search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC World Cup"

    • தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    • கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையிலான போலீசார் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    இதில் இந்திய அணி வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி பாதுகாப்பை போலீசார் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

    தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையிலான போலீசார் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனால் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டதுடன் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

    • உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 லீக் போட்டிக்கான தேதியை மாற்றி புதிய அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    அக்டோபர் 15ம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து போட்டி அக்டோபர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

    ஐதராபாத்தில் இலங்கை- பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 12 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. லக்னோவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு பதில் 12ம் தேதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதேபோல் சென்னையில் அக்டோபர் 14ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வங்காளதேசம்-நியூசிலாந்து ஆட்டம் அக்டோபர் 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுளள்து. இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

    லீக் சுற்றின் கடைசியில் நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி காலை 10:30 மணிக்கு ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணி புனேவில் மோதுகிறது. பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் விளையாடுகின்றன.

    நெதர்லாந்திற்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் ஆட்டம் 11ம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்போட்டி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. துவக்க ஆட்டம் மற்றும் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 

    • இந்திய அணியை வழிநடத்துவதில் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக உள்ளார்.
    • இந்தியாவின் வரலாற்று வெற்றியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நினைவு கூர்ந்துள்ளார்.

    இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆடவருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான லோகோவை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    2011ம் ஆண்டு இதே நாளில் டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது. உலகக் கோபபையை 12 ஆண்டு ஆனதை கொண்டாடும் வகையில் ஐசிசி இன்று லோகோவை வெளியிட்டிருக்கிறது.

    லோகோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவதில் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக உள்ளார். கிரிக்கெட்டில் தொடர்புடைய அனைவருக்கும் இந்த உலக கோப்பை சிறப்பு வாய்ந்த போட்டி என கூறிய ரோகித், கோப்பையை வெல்வதற்கு அடுத்த சில மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

    2011-ல் கோப்பை வென்ற இந்தியாவின் வரலாற்று வெற்றியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நினைவு கூர்ந்துள்ளார். அத்துடன், 2023ல் நடக்கும் உலக கோப்பை தொடரை நடத்துவதை பிசிசிஐ ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

    இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் காம்பிர் கணித்துள்ளார்.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது.

    இந்த நிலையில் உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்று இருந்தவருமான கவுதம் காம்பிர் கணித்து உள்ளார்.

    இது தொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் காம்பிர் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையையும் ஆஸ்திரேலியாவே வெல்ல வாய்ப்பு உள்ளது. அந்த அணி நிச்சயமாக இறுதிப் போட்டிக்கு நுழையும். உலகக்கோப்பையை வெல்ல அடுத்து வாய்ப்பு உள்ள அணிகளில் இங்கிலாந்து, இந்தியா உள்ளன.

    இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது. ரோகித், கோலியின் ஆட்டத்தை பொறுத்து மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும். பந்து வீச்சில் பும்ரா துருப்புச் சீட்டாக இருப்பார்.

    இந்த உலகக்கோப்பை போட்டி முறை சுவாரசியமானது. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றது.

    உலகக்கோப்பையை வெல்ல 2-வது வாய்ப்பாக இங்கிலாந்தை நான் கூறுவதற்கு சொந்த மண்ணில் விளையாடுவதால் அல்ல. அந்த அணியில் எல்லா வரிசையிலும் ஆடக்கூடிய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது.



    2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நான் சதத்தை தவறவிட்டதாக வருத்தப்படவில்லை. எங்களது ஒரே இலக்கு உலகக்கோப்பையை வெல்வதே. எனது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். 97 ரன் என்பது அணிக்கு முக்கியமானது. 3 ரன்னில் சதத்தை நழுவ விட்டதற்காக நான் வருத்தம் அடைந்தது கிடையாது.

    நானும் டோனியும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 109 ரன் எடுத்தது முக்கியமானது. இறுதிப் போட்டியில் நான் எந்தவித நெருக்கடியுடனும் ஆடவில்லை.

    இவ்வாறு காம்பீர் கூறினார்.
    ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வால் உலகக் கோப்பைக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது என தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன தென்ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் ஏபி டி வில்லியர்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தென்ஆப்பிரிக்கா நினைத்தது. இந்நிலையில் அவரது முடிவு அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளரான ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பு ஏபி டி வில்லியர்ஸ் என்னிடம் பேசினார். அவரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அவருடன் நெருங்கிய நபருடன் மட்டுமே முடிவு குறித்து பேசியுள்ளார்.



    அவர் உலகின் தலைசிறந்த வீரர். உலகக் கோப்பையில் அவரால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். இது அவருக்குத் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அவர் விளையாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் நாங்கள் உலகக்கோப்பைக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் இதற்கான காலஅவகாசம் எங்களுக்கு உள்ளது. ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு நாட்டிற்கும், உலக கிரிக்கெட்டிற்கும் பெரிய ஏமாற்றம்’’ என்றார்.
    ×