்-லிதிகா ஸ்ரீவஸ்தவா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-17, 21-12 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன.
- இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.
புதுடெல்லி:
இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை முதல் சீசன் நடைபெற்றது.
இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.
இந்நிலையில், பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்த அவர், கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு சாதனை, கடின உழைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு. அணியின் எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 178 ரன்களை மட்டுமே எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஷ்ரா அதிரடியாக ஆடி 48 பந்தில் 76 ரன்கள் குவித்தார். குசால் மெண்டிஸ் 23 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் சல்மான் ஆகா தனியாகப் போராடி அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இலங்கை அணி தான் ஆடிய 4 லீக் போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் நடந்து வருகிறது.
- 2வது தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
செங்டு:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவின் செங்டு நகரில் நவம்பர் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல்,
சீனாவின் யுங்சாகேட் பு உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சீன வீரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாட்டு வீரர் சனீத் தயானந்த் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-6, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 21-16, 10-21, 21-12 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான ராகௌல் பரத்வாஜை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.
- இந்தியாவின் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் எடுத்துள்ளது.
- நியூசிலாந்தின் அமெலியா கெரை ரூ.3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது.
புதுடெல்லி:
4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீராங்கனைகள் விவரம் வருமாறு:
தீப்தி சர்மா: ரூ.3.20 கோடி- உபி வாரியர்ஸ்
அமெலியா கெர்: ரூ.3 கோடி-மும்பை இந்தியன்ஸ்
ஷிகா பாண்டே: ரூ.2.40 கோடி-உபி வாரியர்ஸ்
சோபி டிவைன்: ரூ.2 கோடி- குஜராத் ஜெயண்ட்ஸ்
மெக் லானிங்: ரூ.1.9 கோடி - உபி வாரியர்ஸ்






