என் மலர்
நீங்கள் தேடியது "Sri Lanka India Women's Cricket Series"
- இந்தியா - இலங்கை அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
- இந்த தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இலங்கை மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த டி20 தொடர் டிசம்பர் 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. முதல் 2 போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் 3 போட்டிகள் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.
முதல் டி20 டிசம்பர் 21-ந் தேதியும் 2-வது டி20 போட்டி 23-ந் தேதியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 3,4,5-வது டி20 போட்டிகள் முறையே 26, 28, 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.
- இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
- இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. கொழும்பு, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதற்காக ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இதன்படி இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று தொடங்குகிறது. இலங்கையில் உள்ள தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.






