என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானாவில் ரெயிலில் மாட்டுக்கறியுடன் சென்ற வாலிபர் அடித்துக்கொலை
Byமாலை மலர்24 Jun 2017 7:52 AM GMT (Updated: 24 Jun 2017 7:52 AM GMT)
அரியானாவில் ரெயிலில் மாட்டுக்கறியுடன் சென்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லப்கார்:
அரியானா மாநிலம் பல்லப்கார் அருகே உள்ள கண்டோவா கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஜூனைத், ஹசிப், ஷாகிர் ஆகியோர் டெல்லி சர்தார் பஜாரில் ரம்ஜானையொட்டி பொருள்கள் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு லோக்கல் ரெயிலில் சென்றனர்.
ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சகோதரர்கள் மூவரும் முண்டியடித்துச் சென்று இடம் பிடித்தனர். அப்போது அவர்களுக்கும் மற்ற பயணிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. சகோதரர்கள் தங்களுடன் ஒரு பையில் ரம்ஜான் பொருள் மற்றும் உணவு எடுத்துச்சென்று இருந்ததால் மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தது.
அவர்கள் பையில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி சகோதரர்களை 20-க்கும் மேற்பட்ட கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியது. கத்தியாலும் குத்தினார்கள். இதில் ஜூனைத் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
மற்ற2 சகோதரர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் வந்து உடலை மீட்டனர். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தும் ரெயில்வே போலீசார் சரியான முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும், தகராறு ஏற்பட்ட போது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும் போது, இது கோஷ்டி மோதலால் ஏற்பட்ட தாக்குதல். இதில் ஒருவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார், மற்றவர்களை தேடி வருகிறோம் என்றனர்.

Next Story
×