என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 178 ரன்களை மட்டுமே எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஷ்ரா அதிரடியாக ஆடி 48 பந்தில் 76 ரன்கள் குவித்தார். குசால் மெண்டிஸ் 23 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் சல்மான் ஆகா தனியாகப் போராடி அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இலங்கை அணி தான் ஆடிய 4 லீக் போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது.






