search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AB de Villiers Retirement"

    ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வால் உலகக் கோப்பைக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியுள்ளது என தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன தென்ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் ஏபி டி வில்லியர்ஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தென்ஆப்பிரிக்கா நினைத்தது. இந்நிலையில் அவரது முடிவு அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளரான ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பு ஏபி டி வில்லியர்ஸ் என்னிடம் பேசினார். அவரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அவருடன் நெருங்கிய நபருடன் மட்டுமே முடிவு குறித்து பேசியுள்ளார்.



    அவர் உலகின் தலைசிறந்த வீரர். உலகக் கோப்பையில் அவரால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். இது அவருக்குத் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அவர் விளையாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் நாங்கள் உலகக்கோப்பைக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் இதற்கான காலஅவகாசம் எங்களுக்கு உள்ளது. ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு நாட்டிற்கும், உலக கிரிக்கெட்டிற்கும் பெரிய ஏமாற்றம்’’ என்றார்.
    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தற்காக ஆதரவும், அன்பும் தெரிவித்த ஒவ்வொருவருக்கும் ஏபி டி வில்லியர்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். #ABD
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர், தனது அபார பேட்டிங்கால் உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். கிரிக்கெட்டைச் சாராத ஷாட் அடிப்பதில் வல்லவர். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை அடிக்கும் திறமை பெற்றிருந்ததால் ரசிகர்களால் அவரை 360 டிகிரி என செல்லமாக அழைத்தனர்.

    ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த டி வில்லியர்ஸ், நேற்று முன்தினம் திடீரென தான் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இவரது அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டி வில்லியர்ஸ்க்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.



    தன்மீது பாசம் வைத்து ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் டி வில்லியர்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஒவ்வொருவருக்கும் நன்றி, குறிப்பாக முன்னாள் இன்னாள் வீரர்களுக்கும், எனது அணியின் சக வீரர்களுக்கும், எதிரணி வீரர்களுக்கும். அவர்களுடைய சிறந்த வாழ்த்திற்கும், என்னைப் பற்றி புரிந்து கொண்டதற்கும்.

    கடந்த இரண்டு மூன்று நாட்கள் கடினமானதாகவும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருந்தது. ஆனால், என்மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பாலும், ஆதராவாலும் அதில் இருந்து திரும்பினேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ×