என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முதல் டி20 போட்டி: வங்கதேசத்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து
- முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 181 ரன்களை குவித்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவரில் 142 ரன்களை மட்டும் எடுத்தது.
சட்டோகிராம்:
வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்களை குவித்தது. ஹாரி டெக்டர் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 69 ரன்கள் எடுத்தார். டிம் டெக்டர் 19 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.
வங்கதேசம் சார்பில் டம்ஜிம் ஹசன் 2 விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் முன்னணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. தவ்ஹித் கிரிடோய் தனி ஆளாகப் போராடினார். அவர் 50 பந்தில் 83 ரன் குவித்தார்.
இறுதியில், வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்களை மட்டும் எடுத்தது. இதன்மூலம் 39 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் 1-0 என அயர்லாந்து முன்னிலை வகிக்கிறது.
அயர்லாந்து சார்பில் மேத்யூ ஹப்ரைஸ் 4 விக்கெட்டும், பேரி மெக்கர்தி 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






