கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பான பாதுகாப்பு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் போலீசாருக்கு பாராட்டு

தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையிலான போலீசார் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பான பாதுகாப்பு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் போலீசாருக்கு பாராட்டு
Published on

சென்னை:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் இந்திய அணி வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி பாதுகாப்பை போலீசார் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.

தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில் கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையிலான போலீசார் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனால் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டதுடன் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com